Home
Gadgets

இதென்ன போனா? பீச்சர்கள் அப்படி.. 32GB மெமரி.. eSIM கனெக்சன்.. 5ATM ரெசிஸ்டன்ட்.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?

கிட்டத்தட்ட ஸ்மார்ட்போனுக்கு நிகரான ஓஎஸ், சிப்செட், ரேம், மெமரி போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஸ்மார்ட் பீச்சர்களாக ஹெல்த் மானிட்டரிங், ஃபாஸ்ட் சார்ஜிங், ஈசிம் கனெக்டிவிட்டி, 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட், ப்ளூடூத் காலிங், எஸ்எம்எஸ், வொர்க் அவுட் மோட்கள் மற்றும் ஆப் சப்போர்ட் ஆகிவற்றுடன் பிரீமியம் டிசைனில் ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) களமிறங்கி இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் விற்பனை விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஒன்பிளஸ் வாட்ச் 2 அம்சங்கள் (OnePlus Watch 2 Specifications): இந்த மாடலில் 1.43 இன்ச் (466 x 466 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 326 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இதுவொரு ஆல்வேஸ்-ஆன் டிஸ்பிளே மாடலாகும். ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் சேசிஸ் கொண்ட மெட்டாலிக் பாடி வருகிறது.

இதென்ன போனா? பீச்சர்கள் அப்படி.. 32GB மெமரி.. eSIM கனெக்சன் மாடல்!

2.5D சபையர் கிரிஸ்டல் (Sapphire Crystal) கவர் பிளேட் வருகிறது. இந்த மாடலில் கலர்ஓஎஸ் வாட்ச் 6.0 (ColorOS Watch 6.0) கொண்ட ஸ்னாப்டிராகன் டபுள்யூ5 ஜென் 1 (Snapdragon W5 Gen 1) சிப்செட் வருகிறது. மேலும், கூடுதல் பர்ஃபாமென்ஸ் கொடுப்பதற்காக பிஈஎஸ்27000பிபி (BES2700BP) என்னும் மற்றொரு சிப்செட் கொண்டிருக்கிறது. 2 ஜிபி ரேம் வருகிறது.

32 ஜிபி மெமரி வருகிறது. ஆட்டோமேட்டிக் வொர்க்-அவுட் டிடெக்சன் (Automatic Workout Detection) கொண்ட 6 வொர்க்-அவுட் மோட்கள் உள்பட 100+ வொர்க்-அவுட் மோட்கள் (Workout Modes) வருகின்றன. இந்த ஒன்பிளஸ் மாடலில் 500mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது.

ஆகவே, 10 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் போதும், 24 மணி நேரங்களுக்கு பேக்கப் கிடைக்கும். அதேபோல ஃபுல் சார்ஜ் செய்து கொள்ள 60 நிமிடங்கள் போதும். ஸ்மார்ட் மோடில் (Smart Mode) 4 நாட்கள் பேக்கப் கிடைக்கும். அதேபோல பவர் சேவர் மோடில் (Power Saver Mode) 12 நாட்களுக்கு பேக்கப் எதிர்பார்க்கலாம். 5ATM ரெசிஸ்டன்ட் வருகிறது.

இதென்ன போனா? பீச்சர்கள் அப்படி.. 32GB மெமரி.. eSIM கனெக்சன் மாடல்!

இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலில் ஈசிம் (eSIM) சப்போர்ட் வருகிறது. ஆகவே, ப்ளூடூத் காலிங், எஸ்எம்எஸ் செய்து கொள்ளலாம். மற்ற கனெக்டிவிட்டி பீச்சர்களை பார்க்கையில் ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), என்எப்சி (NFC), ஜிபிஎஸ் (GPS), கலிலியோ (Galileo), குளோனாஸ் (GLONASS), வை-பை 5ஜி (WiFi 5G) உள்ளிட்டவை வருகின்றன.

அதேபோல சென்சார்களை பொறுத்தவரையில், ஆக்சிலரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோஸ்கோப் சென்சார் (Gyroscope Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic Sensor), ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), ஆப்டிகல் பல்ஸ் ஆக்ஸிமீட்டர், லைட் சென்சார் மற்றும் பாரோமீட்டர் வருகிறது.

ஆகவே, இந்த சென்சார்கள் மூலம் ஸ்லீப் மானிட்டரிங், ஹார்ட் ரேட் மானிட்டரிங், டெய்லி ஆக்டிவிட்டி டிராக்கிங், பிளட் ஆக்ஸிஜன் லெவல் மானிட்டரிங், ஸ்ட்ரெஸ் மானிட்டரிங் உள்ளிட்டவற்றை செய்து கொள்ளலாம். இதற்காக ஓஹெல்த் ஆப் (OHealth App) சப்போர்ட் வருகிறது. மைக்ரோபோன்கள் மற்றும் ஸ்பீக்கர்கள் கொண்டிருக்கிறது.

இந்த வாட்ச் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.20,650ஆக விலை நிர்ணயம் இருக்கிறது. ஜூலை 3ஆம் தேதி முதல் அங்கு விற்பனைக்கு வருகிறது. மெடியோரிட் பிளாக் மற்றும் நெபுளா கிரீன் ஆகிய கலர்களில் வெளியாகி இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே வெளியான வாட்ச் 2 மாடலை போலல்லாமல், புது டிசைன் கொண்டிருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Watch 2 With 2GB RAM, 500mAh Battery Sale From July 3 in China Specifications Price
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X