Home
Gadgets

OnePlus சர்ப்ரைஸ்.. AMOLED ஸ்கிரீன், 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்.. அறிமுகமானது புது ஸ்மார்ட் வாட்ச்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3) மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தனித்துவமான வடிவமைப்பு, AMOLED ஸ்கிரீன், 2200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், ஐபி68 ரேட்டிங், 16 நாட்கள் பேட்டரி பேக்கப் எனப் பல்வேறு சிறபபான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் வெளிவந்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் விலை மற்றும் அம்சங்களை சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் வாட்ச் 3 அம்சங்கள் (OnePlus Watch 3 Specifications): 1.5-இன்ச் LTPO AMOLED ஸ்கிரீன் உடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடல். மேலும் 466 x 466 பிக்சல்ஸ், 2200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ், 2.5D sapphire கிளாஸ் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் ஸ்கிரீன்.

OnePlus சர்ப்ரைஸ்.. அறிமுகமானது புது ஸ்மார்ட் வாட்ச்.. எந்த மாடல்?

தரமான ஸ்னாப்டிராகன் W5 + BES2800BP பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த பிராசஸர் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வியர்ஓஎஸ் (WearOS) மற்றும்
ஆண்ட்ராய்டு 8.0 (Android 8.0) அல்லது அதற்கு மேற்பட்ட ஓஎஸ் டிவைஸ்களில் கனெக்ட் செய்து கொள்ளலாம்.

100+ வொர்க்அவுட் மோட்கள் (100+ Workout modes) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடல். அதேபோல் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) அம்சமும் இதில் உள்ளது. அதாவது ஆழ்ந்த தூக்கம், லேசான தூக்கம், விழித்திருக்கும் நேரம், தூக்க சுவாச விகிதம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), மணிக்கட்டு வெப்பநிலை செயல்பாடு (Wrist Temperature function), போன்ற தரமான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச் 3 மாடல் வெளிவந்துள்து. அதேபோல் கூகிள் ஹெல்த் கனெக்ட் சேவையை (Google Health Connect service) ஆதரிக்கும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.

ஆக்சிலெரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோ சென்சார் (Gyro Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic sensor), ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), லைட் சென்சார், பாரோமீட்டர் சென்சார் (Barometer Sensor), டெம்பரேச்சர் சென்சார் போன்ற பல சென்சார் ஆதரவுகள் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.

குறிப்பாக ஒன்பிளஸ் வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்ச் மாடலில் மாடலில் IP68 மற்றும் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) வருகிறது. மேலும் இதில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கருடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு 32ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச்.

OnePlus சர்ப்ரைஸ்.. அறிமுகமானது புது ஸ்மார்ட் வாட்ச்.. எந்த மாடல்?

புளூடூத் 5.3, டூயல் பேண்ட் L1+L5, க்ளோனஸ் (Glonass), ஜிபிஎஸ், கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெகடிவிட்டிஆதரவுகள் இதில் உள்ளன. 631mAh பேட்டரி ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடல் வெளிவந்துள்ளது. எனவே 16 நாட்கள் வரை இது பேட்டரி பேக்கப் வழங்கும் என நிறுவனம் கூறுகிறது. எமரால்டு டைட்டானியம் ( Emerald Titanium) மற்றும் அப்சிடியன் டைட்டானியம் (Obsidian Titanium)நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை வாங்க முடியும்.

ஆனால் ஒன்பிளஸ் வாட்ச் 3 ஸ்மார்ட்வாட்ச் ஆனது தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்தியாவிலும் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு ஒன்பிஸ் வாட்ச் 3 மாடலின் விலை ரூ.27,170-ஆக உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Watch 3 launched: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X