ஒன்பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன் அறிமுகம்.! விலை மாற்று விபரக்குறிப்பு.!

|

ஒன் பிளஸ் நிறுவனம் அடுத்தடுத்த அதிரடி அறிமுகங்களினால் தனது பயனர்களைச் சந்தோசத்தில் திக்குமுக்காட வைத்துக்கொண்டிருக்கிறது. அதன் அடுத்த கட்டமாக ஒன் பிளஸ் 6T மொபைல் போனைக் களமிறக்க உள்ளது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இப்போது ஒன் பிளஸ் 6T யுடன் புதிய ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போனும் வெளியிடப்படப்போவதாகச் செய்தி தகவல்கள் நம் செவிகளுக்கு வந்தடைந்துள்ளது.

ஒன்பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன் அறிமுகம்-விலை மாற்று விபரக்குறிப்பு

இதற்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட ஒன் பிளஸ் புல்லட் V2 மாடலில் சில மாறுதல்களுடன் நீடித்து உழைக்கும் பயன்பாட்டுடன் வருகிறது இந்த புதிய ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன். அரமிட் பைபர்கள் மூலம் உருவாக்கப்பட்ட உட்கம்பிகளை கொண்டதால் இந்த இயர்போன் இழுக்கப்படும்பொழுது எளிதாகச் சேதம் அடையாது என ஒன்பிளஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

சிரஸ் லாஜிகுடன் கூடிய டிஎசி கொண்டு கூடுதல் டைனமிக் ரேன்ஜ் மற்றும் அதிக சிக்னல் - நாய்ஸ் விகிதத்துடன் கூடிய சிறந்த ஆடியோ அனுபவத்தை இந்த புல்லட் இயர்போன் நமக்கு வழங்குகிறது. புதிதாக அறிமுகமாக இருக்கும் ஒன் பிளஸ் 6T இல் திரையிலேயே இன்பில்ட் கைரேகை சென்சார் இருக்கும் என்று ஏற்கெனவே நிறுவனம் உறுதிப்படுத்திய நிலையில், இப்போது இந்த இயர்போனும் அத்துடன் வெளியிட இருப்பதால் ஒன் பிளஸ் 6T இல் 3.5mm ஹெட்போன் ஜாக்-கும் நிச்சயம் இருக்காது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயர்போனை ஒன் பிளஸ் 6T மட்டுமின்றி இதே அளவு டைப்-C போர்ட் உடைய அணைத்து மொபைல் போன்களிலும் பயன்படுத்த முடியும்.

ஒன்பிளஸ் டைப்-C புல்லட் இயர்போன் அறிமுகம்-விலை மாற்று விபரக்குறிப்பு

இந்த ஒன் பிளஸ் டைப்-C புல்லட் இயர்போனின் விலை ரூ.1,490 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட ஒன்பிளஸ் 6T இன் விளம்பர படத்தில், அக்டோபர் 11 என்ற தேதி குறிப்பிடப்பட்டிருந்ததால் அந்தத் தேதியில் ஒன் பிளஸ் 6T வெளியிடப்படும் என்று பலர் எதிர்பார்க்கின்றனர். எனவே இந்த இயர்போன் கட்டாயம் ஒன் பிளஸ் 6T உடன் சேர்ந்து நம்மை விரைவில் சந்திக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

Best Mobiles in India

English summary
OnePlus Type-C Bullets earphones announced in India for Rs. 1490 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X