பெஸ்ட் இயர்பட்ஸ் வேணுமா?- 3 ஆடியோ ஆதரவுடன் அறிமுகமான Enco Buds2 உங்களுக்கு தான்!

|

ஒப்போ நிறுவனம் OPPO Enco Buds2 இயர்பட்ஸ்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் டைட்டானியம் டயாபிராம் கோட்டிங்கை கொண்டிருக்கிறது.

சீரான ஒலி ஆதரவை வழங்குவதற்கான பல்வேறு பிரத்யேக அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ்களின் விலை மற்றும் அம்சங்களை பார்க்கலாம்.

பட்ஜெட் விலையில் இயர்பட்ஸ்கள்

பட்ஜெட் விலையில் இயர்பட்ஸ்கள்

Oppo இந்தியாவில் Oppo Enco Buds2 என்ற பெயரில் தனது பட்ஜெட் இயர்பட்ஸ்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒப்போ அறிமுகம் செய்துள்ள இயர்பட்ஸ்களானது ஆகஸ்ட் 31 முதல் ஒப்போ ஸ்டோர் மற்றும் பிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

இந்த இயர்பட்ஸ்கள் விலை ரூ.1,799 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

28 மணிநேரம் பேக் அப் ஆயுள்

28 மணிநேரம் பேக் அப் ஆயுள்

Oppo Enco Buds2 ஆனது Oppo Store மற்றும் Flipkart தளத்தில் ஒற்றை ப்ளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கும். புதிய இயர்பட்ஸ்களானது 10 மிமீ டைட்டானைஸ்டு டிரைவருடன் வெளியாகி இருக்கிறது.

ஒப்போ என்கோ பட்ஸ்2 ஆனது 28 மணிநேரம் வரை பேக் அப் ஆயுளை வழங்கும் என நிறுவனம் குறிப்பிடுகிறது.

மூன்று வகையான அமைப்பு ஆதரவுகள்

மூன்று வகையான அமைப்பு ஆதரவுகள்

புதிய TWS Buds2 ஆனது Dolby Atmos உடனான என்கோ லைவ் ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்ட்களை கொண்டிருக்கும் என ஒப்போ குறிப்பிட்டுள்ளது.

இதில் மூன்று வகையான அமைப்புகள் உள்ளன. அசல் ஒலி (Original Sound), பேஸ் பூஸ்ட் (Bass Boost) மற்றும் தெளிவான குரல் (Clear Vocals) போன்ற ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

டைட்டானியம் டயபிராம் கோட்டிங்

டைட்டானியம் டயபிராம் கோட்டிங்

TWS ஆனது IPX4-மதிப்பீட்டை கொண்டிருக்கிறது. இதன்மூலம் உடற்பயிற்சிகளின் போது வியர்வை பட்டுவிடுமோ என் கவலைப்பட தேவையில்லை. Oppo Enco Buds2 ஆனது டைட்டானியம் டயபிராம் கோட்டிங்கை கொண்டுள்ளது.

நீடித்த பேட்டரி ஆயுள்

நீடித்த பேட்டரி ஆயுள்

Oppo Enco Buds2 ஆனது முழு சார்ஜில் ஏழு மணி நேரம் கேட்கும் நேரத்தை வழங்குகிறது. அதேபோல் இயர்பட்ஸ் கேஸ் மூலம் மூன்று முறை சார்ஜ் செய்யலாம்.

இதன் மூலம் 28 மணிநேர கேட்கும் நேரத்தை பெறலாம். வெறும் 10 நிமிட சார்ஜிங்கில் 1 மணி நேரம் கேட்கும் தன்மையை இந்த பட்ஸ்கள் மூலம் பெறலாம் என ஒப்போ குறிப்பிட்டுள்ளது.

சீரான நாய்ஸ் ரத்து ஆதரவு

சீரான நாய்ஸ் ரத்து ஆதரவு

Oppo AI சீரான நாய்ஸ் ரத்து செய்யும் தன்மையைக் கொண்டிருக்கிறது. இது அழைப்பின் போது பேருதவியாக இருக்கும். Enco Buds2 ஆனது ப்ளூடூத் 5.2 டிரான்ஸ்மிஷனுடன் வருகிறது.

இது மிகவும் நிலையான இணைப்பைக் கொண்டிருக்கிறது. கேமிங் விளையாடும் போது உகந்த ஆடியோ ஆதரவை இந்த இயர்பட்ஸ்கள் வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டஸ்ட் மற்றும் வாட்டர்-ரெசிஸ்டென்ட் மதிப்பீடு

டஸ்ட் மற்றும் வாட்டர்-ரெசிஸ்டென்ட் மதிப்பீடு

டென்மார்க்கை தளமாக கொண்ட ஆடியோ நிறுவனமான டைனாடியோவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு இயர்பட்ஸ்-ஐ ஒப்போ முன்னதாக அறிமுகம் செய்தது. அது Oppo Enco X2 ஆகும்.

இந்த லேட்டஸ்ட் ஒப்போ இயர்பட்ஸ் ஆனது IP54 டஸ்ட் மற்றும் வாட்டர்-ரெசிஸ்டென்ட் மதிப்பீட்டை பெற்றுள்ளது.

அதி ப்ரீமியம் இயர்பட்ஸ்

அதி ப்ரீமியம் இயர்பட்ஸ்

ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation - ANC) ஆதரவுடன் வெளியான இந்த இயர்பட்ஸ் சிங்கிள் சார்ஜில் 5 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்-ஐ வழங்கும் என்று Oppo கூறுகிறது.

அதேசமயம் சார்ஜிங் கேஸ் உட்பட, இந்த இயர்பட்ஸ் மொத்தம் 20 மணிநேரம் வரையிலான பேட்டரியை வழங்கும் எனவும் ஒருவேளை நீங்கள் ANC அம்சத்தை ஆஃப் செய்துவிட்டால் 27 மணிநேரம் என்கிற பிளேபேக் டைமை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனவில் Oppo Enco X2 TWS இயர்பட்ஸ் ஆனது இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.11,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை அதிகம் தான் ஆனால் இதன் அம்சம் என்பது மிகவும் மேம்பட்ட வகையில் உள்ளது.

Best Mobiles in India

English summary
OPPO Enco Buds2 Launched in India with Three Types of Audio Settings

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X