Home
Gadgets

தியேட்டரே காதுக்குள்ள.. பட்ஜெட்ல லைவ் ஸ்டீரியோ.. கேமரா கன்ட்ரோல்.. ஏஐ நாய்ஸ் கேன்சலேஷன்.. எந்த மாடல்?

ஸ்ட்ராங்க் பேஸ் அவுட்புட் கொண்ட 10 எம்எம் லார்ஜ் டைடனைஸ்டு டிரைவர்கள், எக்னோ லைவ் ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்ட், ஏஐ டீப் நாய்ஸ் கேன்சலேஷன், டபுள்-டேப் கேமரா கன்ட்ரோல் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், 28 நாட்களுக்கு பேக்கப் கொடுக்கும் ஓப்போ என்கோ பட்ஸ் 2 (Oppo Enco Buds 2) மாடலின் லைலாக் ப்ளூ வெர்ஷன் வெளியாகி இருக்கிறது. பிரீமியம் ஆடியோ அனுபவம் கொடுக்கும் பட்ஜெட் இயர்பட்ஸ் வேண்டுமானால், இந்த மாடலை ஆப்ஷனில் எடுக்கலாம். இதுகுறித்து விவரம் இதோ.

ஓப்போ என்கோ பட்ஸ் 2 அம்சங்கள் (Oppo Enco Buds 2 Specification): ஆடியோவில் டீப், கிளியர் மற்றும் ரிதம் பேஸ் அவுட்புட் கொடுக்கும்படி 10 எம்எம் டைடனைஸ்டு டைனாமிக் டிரைவர்கள் இந்த மாடலில் வருகின்றன. ஆகவே, இந்த டிரைவர்களில் ஹை-பிளக்ஸ் மேக்னடிக் சர்க்யூட் உடன் யுனிக் பேஸ் பூஸ்டர் (Unique Bass Booster) சப்போர்ட் வருகிறது.

தியேட்டரே காதுக்குள்ள.. பட்ஜெட்ல லைவ் ஸ்டீரியோ.. கேமரா கன்ட்ரோல்!

பேஸ் பூஸ்ட் (Bass Boost) மற்றும் கிளியர் வோகல்ஸ் (Clear Vocals) ஆகிய எக்னோ லைவ் ஸ்டீரியோ சவுண்ட் எஃபெக்ட்கள் (Enco Live Stereo Sound Effects) கொண்டிருக்கிறது. இந்த ஓப்போ என்கோ பட்ஸ் 2 மாடலில் சிங்கிள் சார்ஜில் 7 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸில் 28 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். ஃபிளாஷ் சார்ஜிங் வருகிறது.

ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், 1 மணி நேரத்துக்கு பேக்கப் கிடைக்கும். இந்த மாடலில் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களுக்காக ஏஐ டீப் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Deep Noise Cancellation) சப்போர்ட் வருகிறது. ஆகவே, இன்டோர் மட்டுமல்லாமல், அவுட்டோரிலும் இந்த மாடல் கிளியர் வாய்ஸ் கால்கள் அவுட்புட் கொடுக்கும்.

இந்த ஓப்போ என்கோ பட்ஸ் 2 மாடலில் லோவ் லேட்டன்சி (Low Latency) மற்றும் ஹை ஸ்டெபிலிட்டி (High Stability) கொண்ட ப்ளூடூத் 5.2 (Bluetooth 5.2) கனெக்டிவிட்டி வருகிறது. அதேபோல கேமிங் பிரியர்களை தட்டித்தூக்கும் விதமாக கேம் மோட் (Game Mode) வருகிறது. இந்த மோட் மூலம் 94ms லோவ் லேட்டன்சி பெற்று கொள்ளலாம்.

தியேட்டரே காதுக்குள்ள.. பட்ஜெட்ல லைவ் ஸ்டீரியோ.. கேமரா கன்ட்ரோல்!

ஆகவே, ஆடியோ மற்றும் வீடியோ சிங்க் பக்காவாக இருக்கும். இந்த எக்னோவில் டச் கன்ட்ரோல்கள் வருகின்றன. வால்யூம் கன்ட்ரோல், பிளே/பாஸ் மட்டுமல்லாமல், கேமரா கன்ட்ரோல் (Camera Control) செய்து கொள்ளலாம். அதாவது, வலது பட்-இல் டபுள்-டேப் செய்தால், போட்டோ கேப்ச்சர் செய்து கொள்ளலாம்.

இந்த மாடலில் IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் (Water Resistance) வருகிறது. ஹேமெலடி ஆப் (HeyMelody APP) கனெக்டிவிட்டி வருகிறது. இந்த ஆப் மூலம் டச் செட்டிங்ஸ், பேட்டரி செக், இயர்பட்ஸ் கன்ட்ரோல் கைடென்ஸ், எக்னோ லைவ் சவுண்ட் எஃபெக்ட் மற்றும் கேமிங் மோட் செட்டிங்ஸ் ஆகியவற்றை செய்து கொள்ளலாம்.

மிட்நைட் பிளாக் (Midnight Black), மூன்லைட் ஒயிட் (Moonlight White) மற்றும் லைம் கிரீன் (Lime Green) ஆகிய 3 கலர்களில் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரும் வரவேற்பு பெற்றது. இப்போது, லைலாக் ப்ளூ (Lilac Blue) கலரில் வெளியாகி பிரீமியம் லுக் கொடுக்கிறது. இந்த மாடலை பிளிப்கார்ட் மற்றும் ஓப்போ தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

இந்த ஓப்போ என்கோ பட்ஸ் 2 மாடலின் விலை ரூ.1,599 ஆக இருக்கிறது. அல்ட்ரா பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், லோவ் லேட்டன்சி, பேஸ் பூஸ்டர், நாய்ஸ் கேன்சலேஷன், வாட்டர் ரெசிஸ்டன் போன்ற பீச்சர்கள் கொண்ட மாடல் பட்ஜெட்டில் வாங்க வேண்டுமானால், இந்த இயர்பட்ஸ் மாடலை தேர்ந்தெடுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Oppo Enco Buds 2 With Lilac Blue Color Sale From Flipkart Check Specification Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X