Home
Gadgets

சத்தமில்லாமல் ஒன்பிளஸ் வாட்ச் ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம்.! என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து சாதனங்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களும் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 கடந்த மார்ச் மாதம்

மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் தனது முதல் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது. குறிப்பாக ஒன்பிளஸ் 9 மாடல்களுடன் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அந்த அறிமுகத்தின் போது ஒன்பிளஸ் வாட்ச் கிளாசிக் எடிஷன் மட்டுமே வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒன்பிளஸ்வாட்ச் மாடலின்

தற்சமயம் இந்த ஒன்பிளஸ்வாட்ச் மாடலின் மற்றொரு வேரியண்ட் கோபால்ட் எடிஷன் எனும் பெயரில் அறிமுகமாகி உள்ளது. அதன்படி இப்போது சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இந்த ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன். குறிப்பாக புதிய டிசைன் கொண்டுள்ளது, அதேபோல் இதன் விலை கிளாசிக் எடிஷன் மாடலை விட அதிகமாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்

இந்த கோபால்ட் எடிஷன் மாடலில் சபையர் கிளாஸ் கவர், கோபால்ட் அலாய் பிரேம், 316L ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. மேலும் வட்ட வடிவ டையல் கோல்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. பின்பு இதனுடன் லெதர் மற்றும் புளுரோ ரப்பர் ஸ்டிராப்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர ஒன்பிளஸ் வாட்ச் அம்சங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. குறிப்பாக ஒன்பிளஸ் வாட்ச் கோபால்ட் எடிஷன் விலை (இந்திய மதிப்பில்) ரூ.18,250-ஆக உள்ளது. மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

 1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே

1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே

ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்வாட் ஆனது 1.39 இன்ச் எச்டி AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 454x454 பிக்சல் தீர்மானம் மற்றும் 2.5டி வளைந்த கிளாஸ் பாதுகாப்பு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாதனம். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ச் வெளிவந்துள்ளதால்

நோட்டிபிகேஷன், அழைப்புகளை மேற்கொள்வது, நிராகரிப்பது, மியூசிக், புகைப்படங்களை எடுப்பது போன்ற அம்சங்களை இயக்கும் வசதியை கொண்டு இந்த ஸ்மார்ட் வாட்ச் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

4ஜிபி மெமரி ஆதரவு

4ஜிபி மெமரி ஆதரவு

இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் 4ஜிபி மெமரி ஆதரவு உள்ளது. மேலும் இந்த சாதனம் பெரும்பாலான ப்ளூடூத் இயர்பட்களுடன் இணைந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தனித்துவமான மென்பொருள் வசதியுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது.

ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஒன்பிளஸ் டிவியுட

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஒன்பிளஸ் டிவியுடன் இணைந்து ரிமோட் போன்று இயங்குகிறது. சுருக்கமாககூறவேண்டும் என்றால், ஒன்பிளஸ் டிவியின் ஒலியை அதிகரிக்கவும், குறைக்கவும் உதவும், பின்பு டிவியை ஆப் செய்ய கூட இந்த ஸ்மார்ட்வாட்ச் உதவும்என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ்  ஸ்மார்ட்வாட்ச். பின்பு 110-க்கு

இதுதவிர 5ATM+IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச். பின்பு 110-க்கு அதிகமான உடற்பயிற்சிகளை தானாக கண்டறிந்து கொள்ளும் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய சாதனம்.

திறனையும், 20 நமிடங்களில் ஒரு வாரத்திற்கு

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச்-ல் மிகவும் முக்கியம் பேட்டரி வசதி தான். அதன்படி, 402 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச். குறிப்பாக இரண்டு வாரங்களுக்கு தேவையான பேட்டரி பேக்கப் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் ஒன்பிளஸ் நிறுவனம் சார்பில் வெளியிட்ட தகவலின்படி, இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக்
கொண்டிருப்பதால், வெறும் ஐந்து நிமிடங்களில் ஒரு நாளைக்கு தேவையான திறனையும், 20 நமிடங்களில் ஒரு வாரத்திற்கு தேவையான பேக்கப் வசதியை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Watch Cobalt Limited Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X