Home
Gadgets

கிளாசிக் & மாடர்ன்.. OnePlus வாட்ச் 12ஆர் அறிமுகம்.. 12 நாட்கள் பேக்கப்.. ஜிபிஎஸ் கனெக்டிவிட்டி!

ஒன்பிளஸ் சம்மர் லாஞ்ச் இவெண்ட்டில் (OnePlus Summer Launch Event) கூகுளின் வியர் ஓஎஸ், டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ், 12 நாட்கள் பேட்டரி பேக்கப், ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் கிளாசிக் டிசைனில் ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் (OnePlus Watch 2R) மாடலானது, களமிறங்கி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் மாடலின் இந்திய மார்கெட் விலை, முழு பீச்சர்கள் மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் அம்சங்கள் (OnePlus Watch 2R Specifications): இந்த மாடலானது, வின்டேஜ் டிசைனில் மாடர்ன் பீச்சர்களை கொண்டிருக்கிறது. மேட் அலுமினியம் கேஸ் மற்றும் ரவுண்ட் டயல் வருகிறது. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. 50 மீட்டர்கள் ஆழம் வரையில் தாக்குபிடிக்கும். இந்த மாடலில் கூகுளின் வியர் ஓஎஸ் (Wear OS) வருகிறது.

கிளாசிக் & மாடர்ன்.. OnePlus வாட்ச் 12ஆர் அறிமுகம்! 12நாட்கள் பேக்கப்!

ஆகவே, கூகுள் பிளே ஸ்டோர், கூகுள் மேப்ஸ், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் ஃபைல்ஸ் போன்ற ஆப்களை சிங்க் செய்து பயன்படுத்தி கொள்ளலாம். இந்த மாடலில் 100 ஹவர்ஸ் பேக்கப் பெறலாம். பவர் சேவர் மோடில் தொடர்ந்து 12 நாட்களுக்கு பேக்கப் கிடைக்கும். ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் உள்ளது. வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால், நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.

இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் மாடலில் ஸ்னாப்டிராகன் டபுள்யூ5 (Snapdragon W5) மற்றும் பிஈஎஸ் 2700 (BES 2700) ஆகிய டூயல் சிப்செட் சப்போர்ட் வருகிறது. ஆகவே, லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம். பேட்டரி பேக்கப்புக்கு பிஈஎஸ் 2700 சிப்செட் பயன்படுத்தப்படுகிறது. இந்த 2ஆர் மாடலானது, 2 ஜிபி ரேம் + 32 ஜிபி மெமரி சப்போர்ட் கொண்டிருக்கிறது.

கனெக்டிவிட்டியை பார்க்கையில், டூயல் ஃபிரிகொன்சி ஜிபிஎஸ் (Dual-frequency GPS) மற்றும் ப்ளூடூத் வருகிறது. விஓ2 மேக்ஸ் (VO2 Max)டிராக்கர், ஹார்ட் ரேட் டிராக்கர், பிளட் ஆக்ஸிஜன் லெவர் டிராக்கர் சப்போர்ட் வருகிறது. மேலும், வாக்கிங், ஜாக்கிங், சைக்கிளிங் போன்ற ஆக்டிவிட்டி டிராக்கர்கள் வருகின்றன.

கிளாசிக் & மாடர்ன்.. OnePlus வாட்ச் 12ஆர் அறிமுகம்! 12நாட்கள் பேக்கப்!

கூகுள் ஹெல்த் (Google Health) சப்போர்ட் உள்ளது. 80+ வாட்ச் பேஸ்கள் வருகின்றன. 1.4 இன்ச் ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே வருகிறது. ஸ்மார்ட் நோட்டிபிகேஷன், அலாரம், ஸ்டாப்வாட்ச் போன்ற வழக்கமான ஸ்மார்ட் பீச்சர்கள் வருகின்றன. ஸ்பாட்டிஃபை கனெக்டிவிட்டி உள்ளது. IP68 டஸ்ட் ரெசிஸ்டன்ட் உள்ளது.

ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் விலை (OnePlus Watch 2R Price): இந்த வாட்ச் 2ஆர் மாடலானது, ரூ.17,999 பட்ஜெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் ஜூலை 20ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது. இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் மாடலில் ஃபாரஸ்ட் கிரீன் (Forest Green) மற்றும் கன்மென்டல் கிரே (Gunmental Grey) ஆகிய கலர்கள் விற்பனைக்கு வர இருக்கின்றன,

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Watch 2R With Wear OS, Launched in OnePlus Summer Launch Event Check Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X