Home
Gadgets

மிரள வைக்கும் சேவைகளுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விரைவில் அறிமுகம்! அறிமுக தேதியும் வெளியானது!

ஒன்பிளஸ் நிறுவனம், புதிய ஸ்மார்ட் டிவி தொடரை அறிமுகம் செய்யவுள்ளதாக அண்மையில் அறிவித்திருந்தது. அதன்படி அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி பற்றிய முக்கிய தகவல்கள் ஆங்காங்கே கசிந்து கொண்டிருந்தது.

மிரள வைக்கும் சேவைகளுடன் ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி விரைவில் அறிமுகம்!

தற்பொழுது ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி பற்றிய உண்மை தகவல்கள் அதன் அறிமுகம் தேதியுடன் வலைத்தளத்தில் முக்கிய விபரங்களுடன் வெளியாகியுள்ளது.

உண்மையில் ஒன்பிளஸ் டிவி ஸ்மார்ட் டிவி தானா?

உண்மையில் ஒன்பிளஸ் டிவி ஸ்மார்ட் டிவி தானா?

ஒன்பிளஸ் அறிமுகம் செய்யப் போகும் புதிய ஸ்மார்ட்டிவி உண்மையில் ஸ்மார்ட் டிவி தானா அல்லது AI (செயற்கை நுண்ணறிவு) கொண்ட அதிநவீன ஸ்மார்ட் டிவியா? என்ன விலையில் என்ன சிறப்பம்சங்களுடன் அறிமுகம் செய்யப்படும்? என்ற பல கேள்விகளுக்கான பதில் தற்பொழுது கிடைத்துள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி அறிமுக தேதி

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி அறிமுக தேதி

அண்மையில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்டிவி செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியாகவுள்ள மாடல்கள்

வெளியாகவுள்ள மாடல்கள்

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பற்றி வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச், 55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, மற்றும் 75Q2US என்ற மாடல் எண்களுடன் தனது ஸ்மார்ட் டிவிகளை பதிவு செய்துள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் வெளியிடப்போகும் ஸ்மார்ட் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி அல்ல என்பது உறுதியாகியுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விலை

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விலை

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 5ஜி இணக்கத்துடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தகவல் வட்டாரம்.

Best Mobiles in India

English summary
Oneplus Tv Series Will Launch On September 26 With This Specification And Price In India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X