Home
Gadgets

மிரள விட்ட பிளிப்கார்ட்.. 8ஜிபி ஸ்டோரேஜ்.. டால்பி ஆடியோ.. ஆஃபரில் ஒன்பிளஸ் டிவி.. எந்த மாடல்?

இந்தியாவில் அதிநவீன ஸ்மார்ட் டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக சியோமி, ஒன்பிளஸ் நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்கின்றன. இந்நிலையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கு பிளிப்கார்ட் தளத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

அதாவது ஒன்பிளஸ் ஒய்1 (OnePlus Y1) 40-இன்ச் ஃபுல் எச்டி எல்இடி ஸ்மார்ட் டிவிக்கு 28 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.19,999 விலையில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த டிவியை வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் சலுகையும் உள்ளது. குறிப்பாக 40-இன்ச் ஒன்பிளஸ் டிவியை கம்மி விலையில் வாங்க இதுதான் சரியான நேரம்.

மிரள விட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் ஒன்பிளஸ் டிவி.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி அம்சங்கள் (OnePlus Y1 Smart TV specifications): ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் 1920 x 1080 பிக்சல்ஸ் மற்றும் ஃபுல் எச்டி ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் 240 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவி சிறந்த திரை அனுபவத்தை வழங்கும்.

ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி மாடலில் சக்திவாய்ந்த Cortex-A53 பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதேபோல் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு மற்றும் குரோம்காஸ்ட் ஆதரவு கொண்டுள்ளது இந்த அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் 1ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியில் ஆப்ஸ்களை தடையின்றி பயன்படுத்த முடியும்.

குறிப்பாக டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 20 வாட்ஸ் ஸ்பீக்கர்களுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஒரு தியேட்டர் அனுபவத்தைக் கொடுக்கும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி மாடல். குறிப்பாக இந்த டிவியின் வடிவமைப்பு மற்றும் மென்பொருள் அமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

மிரள விட்ட பிளிப்கார்ட்.. ஆஃபரில் ஒன்பிளஸ் டிவி.. எந்த மாடல்?

40-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், யூடியூப் உள்ளிட்ட பல செயலிகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பெசல்-லெஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது. பட்ஜெட் விலையில் ஒரு அருமையான 40-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க விரும்பினால் இந்த ஒன்பிளஸ் ஒய்1 ஸ்மார்ட் டிவி மாடலை வாங்குவது நல்லது.

மேலும் இந்தியாவில் சியோமி நிறுவனத்திற்குப் போட்டியாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஒவ்வொரு ஸ்மார்ட் டிவிக்கும் அதிக வரவேற்பு உள்ளது. காரணம் என்னவென்றால் தனித்துவமான அம்சங்களுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் வெளிவருகின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Y1 Smart TV is 28 percent off on Flipkart: check New price, specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X