OnePlus Watch 2 அறிமுகத்திற்கு ரெடி.. என்ன விலைக்கு வரும்? என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்?
ஒன்பிளஸ் நிறுவனம் தனது இரண்டாவது ஸ்மார்ட் வாட்ச்சை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. ஒன்பிளஸ் வாட்ச் 2 (OnePlus Watch 2) என்கிற அழைக்கப்படும் இது, கடந்த 2021ல் அறிமுகமான முதல் ஒன்பிளஸ் வாட்ச்சின் அப்கிரேடட் வெர்ஷனாக இருக்குமென்பதில் சந்தேகமே வேண்டாம்.
எப்போது அறிமுகமாகும்? ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலுக்கான சரியான வெளியீட்டு தேதியை ஒன்பிளஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் கூட, இந்த ஸ்மார்ட்வாட்ச் பிஐஎஸ் (BIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தரநிலைகள் பணியகத்தில் (இந்திய சான்றிதழ் தளம்) தோன்றியுள்ளது.

வழக்கமாக பிஐஎஸ் (Bureau of Indian Standards) தளத்தில் காணப்பட்ட எல்லா தயாரிப்புகளுமே கூடிய விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாகி விடும். இதில் இருந்து, ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலின் இந்திய அறிமுகமும் உடனடியாக நடக்கும் என்பதை வெளிப்படையாக அறிய முடிகிறது.
என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலானது சர்குலர் டிஸ்பிளேவை (Circular Display) கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஒரிஜினல் ஒன்பிளஸ் வாட்சை போலவே கஸ்டம் ஆர்டிஓஎஸ் பிளாட்ஃபார்மை (Custom RTOS Platform) தக்கவைத்து கொள்ளும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நினைவூட்டும் வண்ணம் ஒரிஜினல் ஒன்பிளஸ் வாட்ச் ஆனது, தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான (Dust and splash resistance) ஐபி68 ரேட்டிங்கை (IP68 Rating) கொண்டுள்ளது. கூடவே இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் வாட்ச்சில் 5ஏடிஎம் வாட்டர் ரெசிஸ்டென்ட்டையும் (5ATM Water Resistance) கொண்டுள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், ஒரிஜினல் ஒன்பிளஸ் வாட்ச் ஆனது வார்ப் சார்ஜ் பாஸ்ட் சார்ஜிங்கை (Warp Charge Fast Charging) ஆதரிக்கும் 405mAh பேட்டரியை பேக் செய்கிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை பளூடூத் 5.0, ஜிபிஎஸ், க்ளோனாஸ், கலிலியோ மற்றும் பெய்டோ போன்றவைகளை கொண்டுள்ளது.
இது 454 x 454 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் கொண்ட 1.39-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை (AMOLED Display) கொண்டுள்ளது மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் வேர் 4100+ சிப்செட் (Qualcomm Snapdragon Wear 4100+ Chipset) மூலம் இயக்கப்படுகிறது. இந்த வாட்ச் 4ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 1ஜிபி ரேம் உடன் வருகிறது.
ஒரிஜினல் ஒன்பிளஸ் வாட்ச்சில் 100க்கும் மேற்பட்ட வொர்க்அவுட் மோட்கள் (Workout Modes), ஹார்ட் ரேட் (Heart Rate) மானிட்டர் , பிளட் ஆக்ஸிஜன் (Blood Oxygen - SpO2) மானிட்டர், ஸ்லீப் (Sleep) மானிட்டர் மற்றும் ஸ்ட்ரெஸ் (Stress) மானிட்டர் உள்ளிட்ட பல்வேறு ஃபிட்னஸ் அம்சங்களை (Fitness Features) ஆதரிக்கிறது. இது பில்ட்-இன் ஜிபிஎஸ் (Built-in GPS) மற்றும் என்எஃப்சியையும் (NFC) கொண்டுள்ளது.
கடைசியாக ஒன்பிளஸ் வாட்ச் ஆனது ஆண்ட்ராய்டு (Android) மற்றும் ஐஓஎஸ் (iOS) டிவைஸ்களுடன் இணக்கமானதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்வாட்சை ஒன்பிளஸ் ஹெல்த் ஆப்பை (OnePlus Health App) பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்: பயனர்கள் தங்கள் உடற்பயிற்சி முன்னேற்றத்தை கண்காணிக்கலாம், வாட்ச் செட்டிங்ஸை நிர்வகிக்கலாம், புதிய வாட்ச் பேஸ்களை டவுன்லோட் (Download New Watch Faces) செய்யலாம்.

மேற்கண்ட பெரும்பாலான அம்சங்களை ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலிலும் நாம் எதிர்பார்க்கலாம். கூடவே புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 ஆனது ஒப்பீட்டளவில் பல சாத்தியமான மேம்படுத்தல்களையும் (Upgrades) பெறும் என்றும் நாம் எதிர்பார்க்கலாம். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.
என்ன விலைக்கு வரும்? நினைவூட்டும் வண்ணம், ஒரிஜினல் ஒன்பிளஸ் வாட்ச் ஆனது இந்தியாவில் ரூ.16,999 க்கு அறிமுகமானது. புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலானது ரூ.22,999 க்கு அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரியான இந்திய விலை நிர்ணயம் அறிமுக நாளன்று அறிவிக்கப்படும்.


Click it and Unblock the Notifications