ஒன்பிளஸ் வாட்ச் வாங்க ரெடியா? மார்ச் 23 காலெண்டரில் குறிச்சு வச்சுக்கோங்க..

|

ஒன்பிளஸ் நிறுவனம் நீண்ட காலமா இழுத்தடித்து வந்த அந்த முக்கியமான அறிவிப்பை ஒருவழியாக இப்போது அறிவித்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்சின் அறிமுகம் பற்றிய அந்த முக்கிய தகவலை நிறுவனம் தற்பொழுது வெளியிட்டுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் வரும் மார்ச் 23ம் தேதி, புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு புது ட்ரீட்

ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு புது ட்ரீட்

ஒன்பிளஸ் நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் வாட்ச் சாதனத்தை அறிமுகம் செய்யுமென்று தற்பொழுது ஒருவழியாக உறுதிப்படுத்தியுள்ளது. இந்த செய்தி ஒன்பிளஸ் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட் வாட்ச் மாடலாக இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் சாதனம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல், நிறுவனம் மற்றொரு ஒன்பிளஸ் ஸ்மார்ட் பேண்ட் சாதனத்தையும் உருவாக்கி வருவதாக சில தகவல்கள் சமீபத்தில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

புதிய ஒன்பிளஸ் வாட்ச் சாதனம்

புதிய ஒன்பிளஸ் வாட்ச் சாதனம்

இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் சாதனம் வரும் மார்ச் 23 ஆம் தேதி, புதிய ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளியீட்டு தேதியை ஒன்பிளஸ் தனது டிவிட்டர் வலைப்பக்கத்தின் மூலம் அறிவித்தது. ஒன்பிளஸ் வாட்சை ஒன்பிளஸ் தலைமை நிர்வாக அதிகாரி பீட் லாவ் கடந்த ஆண்டு டிசம்பரில் உறுதிப்படுத்தினார். ஒன்பிளஸ் வாட்ச் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடப்படும் என்று பீட் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் டிசைன்

ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் டிசைன்

மேலும், அவர் குறிப்பிட்டிருந்தது போல், புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவில் உள்ள ஐஎம்டிஏ (இன்ஃபோகாம் மீடியா டெவலப்மென்ட் அத்தாரிட்டி) இணையதளத்தில் ஒன்பிளஸ் வாட்ச் என்ற பெயரிலும், மாடல் எண் W301GB என்ற எண்ணுடன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் காணப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் வலதுபுறத்தில் இரண்டு பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வட்ட வடிவ டிஸைனுடன் வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

டிசைன் பேட்டர்ன்

டிசைன் பேட்டர்ன்

ஒன்பிளஸ் நிறுவனம் முன்பு அதன் புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் முதல் ஓவியங்களை ஜெர்மன் காப்புரிமை மற்றும் வர்த்தக முத்திரை அலுவலகமான டிபிஎம்ஏவுக்கு சமர்ப்பித்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வலதுபுறத்தில் வழங்கப்பட்டுள்ள இரண்டு பட்டன்கள், நேவிகேஷன் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் டிசைன் பேட்டர்ன் இதை தெளிவாக ஓவியங்கள் மூலம் காண்பித்துள்ளது.

ஸ்போர்ட்ஸ் மாடலும் அறிமுகமா?

ஸ்போர்ட்ஸ் மாடலும் அறிமுகமா?

இருப்பினும், ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்சின் இடதுபுறத்தில் பட்டன்கள் எதுவும் இல்லை. கடிகாரத்தின் பின்புறத்தில் நான்கு சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளது. இது அநேகமாக இரத்த அழுத்தம் போன்றவற்றை அளவிடுவதற்குப் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், இரண்டு சார்ஜிங் துளைகள் ஸ்மார்ட் வாட்சின் பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது. இரண்டாவது வடிவமைப்பு வேறு ஸ்டார்ப் வடிவத்தைக் காட்டியது. இரண்டாவதுஸ்ட்ராப் மாடல் சாதாரண ஸ்ட்ராப் போல் இல்லாமல் ஸ்போர்ட்ஸ் லுக்கில் உள்ளது. ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் மாடலிலும் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Watch to launch on March 23 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X