ஒன்பிளஸ் டிவி மாடல்களுக்கு வழங்கப்பட்டுள்ள புத்தம் புதிய அம்சம்.!

|

ஒன்பிளஸ் டிவி மாடல்களின் ரீமோட் மாடல்களுக்கு நெட்ஃபிலிக்ஸ் ஆதரவு கிடைத்துள்ளது, அதன்படி பயன்களுக்கு வேண்டி அந்நிறுவனம் புதிய ரிமோடடை அறிமுகம் செய்துள்ளது, அதில் பிரத்யேக நெட்ஃபிலிக்ஸ் பொத்தான் இடம்பெற்றுள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

 ஒன்பிளஸ் டிவி பயனர்கள்

ஒன்பிளஸ் டிவி பயனர்கள்

தற்போதுள்ள ஒன்பிளஸ் டிவி பயனர்கள் புதிய ரிமோட்டை இலவசமாகப் பெறுவார்கள் என தி மொபைல் இந்தியன் தளத்தில் அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதன்படி இலவச நெட்ஃபிக்ஸ் ரிமோட்டைப் பெற பயனர்கள் நிறுவனத்தின் வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும். மேலும் இந்த ஸ்மார்ட் டிவிகளை தேர்வு செய்யப்பட்ட வங்கி காடுகளை பயன்படுத்தி வாங்கினால் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும். மேலும் இந்த சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் டிவி

ஒன்பிளஸ் டிவி Q1 சாதனம் பொதுவாக 55-இன்ச் 4கே கியூஎல்இடி ஸ்கிரீன் அமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 3840 x 2160 பிக்சல் திர்மானம், 16:9 திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சத்தைக் கொண்டு வெளிவந்துள்ளது. அதேபோல் ஒன்பிளஸ் டிவி Q1 ப்ரோ ஸ்மார்ட் டிவி ஆனது 55-இன்ச் கியூஎல்இடி ஸ்கிரீன் மற்றும் 100Hz refresh rate, local dimming zones ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஒன்பிளஸ் டிவிகள் ஆனது standard மற்றும் Pro என்கிற இரண்டு வேரியண்ட்களின் கீழ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!மொபைல்போன் வாங்கினால் 1கிலோ வெங்காயம் இலவசம்.!

மதிப்பெண்களை

இந்த ஸ்மார்ட் டிவிகள் 4கே ஆதரவுடன், 96 சதவிகித DCIP-3 மதிப்பெண்ணைக் கொண்டுள்ளது, கூடவே 120 சதவிகித NTSC
மதிப்பெண்ணையும் கொண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் உலகில் எந்தவொரு ஸ்மார்ட் டிவியும் பெறாத உயர்ந்த மதிப்பெண்களை இந்த ஒன்பிளஸ் டிவி பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்படுகிறது.

 உள்ளடக்கத்தில்

பின்பு அனைவரும் எதிர்பார்த்தபடி ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளில் Gamma Color Magic ப்ராசஸர் இடம்பெற்றுள்ளது, எனவே இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த டிவிகளில் உள்ள அனைத்து உள்ளடங்ககங்களும் 60ஹெர்ட்ஸ் என்கிறRefresh Rate விகிதத்தில் இருக்கும். ஒன்பிளஸ் புதிய ஸ்மார் டிவிகளில் இடம்பெற்றுள்ள டால்பி விஷன் தொழில்நுட்பம் ஆனது டிவிக்கு 40 சதவீதம் அதிக பிரகாசத்தையும், வண்ண துல்லியத்தையும் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த டிவிகளில் இருக்கும் OTT உள்ளடக்கத்தில் அமேசான் ப்ரைம்,ஈரோஸ் நவ், ஜீ டிவி,நெட்ஃபிளிக்ஸ் மற்றும் பல்வேறு செயலிகள் உள்ளன.

8ஸ்பீக்கர் மற்றும் 50வாட் சவுண்ட் அவுட்புட்

அனைவரும் எதிர்பார்த்தபடி 8ஸ்பீக்கர் மற்றும் 50வாட் சவுண்ட் அவுட்புட் கொண்ட sliding சவுண்ட்பார் ஆதரவுடன் வருகிறது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள். குறிப்பாக இதன் ஸ்பீக்கர்கள் ஃபார்வர்ட் டிரான்ஸ்மிஷன் சிஸ்டத்தைக் கொண்டுள்ளதால் அனைத்து ஒலிகளும் உங்களிடம் நேரடியாக வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது வெறும் 7 மிமீ தடிமனை மட்டுமே கொண்டுள்ளது மற்றும் இது 95.7 சதவிகிதம் ஸ்க்ரீன்-டூ-பாடி என்கிற விகிதத்தைக் கொண்டுள்ளது. பின்பு இந்த சாதனங்களின் பின்புறம் ஒரு காந்த தகடு உள்ளது, அதை நகர்த்த டிவியில் உள்ளபோர்ட்கள் வெளிப்படுகின்றன.

ஸ்மார்ட் டிவிகளில் வாய்ஸ்

அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது,பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸமார்ட் டிவிகளின் யுஐ ஆனது ஆக்ஸிஜன் ப்ளே என்று அழைக்கப்படுகிறது. ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள ரிமோட் ஆனது சில பொத்தான்களை மட்டுமே கொண்டுள்ளன, பின்பு இந்த ஸ்மார்ட் டிவிகளில் வாய்ஸ் எனேபிள் கூகுள் அசிஸ்டென்ட் in-built screen casting போன்ற வசதிகள் உள்ளன.

 இரண்டு யூ.எஸ்.பி

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் டூயல்-பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, மூன்று எச்.டி.எம்.ஐ போர்ட்கள், RJ45, ஈதர்நெட் மற்றும் இரண்டு யூ.எஸ்.பி போர்ட்கள் உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளுடன் வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
OnePlus TV Q1, Q1 Pro Netflix Support Feature Rolled Out : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X