OnePlus TV வாங்க சரியான நேரம் இதுதான்! விலை மற்றும் சலுகை விபரம்!
ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி சீரிஸ்கள் இப்போது நிறுவனத்தின் சொந்த ஆன்லைன் ஸ்டோரில் விற்பனைக்கு கிடைக்குமென்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் oneplus.in வலைத்தளத்தில் இப்பொது ஸ்மார்ட் டிவிகளுக்கான விற்பனை நடைபெறுகிறது. இப்போது வரை, ஒன்பிளஸ் டிவி அமேசான் இந்தியா தளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விற்பனையின் போது ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஒன்பிளஸ் யு சீரிஸ், ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் மற்றும் பிரீமியம் ஒன்பிளஸ் க்யூ 1 சீரிஸ் ஆகியவை அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்பட்டது.

தற்போதைய அறிவிப்பின்படி ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான oneplus.in இந்தியா வலைத்தளத்திலிருந்து ஒன்பிளஸ் யு சீரிஸ், ஒன்பிளஸ் ஒய் சீரிஸ் மற்றும் பிரீமியம் ஒன்பிளஸ் க்யூ 1 சீரிஸ் ஆகிய ஸ்மார்ட் டிவிகள் விற்பனைக்குக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த விற்பனையை ஒன்பிளஸ் நிறுவனம் அமேசான் விற்பனைக்குப் பின்னர் பிரத்தியேகமாக தற்பொழுது தனது ஆன்லைன் ஸ்டோரில் துவங்கியுள்ளது.

ஒன்பிளஸ் டிவி 32Y1 ஸ்மார்ட் டிவியின் விலை வெறும் ரூ .12,999 என்று விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், இதன் 43Y1 மாடல் விலை வெறும் ரூ .22,999 ஆகும். ஒன்பிளஸ் டிவி 55U1 மாடலின் விலை வெறும் ரூ .49,999 என்ற விலையில் கிடைக்கிறது.

ஒன்பிளஸ் டிவி Q1 சீரிஸ்கடந்த 2019 ஆம் ஆண்டில் ரூ .69,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒன்பிளஸ் டிவி Q1 வெறும் ரூ .69,900 என்ற விலையிலும், அதன் Q1 ப்ரோ மாடல் ரூ .99,900 என்ற விலையில் கிடைக்கிறது.

அதிகாரப்பூர்வ ஆன்லைன் கடையிலிருந்து ஒன்பிளஸ் டிவியை வாங்கும் நுகர்வோருக்குக் கூடுதல் சலுகையாக 6 மாத வட்டி இல்லா ஈ.எம்.ஐ. வழங்கப்படுகிறது. கூடுதலாக, ஒன்பிளஸ் கடையிலிருந்து ஆகஸ்ட் 15 வரை டிவியை வாங்கும் முதல் 100 ரெட் கேபிள் கிளப் உறுப்பினர்களுக்கு ரூ .1,000 மதிப்பிலான கிஃப்ட் வவுச்சரையம் ஒன்பிளஸ் நிறுவனம் வழங்குகிறது என்று தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications