போன்னே அப்டி இருக்கும்., இந்த வாட்ச் கேட்கவா வேணும்- ஒன்பிளஸ் வாட்ச் விற்பனை தேதி அறிவிப்பு!

|

ஒன்பிளஸ் வாட்ச் ஆனது ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போன்களுடன் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட்டது. இந்த வாட்ச் 4ஜிபி சேமிப்பக வசதியுடன் ஐபி68 தூசி மற்றும் நீர் எதிர்ப்பு தன்மையோடு வருகிறது. ஒன்பிளஸ் வாட்ச் ஏப்ரல் 21 ஆம் தேதி ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு கிடைக்கும் எனவும் ஏப்ரல் 22 ஆம் தேதிமுதல் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் வாட்ச் விற்பனை தேதி

ஒன்பிளஸ் வாட்ச் விற்பனை தேதி

ஒன்பிளஸ் வாட்ச் அதன் முதல் விற்பனையை இந்தியாவில் ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த விற்பனையானது ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த அறிமுகம்தான் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்வாட்ச் ஆகும், கடந்த மாதம் ஒன்பிளஸ் 9 தொடர் ஸ்மார்ட்போனுடன் இந்த வாட்ச் வெளியிடப்பட்டது. மேலும் அனைத்து பயனர்களுக்கு திறந்த விற்பனை ஏப்ரல் 22 ஆம் தேதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஸ்மார்ட்வாட்ச்சின் வலது பக்கத்தில் இரண்டு பட்டன்கள் இருக்கிறது. இதில் சுற்று டயல் ஆப்ஷன் இறுக்கிறது. இது கூகுள் வியர்ஓஎஸ் பயன்படுத்தவில்லை அதற்கு மாறாக ஆர்டிஓஎஸ் அடிப்படையாகக் கொண்டுள்ளது. பேட்டரி ஆயுளுக்கு இது பயனுள்ள அம்சமாக இருக்கிறது.

1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே

1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்வாட் ஆனது 1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 454x454 பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ்

46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ்

குறிப்பாக ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 46 எம்எம் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸ் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு நோட்டிபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்களை இயக்கும் வசதியை கொண்டு இந்த ஸ்மார்ட் வாட்ச் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..அம்பலமான வாட்ஸ்அப் பாதுகாப்பு குறைபாடு: உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படலாம்..திடுக்கிடும் ரிப்போர்ட்..

4ஜிபி மெமரி ஆதரவு

4ஜிபி மெமரி ஆதரவு

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் 4ஜிபி மெமரி ஆதரவு உள்ளது. மேலும் இந்த சாதனம் பெரும்பாலான ப்ளூடூத் இயர்பட்களுடன் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதியுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

ஒன்பிளஸ் டிவி

ஒன்பிளஸ் டிவி

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஒன்பிளஸ் டிவியுடன் இணைந்து ரிமோட் போன்று இயங்குகிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஒன்பிளஸ் டிவியின் ஒலியை அதிகரிக்கவும், குறைக்கவும் உதவும், பின்பு டிவியை ஆப் செய்ய கூட இந்த ஸ்மார்ட்வாட்ச் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட்

இதுதவிர 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச். பின்பு 110-க்கு அதிகமான உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

402 எம்ஏஎச் பேட்டரி

402 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்-ல் மிகவும் முக்கியம் பேட்டரி வசதி தான். அதன்படி, 402 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு தேவையாக பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருப்பதால், வெறும் ஐந்து நிமிடங்களில் ஒரு நாளைக்கு தேவையான திறனையும், 20 நமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Watch First Sale is announced to all users on April 22

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X