Home
Gadgets

மினி ஸ்மார்ட்போன் கிடக்குது.. மினி டேப்லெட்-ஐ இறக்கும் OnePlus.. என்ன மாடல்? எப்போது அறிமுகம்?

மினி ஸ்மார்ட்போன் அல்லது காம்பாக்ட் ஸ்மார்ட்போனை டிரெண்டிங்கை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனமானது மினி டேப்லெட்டை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நினைவூட்டும் வண்ணம் சமீபத்தில் தான் இந்நிறுவனத்தின் காம்பாக்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஒன்பிளஸ் 13டி (சீனாவில்) மற்றும் ஒன்பிளஸ் 13எஸ் (உலகளவில்) அறிமுகமானது.

இந்த ஸ்மார்ட்போனிற்கு கிடைத்த வெற்றியானது ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த காம்பாக்ட் ஸ்மார்ட்போன் ஆன ஒன்பிளஸ் 15டி மாடலின் (ஒன்பிளஸ் 14டி வராது) அறிமுகத்தை உறுதிப்படுத்தி உள்ள நிலைப்பாட்டில், ஒன்பிளஸ் நிறுவனம் இதே "மினி" பாணியை தனது டேப்லெட் பிரிவிற்கும் நகர்த்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது.

மினி ஸ்மார்ட்போன் கிடக்குது.. மினி டேப்லெட்-ஐ இறக்கும் OnePlus!

வருகிற அக்டோபரில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் நெக்ஸ்ட் ஜெனரஷன் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 15 மாடலை (ஒன்பிளஸ் 14 மாடலும் வவராது) வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் சீனாவில் அதன் ஒன்பிளஸ் ஏஸ் 6 சீரீஸ் (OnePlus Ace 6 Series) ஸ்மார்ட்போன்களை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

இதை தொடந்து அடுத்த 2026 ஆம் ஆண்டு, இந்நிறுவனம் அதன் அடுத்த ஸ்மால் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனான ஒன்பிளஸ் 15டி மாடலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வழியாக கிடைத்த ஒரு புதிய லீக் ஆனது, இந்நிறுவனம் அத ஒன்பிளஸ் 15டி ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒரு மினி டேப்லெட்டையும் அறிவிக்கக்கூடும் என்கிறது.

குறிப்பிட்ட டிப்ஸ்டரின் கூற்றுப்படி, ஒன்பிளஸ் நிறுவனம் புதிய 6.3-இன்ச் ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ஒரு சிறிய டேப்லெட்டையும் அறிமுகப்படுத்தும். ஆனால் அவர் மாடல் பெயர் குறித்த விவரங்களை வெளிப்படுத்தவில்லை. ஒருவேளை அது ஒன்பிளஸ் பேட் 3 மினி (OnePlus Pad 3 Mini) ஆக இருக்கலாம். இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் 2 (Snapdragon 8 Elite 2 - SM8850) சிப்செட் இதன் அறிமுகம் செய்யப்படலாம்.

ஒன்பிளஸ் 14, ஒன்பிளஸ் 14டி அல்லது ஒன்பில்ஸ் 14எஸ் அறிமுகம் செய்யப்படாமல் ஏன் ஒன்பிளஸ் 15, ஒன்பிளஸ் 15டி அல்லது ஒன்பிளஸ் 15எஸ் அறிமுகம் செய்யப்படுகிறது என்கிற குழப்பம் உங்களுக்கு வந்தால்.. அடர்க்கு காரணம் 4 ஆம் எண் தான்!

4 என்கிற எண்ணின் மீதான பயம் காரணமாக, கிழக்கு ஆசிய கலாச்சாரங்களில், குறிப்பாக சீனா, ஜப்பான், கொரியா மற்றும் வியட்நாமில் உள்ள மொழிகளில் நான்காம் எண்ணுக்கான சொல் ஆனது மரணம் என்கிற வார்த்தையுடன் ஒத்திருப்பதாலும் ஒன்பிளஸ் 14 சீரீஸ் (OnePlus 14 Series) அறிமுகம் செய்யப்படாது; மாறாக ஒன்பிளஸ் 15 சீரீஸ் (OnePlus 15 Series) தான் வரும்.

ஒன்பிளஸ் 15டி அல்லது ஒன்பிளஸ் 15எஸ் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- ஆப்டிகல் சென்சாருக்கு பதிலாக அல்ட்ராசோனிக் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ரியர் கேமரா அமைப்பில் ப்ரைமரி ஸ்னாப்பர், அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா
- காம்பாக்ட் ஸ்மார்ட்போன் ஆக இருந்தாலும் 7000mAh பேட்டரியை கொண்டிருக்கலாம்
- ஒன்பிளஸ் 13டி / ஒன்பிளஸ் 13எஸ் மாடலில் இல்லாத வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கலாம்

ஒன்பிளஸ் 13எஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 120Hz வரை ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.32-இன்ச் 1.5கே (1216 × 2640 பிக்சல்ஸ்) LTPO ProXDR டிஸ்பிளே
- இன்-டிஸ்ப்ளே ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார்
- ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்
- ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான OxygenOS 15 ஓஎஸ்

-டூயல் ரியர் கேமரா செட்டப்
- எப் /1.8 அபெர்க்ஷர் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் சோனி LYT-700 ப்ரைமரி சென்சார்
- எப்/2.0 அபெர்க்ஷர், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (EIS) ஆதரவுடன் 50-மெகாபிக்சல் S5KJN5 டெலிஃபோட்டோ ஷூட்டர்
- 32 மெகாபிக்சல் செல்பீ சென்சார் (எப் /2.0, EIS ஆதரவு)
- 5850mAh பேட்டரி
- 80W SuperVOOC சார்ஜிங் ஆதரவு

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Working On New Mini Tablet Could be OnePlus Pad 3 Mini Launch Alongside OnePlus 15T
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X