Home
Gadgets

புதிய OnePlus வாட்ச் அறிமுகம்.. 32ஜிபி மெமரி.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்? என்ன விலை?

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் வாட்ச் 3 43மிமீ மாடலை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் AMOLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் பிராசஸர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் வாட்ச் 3 43மிமீ மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) அம்சங்கள் (OnePlus Watch 3 Specifications): 1.5-இன்ச் AMOLED ஸ்கிரீன் உடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) மாடல். மேலும் 466 x 466 பிக்சல்ஸ், 2.5D கிளாஸ் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் ஸ்கிரீன்.

புதிய OnePlus வாட்ச் அறிமுகம்.. 32ஜிபி மெமரி.. எந்த மாடல்? என்ன விலை?

தரமான ஸ்னாப்டிராகன் W5 ஜென் 2 சிப்செட் (Snapdragon W5 Gen 1 chipset) வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. அதுவும் இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த ஸ்மார்ட்வாட்ச் வியர்ஓஎஸ் (WearOS) மூலம் இயங்குகிறது. குறிப்பாக சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும்.

100+ வொர்க்அவுட் மோட்கள் (100+ Workout modes) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) மாடல். அதேபோல் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) அம்சமும் இதில் உள்ளது. அதாவது ஆழ்ந்த தூக்கம், லேசான தூக்கம், விழித்திருக்கும் நேரம், தூக்க சுவாச விகிதம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹார்ட் ரேட் மானிட்டர் (Heart Rate Monitor), எஸ்பிஓ2 மானிட்டர் (SpO2 Monitor), மணிக்கட்டு வெப்பநிலை செயல்பாடு (Wrist Temperature function), போன்ற தரமான அம்சங்களுடன் இந்த புதிய ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் கூகிள் ஹெல்த் கனெக்ட் சேவையை (Google Health Connect service) ஆதரிக்கும் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.

ஆக்சிலெரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோ சென்சார் (Gyro Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic sensor), ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor), லைட் சென்சார், பாரோமீட்டர் சென்சார் (Barometer Sensor), டெம்பரேச்சர் சென்சார் போன்ற பல சென்சார் ஆதரவுகள் இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ளன.

குறிப்பாக ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) ஸ்மார்ட்வாட்ச் மாடலில் மாடலில் IP68 வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) வருகிறது. மேலும் இதில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கருடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது. பின்பு 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்வாட்ச். பின்பு இந்த ஸ்மார்ட் வாட்ச் மாடலில் 100 க்கும் மேற்பட்ட வாட்ஸ் பேஸ்களுடன் (100+ Watch Faces) வருகிறது.

புளூடூத், வைஃபை, என்எப்சி, ஜிபிஎஸ், கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெகடிவிட்டிஆதரவுகள் இதில் உள்ளன. 354mAh பேட்டரி ஆதரவுடன் இந்த ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) மாடல் வெளிவந்துள்ளது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 60 மணி நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். அதேபோல் ஃபாஸட் சார்ஜிங் வசதியும் இதில் உள்ளது. சில்வர் ஸ்டீல் மற்றும் பிளாக் ஸ்டீல் நிறங்களில் இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை வாங்க முடியும்.

ஒன்பிளஸ் வாட்ச் 3 (43 மிமீ) மாடல் ஆரம்ப விலை ரூ.25,800-ஆக உள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடல் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Watch 3 43mm launched globally: check specifications, price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X