சிங்கிள் சார்ஜில் 54 மணி நேர பேக்கப்.. OPPO இறக்கிய புதிய Enco இயர்பட்ஸ்.. 52dB ஏஎன்சி.. எந்த மாடல்?
மியூசிக் பிரியர்கள் அடித்து பிடித்து ஆர்டர் செய்ய வைக்கும்படியான விலை மட்டுமல்லாமல், சிங்கிள் சார்ஜில் 54 மணி நேர பேக்கப், 52dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ஏஐ டிரான்ஸ்லேஷன் போன்ற பீச்சர்களுடன் ஓப்போ எக்னோ ஏர்5 இயர்பட்ஸ் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஓப்போ மாடலின் பீச்சர்கள், விலை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ ரெனோ16 5ஜி (OPPO Reno16 5G), ஓப்போ ரெனோ 16சி 5ஜி (OPPO Reno16c 5G) ஸ்மார்ட்போன்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மாடல்களுடன் ஓப்போ எக்னோ ஏர்5 (OPPO Enco Air5) வெளியாகி இருக்கிறது. பட்ஜெட்டில் பிரீமியம் ஆடியோ பீச்சர்களை கொடுப்பதால், வரவேற்பு பெற்றுள்ளது. அறிமுக சலுகையுடனும் கிடைக்கிறது.

ஓப்போ எக்னோ ஏர்5 சிறப்பம்சங்கள் (OPPO Enco Air5 Specifications): ப்ளூடூத் 6.1 (Bluetooth 6.1) கனெக்டிவிட்டி கொண்ட 12 எம்எம் டைட்டானியம் கோட்டெட் டிரைவர் (Titanium-coated Dynamic Driver) கிடைக்கிறது. எஸ்பிசி (SBC) மற்றும் ஏஏசி (AAC) ஆடியோ கோடெக்களுகள் கிடைக்கின்றன. 52dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது.
மேலும், டிரான்ஸ்பரன்ட் மோடை (Transparent Mode) இந்த ஓப்போ எக்னோ ஏர்5 மாடல் கொடுக்கிறது. 6 மைக்குகள் மொத்தமாக கிடைக்கின்றன. 3 மைக்குகள் தலா 1 பட்களில் பேக் செய்யப்பட்டு உள்ளது. இதில் செய்யப்படும் வாய்ஸ் கால்களுக்கு ஏஐ கால் நாய்ஸ் கேன்சலேஷன் (AI Call Noise Cancellation) கொடுக்கப்பட்டு இருக்கிறது.
பிரீமியம் இயர்பட்ஸ் மாடல்களில் கிடைக்கும் ஏஐ அசிஸ்டன்ட் (AI Assistant) மற்றும் ஏஐ டிரான்ஸ்லேட் பீச்சர்களை கொடுத்துள்ளது. IP55 ரேட்டிங் கொண்ட ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. பட்களில் 62mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 530mAh பேட்டரி கிடைக்கிறது. ஏஎன்சி மோடில் பட்களில் 6.5 மணி நேர பேக்கப் கிடைக்கும்.
சார்ஜிங் கேஸில் 27 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஏஎன்சி ஆப் செய்யப்பட்டால், பட்களில் 13 மணி நேரத்துக்கும், சார்ஜிங் கேஸில் 54 மணி நேரங்களுக்கும் பேக்கப் கிடைக்கிறது. ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட மாடலாக இருப்பதால், 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தாலே போதும் 11 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்று கொள்ளலாம்.
இந்த ஓப்போ எக்னோ ஏர்5 மாடலின் விலை ரூ.32,999 ஆக இருக்கிறது. அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளத்தில் அறிமுக சலுகையில் ரூ.3,099 விலைக்கு கிடைக்கிறது. லாவண்டர் பர்பிள் (Lavender Purple) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் கிடைக்க இருக்கிறது. ஓப்போ ரெனோ16 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.61,999 ஆக இருக்கிறது.
இந்த விலைக்கு 6.32 இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 3600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 7 ஜென் 4 4என்எம் (Qualcomm Snapdragon 7 Gen 4 4nm) சிப்செட்டை கொடுக்கிறது. 50 எம்பி மெயின் கேமரா + 50 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கொடுக்கிறது.
80W சார்ஜிங் மற்றும் 6700mAh பேட்டரி கொடுக்கிறது. ஓப்போ ரெனோ16சி ஸ்மார்ட்போனின் விலை ரூ.46,999ஆக இருக்கிறது. 7000mAh பேட்டரி, 80W சார்ஜிங் கொடுக்கிறது. 6.57 இன்ச் அமோலெட் டிஸ்பிளே உள்ளது. டைமன்சிட்டி 7300 4என்எம் சிப்செட் உள்ளது. 50 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 50 எம்பி டெலிபோட்டோ கேமரா கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications