இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் வாட்ச் ஹாரி பாட்டர் லிமிடெட் எடிஷன்.!

|

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் தனித்துவமான அம்சங்களுடன் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, வாட்ச் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் இந்நிறுவனத்தின் சாதனங்கள் இந்தியாவில் அதிகளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஹாரி

இந்நிலையில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த
சாதனம் தனித்துவமான அம்சங்களுன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த சாதனம் வட்ட வடிவிலான டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
பின்பு ஹாரி பாட்டர் தீமில் வாட்ச் ஃபேஸ்களும் கொடுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மாதிரி இல்ல ஒரிஜினல்- பூமிக்கு வந்துட்டாங்க: 12 நாட்கள் விண்வெளியில் வெற்றிகரமாக நடந்த படப்படிப்புமாதிரி இல்ல ஒரிஜினல்- பூமிக்கு வந்துட்டாங்க: 12 நாட்கள் விண்வெளியில் வெற்றிகரமாக நடந்த படப்படிப்பு

 ஃபிட்னஸ் விஷயத்தில் அதிக

அதேபோல் ஃபிட்னஸ் விஷயத்தில் அதிககவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். அதாவது 110 விதமான வொர்க்-அவுட் மோட்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் வாட்ச். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சும்மா இல்ல 42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்- அமேசான் அதிரடி சலுகை!சும்மா இல்ல 42% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்: வீட்டையே தியேட்டராக மாற்றலாம்- அமேசான் அதிரடி சலுகை!

ன்பிளஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர்

மேலும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஹாரி பாட்டர் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட் வாட்ச் மாடலில் 1.39-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதி மற்றும் 2.5D கர்வ்டு (Curved) கிளாஸ் உள்ளது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்.

புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்!புது கலர்., வேற லெவல் லுக்: ஒப்போ கே9 ப்ரோ ஸ்மார்ட்போனின் புது மாறுபாடு அக்டோபர் 20- விலை, அம்சங்கள்!

த சாதனத்திற்கு ஹாரி பாட்

குறிப்பாக இந்த சாதனத்திற்கு ஹாரி பாட்டர் நவலில் வரும் காதாப்பாத்திரங்கள் வாட்ச் ஃபேஸ்களாக கொடுத்துள்ளது அந்நிறுவனம். மேலும் இதன் ஸ்ட்ரேப் தோலினால் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அழைப்புகள் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷனைஇதில் மேனேஜ் செய்யலாம்.

Vi நிறுவனத்திற்கு கிடைக்கும் 20,000 கோடி ரூபாய்.. அரசு கொடுக்கும் பணம் மட்டுமே எவ்வளவு தெரியுமா?Vi நிறுவனத்திற்கு கிடைக்கும் 20,000 கோடி ரூபாய்.. அரசு கொடுக்கும் பணம் மட்டுமே எவ்வளவு தெரியுமா?

 ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்த

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் தெரிவித்த தகவலின்படி, இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலை ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியிலும் கனெக்ட் செய்து பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. வரும் 21-ம் தேதி இந்த ஸ்மார்ட் வாட்ச் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த சாதனத்தின்விலை 16,999 ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போ

ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. அதேபோல் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் Dimensity 1200-AI SoC சிப்செட் வசதி, OxygenOS 11.3 சார்ந்தஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4500 எம்ஏஎச் பேட்டரி, உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி மாடல்.

மிலிட்டரி தர ஆதரவுடன் அறிமுகமான நோக்கியா எக்ஸ்ஆர் 20- ஒரு மணிநேரம் நீருக்குள்ளயே செயல்படுமாம்!மிலிட்டரி தர ஆதரவுடன் அறிமுகமான நோக்கியா எக்ஸ்ஆர் 20- ஒரு மணிநேரம் நீருக்குள்ளயே செயல்படுமாம்!

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம்

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா-வைட் கேமரா + 2எம்பி மோனோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமராஆதரவைக் கொண்டுள்ளது
இந்த ஒன்பிளஸ் நோர்ட் 2 5ஜி ஸ்மார்ட்போன்.

Best Mobiles in India

English summary
OnePlus Watch Harry Potter Limited Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X