இந்தியா: விரைவில் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் OnePlus Y1S TV series.!
ஒன்பிளஸ் நிறுவனம் விரைவில் ஒன்பிளஸ் Y1S டிவி சீரிஸ் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் Y1S டிவி மாடல்கள் பட்ஜெட் விலையில் வெளிவரும் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதாவது ஒன்பிளஸ் Y1S 32-இன்ச் மற்றும் 43-இன்ச் டிவி மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம்.
ஒன்பிளஸ் Y1S டிவி சீரிஸ்

இந்த புதிய ஒன்பிளஸ் Y1S டிவி மாடல்கள் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், எச்டிஆர் 10 பிளஸ், டால்பி ஆடியோ உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த புதிய டிவி மாடல்களில் 20 வாட் ஸ்பீக்கர்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
2.4ஜிகாஹெர்ட் மீடியாடெக் சிப்செட் ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் Y1S டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதள வசதியுடன் இந்த டிவி மாடல்கள் வெளிவருவதால் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஒன்பிளஸ் Y1S டிவி மாடல்களில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு Netflix, Amazon Prime வீடியோ, ஹாட்ஸ்டார் மற்றும் YouTube போன்ற செயலிகளுடன் இந்த புதிய ஒன்பிளஸ் Y1S டிவி மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

டூயல்-பேண்ட் வைஃபை, எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டிவி மாடல்கள். மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஒன்பிளஸ் Y1S டிவி சீரிஸ். மேலும் சமீபத்தில் Vu நிறுவனம் அறிமுகம் செய்த 75-இன்ச் டிவி மாடலின் சிறப்பு அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.
Vu 75 QLED பிரீமியம் டிவி

Vu 75 QLED பிரீமியம் டிவி ஆனது 75-இன்ச் 4கே டிஸ்பிளே மற்றும் 3,840x2,160 பிக்சல்தீர்மானம் அடிப்படையில் வெளிவந்துள்ளது. அதேபோல் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் MEMC (Motion Estimation and Motion Compensation) தொழில்நுட்பத்தை ஆதரிக்கிறது இந்த புதிய டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது
அந்நிறுவனம்.
Vu 75 QLED பிரீமியம் டிவியானது சார்கோல் கிரே மெட்டல் ஃப்ரேம் மற்றும் 64-பிட் குவாட்-கோர் பிராசஸர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது. எனவே இந்த டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு HDR10 மற்றும் HLG தொழில்நுட்பத்திற்கான ஆதரவைக் கொண்டுள்ளதுஇந்த அட்டகாசமான பிரீமியம் டிவி மாடல். அதேபோல் இந்த புதிய டிவி மாடலில் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு இந்த Vu 75 QLED பிரீமியம் டிவி மாடல் கூகுள் பிளே ஸ்டோர் அணுகலை வழங்குகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தைஅடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த பிரீமியம் டிவி.

குறிப்பாக இந்த Vu 75 QLED பிரீமியம் டிவி மாடல் 40W ஆதரவு கொண்ட நான்கு ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. பின்பு கூகுள் அசிஸ்டண்ட் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய டிவி மாடல். Vu 75 QLED பிரீமியம் டிவி புளூடூத் v5.0 ஆதரவைக் கொண்டுள்ளது. எனவே கேமிங் கன்ட்ரோலர்கள், ஹெட்ஃபோன்கள், ஸ்பீக்கர்கள், கீபோர்டு மற்றும் பல சாதனங்களுடன் இணைக்கப்படலாம். டூயல்-பேண்ட் வைஃபை, நான்கு HDMI போர்ட்கள், ஆடியோ ஜாக் மற்றும் இரண்டு யுஎஸ்பி போர்ட்கள் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய டிவி மாடல்.

இந்த புதிய Vu 75 QLED பிரீமியம் டிவி மாடல் உள்ளமைக்கப்பட்ட Chromecast உடன் வருகிறது. பின்பு Netflix, Amazon Prime வீடியோ,ஹாட்ஸ்டார் மற்றும் YouTube போன்ற செயலிகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான டிவி மாடல். இதுதவிர பல்வேறு புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது இந்த Vu 75 QLED பிரீமியம் டிவி. Vu 75 QLED பிரீமியம் டிவியின் விலை ரூ.1,19,999-ஆக உள்ளது. குறிப்பாக இந்த டிவி மாடல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைசெய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








