இப்படி ஒரு Smart Watch-க்கு தானே இந்தியாவே ஏங்குச்சு.. ECG ஆதரவு, 60 நொடி செக்கப், 2GB ரேம், 648mAh பேட்டரி!
இசிஜி (ECG) என்று சுருக்கமாக அழைக்கப்படும் எலக்ட்ரோ கார்டியோகிராம் (Electrocardiogram ஆதரவு, 60 நொடிகளில் விரைவான ஹெல்த் செக்கப், 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி, 648எம்ஏஎச் பேட்டரி என.. "இப்படி ஒரு ஸ்மார்ட் வாட்ச்சிற்கு தானே இந்தியாவே ஏங்கியது!" என்று கூறும்படியான அம்சங்களுடன் ஒன்பிளஸ் வாட்ச் 3 தயார் ஆகிறது!
2024 பிப்ரவரியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலின் அப்கிரேடெட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் வாட்ச் 3 (OnePlus Watch 3) மாடல், வருகிற ஜனவரி 7 ஆம் தேதி நடக்கும் உலகளாவிய வெளியீட்டு நிகழ்வின் போது அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நிகழ்வில் தான் ஒன்பிளஸ் 13 மற்றும் ஒன்பிளஸ் 13ஆர் ஆகிய ஸ்மார்ட்போன்கள் இந்தியா மற்றும் உலகளவில் அறிமுகம் செய்யப்பட உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒன்பிளஸ் வாட்ச் 3 குறித்து வெளியான லேட்டஸ்ட் லீக் ஒன்றின் வழியாக, இதில் சில புதிய ஹெல்த் ஃபீச்சர்ஸ் (New Health Features) சேர்க்கப்பட உள்ளன என்கிற விவரங்களை அறிய முடிகிறது. ஆண்ட்ராய்டு அத்தாரிட்டி ஆனது ஓஹெல்த் ஆப்பின் (OHealth App) லேட்டஸ்ட் வெர்ஷன் 4.30.11_e27d199_241122 இன் ஏபிகே டீயர்டவுன் மூலம் இந்த புதிய அம்சங்களை கண்டறிந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற விவரங்களின்படி ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலில் இசிஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் எலக்ட்ரோ கார்டியோகிராமிற்கான ஆதரவு இருக்கும். கூடவே ஏட்ரியல் ஃபைப்ரிலேஷன் (AFib), ப்ரேக்வென்ட் பிவிசி-க்கள், அதிக அல்லது குறைந்த இதயத் துடிப்புகள் மற்றும் பலவற்றை கண்டறிய உதவும் அம்சங்கள் இடம்பெறும்.
மேலும் ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலில் மணிக்கட்டு வெப்பநிலை செயல்பாடு (Wrist Temperature function) குறித்த தகவலையும் வழங்கும். இதன்கீழான விவரங்கள் குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு கடிகாரத்துடன் உறங்குவதன் மூலமும், குறைந்தபட்சம் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் நீடிக்கும் ஒரு தூக்க அமர்வின் போது அணுக கிடைக்கும்.
ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாக 60-செக்கண்ட் செக்கப் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த செயல்பாடு இரத்த ஆக்ஸிஜன் அளவுகள், இசிஜி அளவீடுகள், தூக்கம், இரத்த நாளங்களின் வயது ஆகிய 7 ஹெல்த் இன்டிகேட்டர்களின் கீழ் இதய ஆரோக்கியம், இரத்த நாளங்களின் நெகிழ்வு மற்றும் தூக்கத்தின் போதான குறட்டை ஆகியவைகளை கண்காணிக்கும்.
ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலில் கவனிக்க வேண்டிய மற்ற முக்கிய அம்சங்களை பொறுத்தவரை, இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஸ்னாப்டிராகன் டபிள்யூ5 ஜென் 1 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இந்த மாடலில் 631mAh-மதிப்பிடப்பட்ட பேட்டரி பேக் செய்யப்படலாம்; இது 648mAh என்கிற வழக்கமான மதிப்பை கொண்டிருக்கலாம்.
ஜனவரி 7 ஆம் தேதி நடக்கும் வெளியீட்டு நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் அதன் ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலுடன் சேர்த்து ஒன்பிளஸ் வாட்ச் 3 ப்ரோ என்கிற மாடலையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை நிர்ணயத்தை பொறுத்தவரை ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடல் சுமார் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 13 விலை நிர்ணயம் எப்படி இருக்கும்? சீன அறிமுகத்திற்கு முன்னால் வெளியான லீக்ஸ்கள் ஒன்பிளஸ் 13-ன் இந்திய விலை ரூ.80,000 வரை செல்லும் என்று கூறின. ஆனால் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் சீன விலை நிர்ணயம் எதிர்பார்த்த அளவிற்கு அதிகமாக இல்லை. நம்பகமான டிப்ஸ்டர்களில் ஒருவரான யோகேஷ் ப்ராரின் (Tipster Yogesh Brar) கணிப்பின்படி, இந்தியாவில் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் விலை ரூ.67,000 முதல் ரூ.70,000 க்குள் இருக்கும்.


Click it and Unblock the Notifications








