அவ்வளவு விலைக்கு இதில் என்ன இருக்கு: 24 மணி நேர ப்ளே பேக் அம்சத்தோடு ஒப்போ என்கோ ஏர்!

|

ஒப்போ என்கோ ஏர் சாதனமானது 24 மணிநேர பேட்டரி ஆயுள், ப்ளூடூத் வி5.2 அம்சத்தோடு மே 6 ஆம் தேதி அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ என்கோ ஏர் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் 440 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இந்த சாதனம் 24 மணிநேர ப்ளேபேக் அம்சத்தோடு வருகிறது.

ஒப்போ என்கோ ஏர் ட்ரூ வயர்லெஸ்

ஒப்போ என்கோ ஏர் ட்ரூ வயர்லெஸ்

ஒப்போ என்கோ ஏர் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ (டிடபிள்யூஎஸ்) இயர்பட்ஸ் இத்தாலியில் முன்னதாகவே அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த தகவல் தொடர்ந்து வெளியான வண்ணம் இருக்கிறது. இருப்பினும் அந்த பகுதியில் இந்த டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் விற்பனைக்கு எந்த தளத்திலும் பட்டியலிடப்படவில்லை. இந்த நிறுவனம் சமீபத்தில் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸை ஒப்போ கே9 5ஜி உடன் இணைந்து சீனாவில் அறிமுகப்படுத்தியது. இவை ஒப்போ என்கோ ஏர் ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. 24 மணிநேர பேட்டரி ஆயுள், இணைப்புக்கான ப்ளூடூத் வி5.2 உள்ளிட்ட அம்சங்கள் இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. இது இரண்ட வண்ண விருப்பங்களில் வரும் என தெரிவிக்கப்படுகிறது.

ஒப்போ என்கோ ஏர் விலை

ஒப்போ என்கோ ஏர் விலை

ஒப்போ என்கோ ஏர் விலை குறித்து இத்தாலி நியூஸ்ரூம் பக்கத்தின் தகவலின்படி, ஒப்போ என்கோ ஏர் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.9,000 ஆக இருக்கலாம். இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் வரலாம் என தெரிவிக்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் அமேசான்.இட் மூலமாக வரும் வாரங்களில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இருப்பினும் வலைதளத்திலோ, ஒப்போவின் அதிகாரப்பூர்வ இத்தாலி வலைதளத்திலோ எந்த பட்டியலும் இல்லை. இருப்பினும் ஒப்போ ஹப் இந்த காதணிகளின் படத்தை பகிர்ந்துள்ளது.

ஒப்போ என்கோ ஏர் சிறப்பம்சங்கள்

ஒப்போ என்கோ ஏர் சிறப்பம்சங்கள்

அதேபோல் ஒப்போ என்கோ ஏர் சாதனமானது இந்தியா உள்ளிட்ட சர்வதேச சந்தைகளில் எப்போது கிடைக்கப்படும் என தெளிவாகத் தெரியவில்லை. ஒப்போ என்கோ ஏர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், ஒப்போ என்கோ ஏர் நாய்ஸ் ரத்து அம்சத்தோடு வருகிறது. இது ஏஐ செயல்பாட்டுடன் இரட்டை மைக்ரோஃபோன்களைக் கொண்டிருக்கிறது. இது மனித குரல்களை கண்காணித்து பின்னணி இரைச்சலை தாமாக ரத்து செய்யும் நோக்கத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒப்போ என்கோ ஏர் டச்(தொடு) கட்டுப்பாடுடன் வருகிறது. இது கண்ட்ரோல் டிராக்ஸ், வால்யூம், அழைப்பு எடுக்க, வாய்ஸ் அசிஸ்டெண்ட் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களோடு வருகிறது.

440 எம்ஏஎச் பேட்டரி

440 எம்ஏஎச் பேட்டரி

டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் 440 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. இது 24 மணிநேர ஆயுள் உடன் வரும் என கூறப்படுகிறது. மேலும் இது 15 மணி நேர பேச்சு நேரத்தோடு வரும் எனவும் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும் எனவும் கூறப்படுகிறது. ஒப்போ என்கோ ஏர் சாதனம் 10 நிமிட சார்ஜிங்கில் 8 மணி நேர பேட்டரி ஆயுளை வழங்குகிறது.

மே 6 அறிமுகம்

மே 6 அறிமுகம்

ப்ளூடூத் வி5.2 உடன் வரும் இந்த இயர்பட்ஸ் ஹேமெலோடி பயன்பாட்டின் மூலம் சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. ஒப்போ என்கோ குறித்து இதுவரை வெளியான தகவல் இதுவே ஆகும். கூடுதல் தகவல் அறிமுக தினமான மே 6 தெரியவரும்.

Best Mobiles in India

English summary
Oppo Enco Air Earbuds May Launching With Noise Cancellation, Bluetooth v5.2 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X