கின்னு கின்னுனு ஆடியோ.. OPPO இறக்கிய ANC இயர்பட்ஸ்.. சிங்கிள் சார்ஜில் 43 மணி நேர பேக்கப்.. எந்த மாடல்?
ஆடியோ பிரியர்களை வெயிட்டிங் மோடில் போட்டு வைக்கும்படி ஓப்போ நிறுவனத்தின் என்கோ பட்ஸ் 3 ப்ரோ பிளஸ் (OPPO Enco Buds 3 Pro+) இயர்பட்ஸ் இந்திய மார்கெட்டில் வெளியாகி இருக்கிறது. ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 43 மணி நேர பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங், டூயல் மைக்ரோபோன்கள் மற்றும் IP55 ரேட்டிங் போன்ற பீச்சர்களில் மிரளவிடுகிறது. இந்த என்கோ பட்ஸ் 3 ப்ரோ பிளஸ் மாடலின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 (OPPO Find X9) மற்றும் ஓப்போ ஃபைண்ட் எக்ஸ்9 ப்ரோ (OPPO Find X9 Pro) ஆகிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகிவிட்டன. இந்த மாடல்களுடன் ஓப்போ என்கோ பட்ஸ் 3 ப்ரோ பிளஸ் மாடலும் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் ஃபீல் கொடுக்கும் டிசைன் மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் பக்கா ஆடியோ பீச்சர்களை கொடுக்கிறது.

டைட்டானியம் டிரைவர்களுடன் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) மற்றும் என்கோ மாஸ்டர் ஈகியூ (Enco master EQ) கொடுக்கிறது. டச் கன்ட்ரோல்கள் மட்டுமல்லாமல், IP55 ரேட்டிங் கொண்ட வாட்டர் & ஸ்வெட் ரெசிஸ்டன்ஸ் கொடுக்கிறது. குளோசி ஃபினிஷ் மற்றும் மேட் ஃபிஷிஷ் டிசைன் கிடைக்கிறது. இப்போது முழு பீச்சர்களை தெரிந்து கொள்ளலாம்.
ஓப்போ என்கோ பட்ஸ் 3 ப்ரோ பிளஸ் அம்சங்கள் (OPPO Enco Buds 3 Pro+ Specifications): இந்த என்கோ மாடலில் 12.4 எம்எம் டைனாமிக் டிரைவர்கள் கிடைக்கிறது. இதில் பக்கா அவுட்புட் கொடுக்கும்படி என்கோ மாஸ்டர் ஈகியூ (Enco Master EQ) வருகிறது. மேலும், 32dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் மற்றும் டிரான்ஸ்பரன்ட் மோட் (Transparent Mode) கிடைக்கிறது.
இதுபோக கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக டூயல் மைக்ரோபோன்கள் (Dual Microphones) கிடைக்கின்றன. இதில் ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) கிடைக்கிறது. மாஸ்டர் ஈக்வலைசர் (Master Equalizer) மோட்களில் பேலன்ஸ்டு (Balanced), செரனேட் (Seranade) மற்றும் பேஸ் (Bass) ஆகிய மோட்கள் கிடைக்கின்றன. இதில் ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது.
இந்த கனெக்டிவிட்டி மூலமாக எஸ்பிசி (SBC), ஏஏசி (AAC) கோடெக் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஓப்போ என்கோ பட்ஸ் 3 ப்ரோ பிளஸ் மாடலுக்கு டச் கன்ட்ரோல் கிடைக்கிறது. ஆகவே, டிராக் சேஞ்ச், பிளே/பாஸ் போன்ற கன்ட்ரோல்கள் மட்டுமல்லாமல், வாய்ஸ் அசிஸ்டன்ட் (Voice Assistant) கன்ட்ரோலும் கிடைக்கிறது. ஏஎன்சி ஆப் செய்திருந்தால், 43 மணி நேர பேக்கப் கிடைக்கும்.
ஆன் செய்திருந்தால், 28 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். இது சார்ஜிங் கேஸ் பேக்கப் நேரங்களாகும். அதுவே இயர்பட்களில் ஏஎன்சி ஆப் செய்திருந்தால் 12 மணி நேரங்களுக்கும், ஆன் செய்திருந்தால் 8 மணி நேரங்களுக்கும் பேக்கப் பெற்று கொள்ளலாம். சார்ஜிங் கேஸில் 440mAh பேட்டரி மற்றும் இயர்பட்களில் 58mAh பேட்டரி கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஓப்போ என்கோ பட்ஸ் 3 ப்ரோ பிளஸ் மாடலுக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 11 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம். பட்கள் தலா 4.2 கிராம் எடை கொடுக்கிறது. சார்ஜிங் கேஸ் மொத்தமாக 46.2 கிராம் எடை வருகிறது. இப்போது விலை விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்த மாடலில் விலை ரூ.2,099ஆக இருக்கிறது. இருப்பினும், அறிமுக சலுகையில் ரூ.1,899 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. வருகிற நவம்பர் 21ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. அமேசான், பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சோனிக் ப்ளூ (Sonic Blue) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது.


Click it and Unblock the Notifications








