OPPO சும்மா கிழி.. சிங்கிள் சார்ஜில் 54 மணி நேர பேக்கப்.. 55dB ஏஎன்சி.. 12எம்எம் டிரைவர்கள்.. எந்த மாடல்?
ஓப்போ நிறுவனத்தின் புதிய இயர்பட்ஸ் மாடலான ஓப்போ எக்னோ ஏர்5 ப்ரோ (OPPO Enco Air5 Pro) அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. சிங்கிள் சார்ஜில் 54 மணி நேர பேக்கப் மட்டுமல்லாமல், 55dB ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், 12 எம்எம் பேஸ் டிரைவர்களை கொடுக்கிறது. இந்த ஓப்போ எக்னோ ஏர்5 ப்ரோ மாடலின் முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஓப்போ எக்னோ பட்ஸ்3 ப்ரோபிளஸ் (OPPO Enco Buds3 Pro+), ஓப்போ எக்னோ பட்ஸ்3 ப்ரோ (OPPO Enco Buds3 Pro) மற்றும் ஓப்போ எக்னோ ஏர்2 ப்ரோ (OPPO Enco Air2 Pro) ஆகிய இயர்பட்ஸ் மாடல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்தியாவுக்கு முன்பாக சீன மார்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டன. அதேபோல இப்போது எக்னோ ஏர்5 ப்ரோவும் முதலில் சீனாவில் வெளியாகி இருக்கிறது.

ஆகவே, ஓரிரு மாதங்களில் இந்தியாவில் வெளியாகும் என்பதால், இப்போதே முழு பீச்சர்கள் மற்றும் விலை விவரங்களை தெரிந்து கொள்ள ஆடியோ பிரியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஏஐ டிரான்ஸ்லேஷன் (AI Translation), ஏஐ கால் நாய்ஸ் ரெடக்சன் (AI Call Noise Reduction) உள்ளிட்ட லேட்டஸ்ட் பீச்சர்கள் வருவதால், எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. முழு பீச்சர்கள் எப்படி?
ஓப்போ எக்னோ ஏர்5 ப்ரோ அம்சங்கள் (OPPO Enco Air5 Pro Specifications): பேஸ் பிரியர்களுக்கு ஏற்ப 12 எம்எம் பேஸ் டிரைவர்களை கொடுத்து உள்ளது. ப்ளூடூத் 6.0 (Bluetooth 6.0) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. வழக்கம் போல டூயல் டிவைஸ் கனெக்டிவிட்டி (Dual-device Connectivity) உள்ளது. ஆகவே, ஒரே நேரத்தில் 2 டிவைஸ்களை கனெக்ட் செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
கால் நாய்ஸ் கேன்சலேஷன் (Call Noise Cancellation) சப்போர்ட் கொண்ட 3 மைக்குகள் கிடைக்கின்றன. 55dB கொண்ட ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (Active Noise Cancellation) கிடைக்கிறது. மேலும், அடாப்டிவ் மோட் (Adaptive Mode), டிரான்ஸ்பரன்சி மோட் (Transparency Mode) இந்த ஓப்போ எக்னோ ஏர்5 ப்ரோ மாடலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஏஎன்சி ஆன் மற்றும் ஆஃப் வழக்கமாக உள்ளது.
யுனிக் இன்டலிஜென்ட் விண்ட் நாய்ஸ் ரெடக்சன் (Unique Intelligent Wind Noise Reduction) கிடைக்கிறது. ஆகவே, 25 கி.மீ. வேகத்தில் சென்றாலும் கிரிஸ்டல் கிளியர் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். மேலும், ஏஏசி (AAC), எஸ்பிசி (SBC) மற்றும் எல்எச்டிசி 5.0 (LHDC 5.0) சப்போர்ட் கொண்டுள்ளது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் இந்த எக்னோ ஏர்5 ப்ரோ மாடலுக்கு கிடைக்கிறது.
1 எம்பிபிஎஸ் வயர்லெஸ் டிரான்ஸ்மிஷன் ரேட் கொண்டுள்ளது. டச் கன்ட்ரோல் (Touch Controls) செய்து கொள்ளலாம். மேலும், சிலைட் வால்யூம் கன்ட்ரோல் (Slide Volume Control) கொடுக்கப்பட்டு உள்ளது. கேமிங் பிரியர்களுக்காக 47ms லோவ் லேட்டன்சி (Low Latency) கொடுக்கப்பட்டு உள்ளது. சார்ஜிங் கேஸில் 530mAh பேட்டரி மற்றும் பட்களில் 62mAh பேட்டரி கிடைக்கிறது.
இதை ஃபுல் சார்ஜ் செய்தால், பட்களில் 7 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். சார்ஜிங் கேஸ் வழியாக 29 மணி நேரங்களுக்கு பேக்கப் பெறலாம். இது ஏஎன்சி ஆன் செய்யப்பட்டால் கிடைக்கும் பேக்கப்பாகும். ஏஎன்சி ஆப் செய்யப்பட்டால், பட்களில் மட்டும் 13 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். கேஸ்களில் 54 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும்.
இயர்பட்கள் 4.4 கிராம் எடை உள்ளது. சார்ஜிங் கேஸ் 43 கிராம் எடை கொண்டுள்ளது. மூன்ஸ்டோன் ஒயிட் (Moonstone White) மற்றும் மிட்நைட் பிளாக் (Midnight Black) ஆகிய கலர்களில் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. சீன மார்கெட்டில் 329 யுவானாக விலை இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.4,332ஆக இருக்கிறது. இதைவிட மலிவான விலைக்கு இந்தியாவில் வெளியாகும்.


Click it and Unblock the Notifications








