ரூ.20,000-க்கு கீழ் ஒன்பிளஸ் டிவி விரைவில் இந்தியாவில் அறிமுகம்! எத்தனை இன்ச் மாடல் தெரியுமா?

|

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 2ம் தேதி தனது நிறுவனத்தின் புதிய ஒன்பிளஸ் டிவி மாடலை வெறும் ரூ.20,000 என்ற விலையின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்திய ஸ்மார்ட் டிவி சந்தையில் உள்ள மற்ற 5 முன்னணி நிறுவனங்களுடன் இந்த ஒன்பிளஸ் டிவி போட்டியிடும் என்பது தெளிவாக தெரிகிறது. புதிய ஒன்பிளஸ் டிவியின் விலை மற்றும் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி

ஒன்பிளஸ் நிறுவனம் வரும் ஜூலை 2 ஆம் தேதி, இந்தியாவில் தனது புதிய ஸ்மார்ட் டிவி சாதனத்தை அறிமுகம் செய்கிறது என்பதை உறுதி செய்துள்ளது. கடந்த ஆண்டைப்போலன்றி, புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் மலிவு விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த புதிய சீரிஸ் மாடல்களின் துவக்க விலை ரூ .20,000 க்கு கீழ் தொடங்கும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்பிளஸ் க்யூ 1 டிவிக்கு நிகரான புதிய டிவி

ஒன்பிளஸ் க்யூ 1 டிவிக்கு நிகரான புதிய டிவி

வரவிருக்கும் புதிய ஒன்பிளஸ் டிவிகளின் விவரக்குறிப்புகள் இந்த நேரத்தில் தெளிவற்றதாக இருந்தாலும், அவை பிரீமியம் ஒன்பிளஸ் க்யூ 1 டிவி சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளைப் போன்ற அனுபவத்தை அளிக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் 32' இன்ச் மற்றும் 43' இன்ச் என்ற இரண்டு வெவ்வேறு அளவுகளில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?சூரிய கிரகணத்தோடு கொரோனா செயலிழக்கும் - சென்னை விஞ்ஞானி கூறியது உண்மையா?

டாப்-எண்ட் ஒன்பிளஸ் 43' இன்ச் மாடல்

டாப்-எண்ட் ஒன்பிளஸ் 43' இன்ச் மாடல்

ஒன்பிளஸ் நிறுவனத்தின் டாப்-எண்ட் ஒன்பிளஸ் டிவி 43' இன்ச் மாடல் பெரும்பாலும் சியோமி, ரியல்மி, நோக்கியா மற்றும் VU போன்ற மற்ற நிறுவனங்களின் சில பிரபலமான ஸ்மார்ட் டிவிகளுக்கு எதிராகப் போட்டியிடும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ரூ .20,000-க்கும் குறைவான விலையில்

ரூ .20,000-க்கும் குறைவான விலையில்

புதிய ஒன்பிளஸ் 43' இன்ச் ஸ்மார்ட் டிவி தோராயமாக ரூ .20,000 முதல் ரூ .30,000 என்ற விலைக்குள் இருக்கும் என்று தெரியவந்துள்ளது. இந்த டிவி போட்டியிடும் மற்ற 5 மாடல்களின் விலை மற்றும்விவரக்குறிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

1. VU அல்ட்ரா 4K 43' இன்ச் ஸ்மார்ட் டிவி

1. VU அல்ட்ரா 4K 43' இன்ச் ஸ்மார்ட் டிவி

 • 43-inch 4K DLED கொண்ட 3840 x 2160 பிக்சல் டிஸ்பிளே
 • குவாட் கோர் சிப்செட்
 • 2 ஜிபி ரேம், 16 ஜிபி ஸ்டோரேஜ்
 • ஆண்ட்ராய்டு 9 டிவி இயங்குதளம்
 • டால்பி விஷன்
 • ப்ரோ-பிக்சர் காலிபரேஷன் மோடு
 • எச்டிஆர் 10
 • ஆக்டிவ் கான்ட்ராஸ்ட்
 • கிரிக்கெட் மோடு மற்றும் பேக்லைட் கண்ட்ரோல்
 • கூகிள் அசிஸ்டென்ட் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர் ஆதரவு
 • 24W சவுண்ட் அவுட்புட்
 • டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்
 • விர்ச்சுவல் எக்ஸ் சரவுண்ட் சவுண்ட் தொழில்நுட்பம்
 • 24W டூயல் ஸ்பீக்கர்
 • OTT பயன்பாட்டு
 • குரோம் காஸ்ட்
 • அப்டீட் சரவுண்ட் சவுண்ட் அம்சம்
 • விலை: 25,999
 • மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்! விலை என்ன இருக்கும்?மிரட்டலான மோட்டோரோலா ஒன் ஃபியூஷன் பிளஸ் நாளை அறிமுகம்! விலை என்ன இருக்கும்?

  2. நோக்கியா 4K ஸ்மார்ட் டிவி 43 இன்ச்

  2. நோக்கியா 4K ஸ்மார்ட் டிவி 43 இன்ச்

  • 43' இன்ச் 4K UHD டிஸ்ப்ளே
  • 178 டிகிரி வியூ ஆங்கிள் 300 நைட்ஸ் பிரைட்னெஸ்
  • எம்இஎம்சி தொழில்நுட்பம்
  • ஆண்ட்ராய்டு 9 டிவி இயங்குதளம்
  • 2.25 ஜிபி ரேம் + 16 ஜிபி ஸ்டோரேஜ்
  • குவாட் கோர் சிப்செட்
  • 24W ஸ்பீக்கர்கள்
  • டால்பி ஆடியோ + டிடிஎஸ் மற்றும் டால்பி விஷன்
  • OTT பயன்பாடுகளான நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் இன்-பில்ட் ஆப்
  • கூகிள் அசிஸ்டென்ட் மற்றும் கூகிள் பிளே ஸ்டோர்
  • விலை: ரூ. 31,999
  • 3. ரியல்மி டிவி 43' இன்ச்

   3. ரியல்மி டிவி 43' இன்ச்

   • 43' இன்ச் எஃப்.எச்.டி டிஸ்ப்ளே
   • குரோமா பூஸ்ட் மோடு
   • டைனமிக் ரேஞ் மற்றும் 400 நைட்ஸ் பிரைட்னெஸ்
   • 64 பிட் மீடியாடெக் குவாட் கோர் சிப்செட்
   • மாலி 470 MP3 ஜி.பீ.யூ
   • 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ்
   • 24W சவுண்ட் அவுட்புட் ஸ்பீக்கர்
   • டால்பி ஆடியோ ஆதரவுடன் குவாட் ஸ்பீக்கர்கள்
   • ஆல் இன் ஒன் ஸ்மார்ட் ரிமோட்
   • நெட்ஃபிக்ஸ், பிரைம் வீடியோ மற்றும் யூடியூப் ஆப்
   • கூகிள் அசிஸ்டன்ட்
   • மைக்ரோஃபோன்
   • வை-ஃபை மற்றும் புளூடூத் 5.0
   • 3 x எச்டிஎம்ஐ போர்ட்கள், 2 எக்ஸ் யூ.எஸ்.பி போர்ட்கள், 1 எக்ஸ் லேன்
   • எஸ்பிடிஐஎஃப் 1 மற்றும் ஸ்கிரீன் மிரரிங் குரோம் காஸ்ட்
   • விலை: 21,999
   • 4. சியோமி மி டிவி 4X 43' இன்ச் ஸ்மார்ட் டிவி

    4. சியோமி மி டிவி 4X 43' இன்ச் ஸ்மார்ட் டிவி

    • 43' இன்ச் 4K டிஸ்பிளே
    • விவிட் பிக்சர் எஞ்சின்
    • பேட்ச்வால் 2.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு 9 டிவி இயங்குதளம்
    • 64 பிட் குவாட் கோர் ஏ53 சிப்செட்
    • மாலி-450 ஜி.பீ.யூ
    • 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ஸ்டோரேஜ்
    • 20W பில்ட்-இன் ஸ்பீக்கர்
    • டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ்-எச்டி
    • உள்ளமைக்கப்பட்ட Chromecast, நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ மற்றும் YouTube ஆப்
    • விலை: ரூ .24,999.
    • எதிர்பார்த்துக் காத்திருந்த OnePlus 8 Pro விற்பனை இன்று துவக்கம் - விலை மற்றும் சலுகை விபரம்!எதிர்பார்த்துக் காத்திருந்த OnePlus 8 Pro விற்பனை இன்று துவக்கம் - விலை மற்றும் சலுகை விபரம்!

     5. சாம்சங் T5350 43' இன்ச் ஸ்மார்ட் டிவி

     5. சாம்சங் T5350 43' இன்ச் ஸ்மார்ட் டிவி

     • 43' இன்ச் முழு-எச்டி (1080p) டிஸ்பிளே
     • டைசன் OS டிவி இயங்குதளம்
     • டால்பி டிஜிட்டல் பிளஸ் சவுண்ட் ஆதரவு
     • 20W ஸ்பீக்கர்
     • கிரீன் மிரரிங்
     • வைஃபை மற்றும் ப்ளூடூத் இணைப்பு
     • எச்.டி.எம்.ஐ மற்றும் யூ.எஸ்.பி போர்ட்கள்
     • விலை: ரூ .37,100.
     • ஒன்பிளஸ் டிவி விவரக்குறிப்பு - சஸ்பென்ஸ்

      ஒன்பிளஸ் டிவி விவரக்குறிப்பு - சஸ்பென்ஸ்

      புதிய ஒன்பிளஸ் டிவி விவரக்குறிப்புகள் பற்றிய தெளிவான விவரங்கள் நமக்கு இன்னும் சரிவரத் தெரியவில்லை என்றாலும் கூட, ஸ்மார்ட் டிவி சந்தையில் சமீபத்தில் அறிமுகமான 43' இன்ச் டிவிகளின் விலை மற்றும் சிறப்பம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்துள்ளோம்.

      அடிப்படை சிறப்பம்சங்களின் கணிப்பு

      அடிப்படை சிறப்பம்சங்களின் கணிப்பு

      வரவிருக்கும் மலிவு ஒன்பிளஸ் டிவி என்ன அடிப்படை சிறப்பம்சங்களுடன் வரும் என்பதைக் கணித்துப்பார்க்க முயற்சித்துள்ளோம். பெரும்பாலும் இந்த டிவிகளில் உள்ளது போன்ற அடிப்படை அம்சங்களுடன் தான் ஒன்பிளஸ் டிவி அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
OnePlus TV launching in India under Rs 20,000 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X