இறக்கினான் பாரு OnePlus.. 59 கிராம் எடையில் 10 நாள் பேட்டரி.. பட்ஜெட் விலையில் புது ஸ்மார்ட் வாட்ச்!
ஒன்பிளஸ் நிறுவனம் "சொன்னபடியே" ஒரே நேரத்தில் 3 புதிய தயாரிப்புகளை இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் அறிமுகம் செய்துள்ளது. அவைகள் - ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போன், ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) டேப்லெட் மற்றும் ஒன்பிளஸ் வாட்ச் லைட் (OnePlus Watch Lite) ஸ்மார்ட்வாட்ச் ஆகியவைகள் ஆகும்.
இந்த 3 தயாரிப்புகளில் "பட்ஜெட் வாசிகளின்" ஒட்டுமொத்த கவனமும் ஒன்பிளஸ் வாட்ச் லைட் மாடல் மீதுதான் உள்ளது. ஏனென்றால் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.47,999 க்கும், ஒன்பிளஸ் பேட் கோ 2 ஆனது ரூ.25,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. ஆக - ஒன்பிளஸ் வாட்ச் லைட் தான் (இந்த மூன்றிலும்) மிகவும் மலிவான தயாரிப்பாகும்.

என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் வாட்ச் லைட் மாடல் ஆனது 1.46-இன்ச் சர்குலர் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 464 x 464 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், சபையர் கிரிஸ்டல் கிளாஸ் மற்றும் 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஃபிரேமில் வைக்கப்பட்டுள்ளது.
அளவீடுகளை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்வாட்ச் வெறும் 8.9 மிமீ தடிமன் மற்றும் சுமார் 59 கிராம் எடையை கொண்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்வாட்சை பிளாக் அல்லது ஒயிட் ஃப்ளோரோரப்பர் ஸ்ட்ராப் (Fluororubber strap) உடன் இணைக்கலாம். அதில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொக்கியும் உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை, ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், ஒன்பிளஸ் வாட்ச் லைட் ஸ்மார்ட் வாட்ச் மாடல் ஆனது 10 நாட்கள் வரை நீடிக்கும். இது கூகுளின் வியர் ஓஎஸ் இல்லாமல் ஆக்சிஜென் ஓஎஸ் வாட்ச் 7.1 கொண்டு இயங்குகிறது. இருப்பினும், இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் டிவைஸ்களை (ஐஓஎஸ் 14 அல்லது அதற்கு மேற்பட்டவை) ஆதரிக்கிறது.
இது கூகுள் தளத்துடன் ஒப்பிடும்போது இலகுவான மென்பொருளாகும், இது இரண்டு டிவைஸ்களுடன் ஒரே நேரத்தில் ஒத்திசைக்க உங்களை அனுமதிக்கும் டூயல் சின்க் அம்சத்தையும் கொண்டுள்ளது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய பட்ஜெட் ஸ்மார்ட்வாட்ச் ஆனது இதய துடிப்பு கண்காணிப்பு, இரத்த ஆக்ஸிஜன் கண்காணிப்பு, ஸ்கிம் வெப்பநிலை மேப்பிங், மன அழுத்த அளவு கண்காணிப்பு மற்றும் தூக்க கண்காணிப்பு ஆகியவைகளையும் வழங்கும்
100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்களுடன் வரும் ஒன்பிளஸ் வாட்ச் லைட் மாடல் ஆனது டிராப் கண்டறிதலுக்கான ஆதரவையும் கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பாஸ்ட் சார்ஜிங், 44 மிமீ கேசிங், நீர் மற்றும் தூசி எதிர்ப்பிற்கான IP68 மதிப்பீடு ஆகியவைகளை கொண்டுள்ளது.
என்ன விலை? ஒன்பிளஸ் வாட்ச் லைட் ஸ்மார்ட் வாட்ச் ஆனது ஐரோப்பிய சந்தையில் இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ.16,830 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற பிற பிராந்தியங்களுக்கான விலை மற்றும் கிடைக்கும் விவரங்கள் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை, அதுகுறித்த தகவல் கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.
ஒன்பிளஸ் 15ஆர் விலை மற்றும் சேல் ஆபர்: பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.47,999 என்றும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் அசல் விலை ரூ.52,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் அறிமுக சலுகையின் கீழ் முறையே ரூ.3000 மற்றும் ரூ.5000 பேங்க் ஆபர் (ஆக்சிஸ் மற்றும் எச்டிஎப்சி) அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பேஸிக் 12ஜிபி ரேம் + 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.44,999 ஆகவும், ஹை-எண்ட் 12ஜிபி ரேம் + 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.47,999 ஆகவும் குறைக்க முடியும்.
ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது சார்கோல் பிளாக் மற்றும் மின்ட் க்ரீன் ஆகிய 2 கலர்களில் வாங்க கிடைக்கும். அதே நேரத்தில் ஒன்பிளஸ் 15ஆர் ஏஸ் எடிஷன் எலக்ட்ரிக் வயலட் கலரில் வாங்க கிடைக்கும். முன்பதிவு தொடங்கி விட்டது. விற்பனை டிசம்பர் 22 ஆம் தேதி முதல் ஆரம்பம்.


Click it and Unblock the Notifications








