சூப்பர் ஸ்டைலான Oppo Band Style அறிமுகம்.. Mi Band 5க்கு போட்டி இனி ஒப்போ பேண்ட் தானா?
ஒப்போ நிறுவனம் விரைவில் இந்தியாவில் 'ஒப்போ பேண்ட் ஸ்டைல்' என்ற புதிய பிட்னஸ் பேண்ட் சாதனத்தை வரும் மார்ச் 8ம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இது அணியக்கூடிய சாதன வகையில், பயனர்களின் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்ட பல அம்சங்களுடன் வருகிறது. வரவிருக்கும் ஃபிட்னெஸ் பேண்ட் ஆக்ஸிஜன் கண்காணிப்பு (SpO2) அம்சத்துடன் நிகழ் நேர இதயத் துடிப்பு கண்காணிப்புடன் வெளிவருகிறது.

இந்த சாதனம் ஒப்போ எஃப் 19 புரோ + 5 ஜி மற்றும் ஒப்போ எஃப் 19 புரோ ஸ்மார்ட்போன்களுடன் ஒப்போ பேண்ட் ஸ்டைலும் அறிமுகப்படுத்தப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ஒப்போ பேண்ட் ஸ்டைல் அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. இது 1.1 இன்ச் கலர் AMOLED டிஸ்பிளேவுடன் வரும், இது மி பேண்ட் 5 போன்றது. இது பயனர்களின் இரத்த செறிவு அளவை (SpO2) தொடர்ந்து கண்காணிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
மேலும் குறிப்பாக, 8 மணிநேர தூக்க காலத்தில் பேண்ட் 28,800 முறை SpO2 அளவை கண்காணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ பேண்ட் ஸ்டைல் நிகழ் நேர இதய துடிப்பு கண்காணிப்பு மற்றும் தூக்க கண்காணிப்புடன் வரும். பயனர்கள் ஏதேனும் தூக்கச் சிக்கல்களை எதிர்கொள்கிறார்களா என்பதைக் கண்டறியும் வகையில் புதிய ஃபிட்னஸ் பேண்ட் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று ஒப்போ கூறியுள்ளது.
இந்த புதிய பிட்னஸ் பேண்ட் 12 வெவ்வேறு ஸ்போர்ட்ஸ் மோடு உடன் வெளிவருகிறது. பயனர்களின் அனைத்து முன்னேற்றங்களும் தங்கள் ஸ்மார்ட்போன்களில் பதிவிறக்கம் செய்யக்கூடிய ஹெய்டாப் ஹெல்த் (HeyTap Health) பயன்பாட்டில் சேமிக்கப்படும். இது வாட்டர் ப்ரூப் அம்சத்துடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Oppo Band Style வரும் மார்ச் 8, 2021 அன்று மாலை 7 மணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டவுடன் முழுமையான தகவல் வெளிச்சத்திற்கு வரும்.


Click it and Unblock the Notifications








