Home
Gadgets

தரமான அம்சங்களுடன் அறிமுகமான OnePlus TV U1S மாடல்கள்: அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலை.!

பொதுவாக சியோமி ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது பட்ஜெட் விலையில் தரமான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்வதால் சியோமி டிவிகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இப்போது ஒன்பிளஸ் நிறுவனமும் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அசத்தலான ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

 ஒன்பிளஸ் டிவி யு1எஸ் சீரிஸ்

ஒன்பிளஸ் டிவி யு1எஸ் சீரிஸ்

நேற்று நடைபெற்ற சம்மர் லான்ச் ஈவென்ட் நிகழ்வில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் டிவி யு1எஸ் சீரிஸ் அறிமுகம் செய்தது. அதாவது 50 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச் என்ற மூன்று அளவுகளில் வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் டிவி யு1எஸ் சீரிஸ். மேலும் இந்த மூன்று ஸ்மார்ட் டிவி மாடல்களும் 4கே டிஸ்பிளே ரெசல்யூஷனைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஒன்பிளஸ் டிவி யு1எஸ் மாடல்களின் விலை

புதிய ஒன்பிளஸ் டிவி யு1எஸ் மாடல்களின் விலை

50-இன்ச் கொண்ட ஒன்பிளஸ் டிவி யு1எஸ் மாடலின் விலை ரூ.39,999-ஆக உள்ளது.
55-இன்ச் கொண்ட ஒன்பிளஸ் டிவி யு1எஸ் மாடலின் விலை ரூ.47,999-ஆக உள்ளது.
65-இன்ச் கொண்ட ஒன்பிளஸ் டிவி யு1எஸ் மாடலின் விலை ரூ.62,999-ஆக உள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

இந்த மூன்று ஒன்பிளஸ் ஸ்மாரட் டிவி மாடல்களும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனுடன் External OnePlus TV camera module ஒன்றும் உள்ளது,இதன் விலை ரூ.2,499-ஆகும். குறிப்பாக இது தனியாக விற்பனை செய்யப்படுகிறது.

3,840x2,160 பிக்சல்கள்

3,840x2,160 பிக்சல்கள்

இப்போது அறிமுகம் செய்யப்பட்ட 50-இன்ச், 55-இன்ச், 65-இன்ச் ஒன்பிளஸ் டிவி யு1எஸ் மாடல்கள் 4கே ரெசல்யூஷனை கொண்டுள்ளன.மேலும் இவை அனைத்துமே 3,840x2,160 பிக்சல்கள் அடிப்படையில் வெளிவந்துள்ளன. மேலும் இவை 10 பிட் கலர் டெப்த் மற்றும் High colour accuracy மற்றும் 2-ஐ விட குறைவான Delta E உடன் 93 சதவீதம் டிசிஐ-பி 3 கவரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளன.

 ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது

குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது ஒன்ப்ளஸின் காமா எஞ்சின் மூலம் இயக்கப்படுகின்றன. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் இவை நாய்ஸ் ரெடெக்ஷன், எம்இஎம்சி, எஃப்.சி.சி, ஆன்டி-அலியாசிங், சூப்பர் ரெசல்யூஷன் மற்றும்
50-க்கும் அதிகமான யுஐ வழிமுறைகளைப் பயன்படுத்துகின்றன.குறிப்பாக மீடியாடெக் பிராசஸர், 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி மெமரி ஆதரவுடன்வெளிவந்துள்ளன இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகள்.

ஆண்ட்ராய்டு டிவி 10

ஆண்ட்ராய்டு டிவி 10

இந்த மூன்று ஸ்மார்ட் டிவிகளுமே ஆண்ட்ராய்டு டிவி 10 அடிப்படையிலான ஆக்ஸிஜன் பிளே 2.0 உடன் இயங்குகின்றன. அதேபோல் இந்த சாதனங்கள் எச்டிஆர் 10 பிளஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளதால் சிறந்த திரை அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம்.

மல்டிகாஸ்ட்

மல்டிகாஸ்ட்

ஆடியோ பொறுத்தவரை அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி டைனோடியோவுடன் இணைந்து டால்பி ஆடியோவை ஆதரிக்கும் 30 வாட் ஸ்பீக்கர்களால் ஆடியோ கையாளப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளில் உள்ள மிகச் சிறப்பு என்னவென்றால், இவற்றில் உள்ள மல்டிகாஸ்ட் மூலம் ஒரே நேரத்தில் இரண்டு ஸ்மார்ட்போன் டிஸ்பிளேக்களை டிவிக்கு அனுப்பப் பார்க்கலாம்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

3 எச்டிஎம்ஐ போர்ட், 2 யுஎஸ்பி போர்ட், ஈதர்நெட் ஜாக், HDMI 2.1 மற்றும் eARC உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளில் கிட்ஸ் மோட்-ஐ இயக்க ஒன்பிளஸ் கனெக்ட் ஆப் வசதியை பயன்படுத்தலாம்.

மைக்ரோஃபோன்கள் மற்றும் ஸ்பீக் நவ்

மைக்ரோஃபோன்கள் மற்றும் ஸ்பீக் நவ்

ஒன்பிளஸ் டிவி யு1எஸ் சீரிஸ் ரீமோட் மாடல் மைக்ரோஃபோன்கள் மற்றும் ஸ்பீக் நவ் அம்சத்துடன் வருகிறது. மேலும் இது கூகுள் குரல் கட்டளைகளை கட்டுப்படுத்த அனுமதிக்கிறது.இந்த ஒன்பிளஸ் டிவிகளில் ஒன்பிளஸ் வாட்ச் கட்டுப்பாடும் உள்ளது. இதுதவிர அமேசான் அலெக்சாவுடனும் இணைந்து செயல்படுகிறது ஒன்பிளஸ் டிவி யு1எஸ் சீரிஸ்

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 5G Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X