Home
Gadgets

ஒரே சார்ஜில் 54 மணி நேர பேட்டரி.. ரூ.1,799 பட்ஜெட் புது OPPO இயர்பட்ஸ்.. லோவ் லேட்டன்சி மோட்.. எந்த மாடல்?

ஓப்போ நிறுவனத்தின் ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ (OPPO Enco Buds3 Pro) இயர்பட்ஸ் மாடல் இந்திய மார்கெட்டில வெளியாகி இருக்கிறது. ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் 54 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கும்படியான பேட்டரி கிடைக்கிறது. ஏஎஸ்ஏபி சார்ஜிங், கேமிங் லோவ் லேட்டன்சி போன்ற பக்கா பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஓப்போ பிரியர்களுக்கு இன்று குஷியான நாளாக இருக்கிறது. ஏனென்றால், இந்தியாவின் முதல் கூலிங் ஃபேன் கொண்ட மாடல்களாக ஓப்போ கே13 டர்போ 5ஜி (OPPO K13 Pro 5G) மற்றும் ஓப்போ கே13 டர்போ ப்ரோ 5ஜி (OPPO K13 Turbo Pro 5G) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகி இருக்கின்றன. அதோடு டபுள் ட்ரீட்டாக ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ களமிறங்கி இருக்கிறது.

பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், டைட்டானியம் கோட்டெட் டைனாமிக் டிரைவர் மற்றும் ஹைப்பர் டியூரபிள் பேட்டரியுடன் இந்த இயர்பட்ஸ் கிடைக்கிறது. IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. இந்த டிசைனுடன் கிளேஸ் ஒயிட் (Glaze White) மற்றும் கிராஃபைட் கிரே (Graphite Grey) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.

ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ அம்சங்கள் (OPPO Enco Buds3 Pro Specifications): இந்த ஓப்போ மாடலின் பேட்டரி பேக்கப் பட்டையை கிளப்புகிறது. ஏனென்றால், ஒரு முறை ஃபுல் சார்ஜ் செய்தால் தொடர்ந்து 54 மணி நேரங்களுக்கு பிளேபேக் கொடுக்கிறது. இதற்கு ஏற்ப சார்ஜிங் கேஸில் 560mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. அதேபோல 58mAh பேட்டரி இயர்பட்களில் கிடைக்கிறது.

ஒரே சார்ஜில் 54 மணி நேர பேட்டரி.. ரூ.1799 பட்ஜெட் புது OPPO இயர்பட்ஸ்!

இந்த இயர்பட்கள் மூலம் மட்டுமே 12 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். ஆகவே, இது அதிக பேட்டரி பேக்கப் விரும்பும் மியூசிக் பிரியர்களுக்கு பக்கா ஆப்ஷனாக இருக்கும். இதுபோக வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 4 மணி நேரங்களுக்கு பேக்கப் கொடுக்கும்படி ஏஎஸ்ஏபி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. சார்ஜிங் கேஸில் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் வருகிறது.

அதாவது, சார்ஜிங் கேஸில் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 8 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடலுக்கு டைப்-சி சார்ஜிங் போர்ட் கிடைக்கிறது. டீப் மற்றும் பேஸ் பிரியர்களுக்கு ஏற்ற ஆடியோ அவுட் கொடுக்கும்படி 12.4 எம்எம் எக்ஸ்ட்ரா லார்ஜ் டைட்டானியம் டிரைவர்கள் கிடைக்கின்றன. ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கனெக்டிவிட்டி கொடுக்கிறது.

மேலும், கூகுள் ஃபாஸ்ட் பேர் (Google Fast Pair) மற்றும் டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி கிடைக்கிறது. இந்த ஓப்போ என்கோ பட்ஸ்3 ப்ரோ மாடலில் எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) கோடெக் சப்போர்ட் கிடைக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான 47ms அல்ட்ரா லோவ் லேட்டன்சி மோட் (Ultra Low Latency Mode) கிடைக்கிறது. IP55 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது.

இந்த இயர்பட்களில் டபுள் டேப் கேமரா கன்ட்ரோல் கிடைக்கிறது. அதேபோல வால்யூம் கன்ட்ரோல் மற்றும் கால் கன்ட்ரோல்கள் கிடைக்கின்றன. இவ்வளவு பீச்சர்களுடன் ரூ. 1,799 விலைக்கு அறிமுகமாகி இருக்கிறது. ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ ஸ்டோர்களில் ஆர்டருக்கு கிடைக்க இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OPPO Enco Buds3 Pro 54 Hours Playback Launched India Sale From August 27 Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X