Home
Gadgets

அதிர விடும் பட்ஜெட்.. AMOLED ஸ்கிரீன்.. 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ட்.. அறிமுகமானது ஒன்பிளஸ் வாட்ச்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் நிறுவனம் தொடர்ந்து அசத்தலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு சாதனங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளன. இந்நிலையில் ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலை நேற்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

அதாவது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது அமோலெட் ஸ்கிரீன், 500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல அசத்தலான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலின் விலை மற்றும் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதிர விடும் பட்ஜெட்.. அறிமுகமானது ஒன்பிளஸ் வாட்ச்.. எந்த மாடல்?

ஒன்பிளஸ் வாட்ச் 2 அம்சங்கள் (OnePlus Watch 2 Specifications): 1.43-இன்ச் அமோலெட் 326 பிபிஐ ஸ்கிரீன் (AMOLED 326PPI screen) ஆதரவுடன் வெளிவந்துள்ளது. மேலும் 466 x 466 பிக்சல்ஸ், 600 நிட்ஸ் ப்ரைட்னஸ், 2.5D sapphire கிளாஸ் பாதுகாப்பு மற்றும் பல்வேறு சிறப்பான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் ஸ்கிரீன்.

அதேபோல் ஸ்னாப்டிராகன் W5 + BES 2700 பிராசஸர் வசதியை அடிப்படையாகக் கொண்டு இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலை இயக்குவதற்கு மிகவும் இருக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

100+ வொர்க்அவுட் மோட்கள் (100+ Workout modes) கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடல்.அதேபோல் ஸ்லீப் டிராக்கிங் (Sleep Tracking) அம்சமும் இதில் உள்ளது. அதாவது ஆழ்ந்த தூக்கம், லேசான தூக்கம், விழித்திருக்கும் நேரம், தூக்க சுவாச விகிதம் ஆகியவற்றைக் கண்காணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்சிலெரேஷன் சென்சார் (Acceleration Sensor), கைரோ சென்சார் (Gyro Sensor), ஜியோமேக்னடிக் சென்சார் (Geomagnetic sensor), ஆப்டிகல் ஹார்ட் ரேட் சென்சார் (Optical Heart Rate Sensor), பிளட் ஆக்ஸிஜன் சென்சார் (blood oxygen sensor), ஆம்பியன்ட் லைட் சென்சார் (Ambient Light Sensor)போன்றவை இவற்றுள் உள்ளன.

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் மாடலில் மாடலில் IP68 மற்றும் 5ATM வாட்டர் ரெசிஸ்டன்ஸ் (Water Resistance) வருகிறது. மேலும் இதில் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கருடன் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் (Bluetooth Calling Support) கொடுக்கப்பட்டுள்ளது.குறிப்பாக இந்த ஸ்மார்ட்வாட்ச் மாடலில் உள்ள ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

புளூடூத் 5.3, க்ளோனஸ் (Glonass), ஜிபிஎஸ், கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெகடிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன. மேலும் 32ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு இதில் உள்ளன. குறிப்பாக பிளாக் ஸ்டீல் (Black Steel) மற்றும் ரேடியன்ட் ஸ்டீல் (Radiant Steel) நிறங்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அதிர விடும் பட்ஜெட்.. அறிமுகமானது ஒன்பிளஸ் வாட்ச்.. எந்த மாடல்?

500எம்ஏஎச் பேட்டரி ஆதரவு ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக பவர் சேவர் மோட் பயன்படுத்தினால் 12 நாட்கள் வரை பேட்டரி பேக்கப் கிடைக்கும் என நிறுவனம் கூறுகிறது. வியர்ஓஎஸ் (WearOS)மூலம் இந்த ஸ்மார்ட்வாட்ச் இயங்குகிறது.

என்ன விலை? இந்தியாவில் ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடல் ஆனது ரூ.24,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 4-ம் தேதி முதல் அமேசான், ஒன்பிளஸ்.இன், பிளிப்கார்ட் போன்ற பல முன்னணி ஆன்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வருகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus Watch 2 Launched in India: check specifications price, Sale date
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X