Home
Gadgets

ஆளுக்கு 1 தூக்குவாங்களே.. பாதிக்கு பாதி விலையில் 100 மணிநேர பேட்டரி வழங்கும் OnePlus Watch.. எந்த மாடல்?

ஒரு நல்ல பிரீமியம் ஸ்மார்ட்வாட்சை "சரியான" ஆபர் விலையில் (பாதிக்கு பாதி விலையில்) வாங்க வேண்டும் என்று காத்திருந்தவர்களுக்கு இதுதான் சூப்பர் சான்ஸ். ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனத்தின் பெஸ்ட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களில் ஒன்று இப்போது பெரும் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. என்ன மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்?

நாம் இங்கே பேசுவது ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) ஸ்மார்ட் வாட்ச் மாடலை பற்றித்தான். இந்த ஸ்மார்ட் வாட்சின் அசல் அறிமுக விலை ரூ.27,999 ஆகும். ஆனால் அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளம் வழியாக இது மெகா தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது.

பாதிக்கு பாதி விலையில் 100 மணிநேர பேட்டரி வழங்கும் OnePlus Watch!

அமேசானில், ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடல் ஆனது தற்போது ரூ.14,749 க்கு வாங்க கிடைக்கிறது. நீங்கள் எஸ்பிஐ (SBI) கார்டு மூலம் மேலும் ரூ.1,474 வரை தள்ளுபடி பெறலாம். கூடவே அமேசான் பே (Amazon Pay) கேஷ்பேக் சலுகையும் உள்ளது. இதெல்லாம் சேர்ந்து ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலின் விலையை ரூ.13,275 ஆக குறைக்கும். அதாவது கிட்டத்தட்ட பாதி விலையை குறைக்கும்.

ஒன்பிளஸ் வாட்ச் 2 முக்கிய அம்சங்கள்:
- 1000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 1.43 இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது
- வியர்ஓஎஸ் 4 (WearOS 4) கொண்டு இயங்குகிறது
- குவால்காம் ஸ்னாப்டிராகன் டபுள்யூ5 மற்றும் பிஇஎஸ்2700 (Qualcomm Snapdragon W5 + BES2700) டூயல் சிப்கள் மூலம் இயக்கப்படுகிறது
- 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
- பேட்டரி ஸ்மார்ட் மோட்-ல் இருந்தால் இது 100 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்பை வழங்கும்
- செயல்பாடுகளை துல்லியமாக கண்காணிக்க இது டூயல் ப்ரெக்வன்சி ஜிபிஎஸ்-ஐ கொண்டுள்ளது.
- 100 க்கும் மேற்பட்ட ஸ்போர்ட்ஸ் மோட்-களுக்கான ஆதரவு உள்ளது.

இதுவொருபக்கம் இருக்க ஒன்பிளஸ் நிறுவனம் இந்தியாவில் தனது சுதந்திர தின விற்பனையையும் (OnePlus Independence Day Sale 2025) அறிவித்துள்ளது. இந்த விற்பனை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நடக்கும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் தவிர்த்து ஒன்பிளஸ் நிறுவனத்தின் பல வகையான ஆடியோ தயாரிப்புகள் மீது டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

முன்னர் ரூ.5,999க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் 4 (OnePlus Buds 4) ஆனது இந்த சிறப்பு விற்பனை காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் ரூ.500 தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது. இதேபோல ரூ.1,699க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 (OnePlus Bullets Wireless Z3) மாடல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளில் ரூ.150 உடனடி வங்கி தள்ளுபடியின் கீழ் வாங்க கிடைக்கிறது.

இதேபோல், ரூ.8,999க்கு விற்கப்பட்ட ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 3 (OnePlus Buds Pro 3) மாடல் தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கி அட்டைகள் மூலம் ரூ.2,000 உடனடி தள்ளுபடியுடன் கூடுதலாக ரூ. 1,000 தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கிறது. கடைசியாக ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) குறிப்பிட்ட கால விலைக்குறைப்பின் கீழ் வாங்க கிடைக்கும்.

ஒன்பிளஸின் இந்த விற்பனை - ஒன்பிளஸ் இந்தியா (OnePlus India) வலைத்தளம், அமேசான் (Amazon), பிளிப்கார்ட் (Flipkart), மின்த்ரா (Myntra) மற்றும் பிளிங்கிட் (Blinkit) வழியாக அணுக முடியும். ஒன்பிளஸ்-ன் இந்த சுதந்திர தின விற்பனை எப்போது முடிவடைகிறது என்பதை ஒன்பிளஸ் இன்னும் வெளியிடவில்லை, ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட சலுகைகள் ஆகஸ்ட் 31 வரை செல்லுபடியாகும் என்று கூறுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Watch 2 Price Drops in Amazon India How to Buy This Smartwatch For Rs 13275
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X