எட்டு ஸ்பீக்கர்களுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் டிவி..!
குறிப்பாக சியோமி ஸ்மார்ட் டிவிகளில் ஸ்கிரீன் மற்றும் ஸீபீக்கர்களுக்கு அதிக கவனம் செலுத்தப்படும். இந்நிலையில் சியோமி ஸ்மார்ட் டிவிக்கு போட்டியாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. இப்போது வெளிவந்த தகவலின் அடிப்படையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி எட்டு ஸ்பீக்களை கொண்டிருக்கும் என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

50வாட்ஸ் அவுட்புட்
பின்பு இந்த ஸ்பீக்கர்கள் அனைத்து 50வாட்ஸ் அவுட்புட்-ஐ உருவாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த அம்சங்கள் சியோமி ஸ்மார்ட் டிவிகளில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச்
வெளியாகவுள்ள மாடல்கள்ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பற்றி வெளியாகியுள்ள தகவலின்படி, புதிய ஸ்மார்ட் டிவிகள் 43' இன்ச், 55' இன்ச், 64' இன்ச் மற்றும் 75' இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது. ஒன்பிளஸ் நிறுவனம் 55Q1IN, 43Q2IN, 65Q2CN, 75Q2CN, மற்றும் 75Q2US என்ற மாடல் எண்களுடன் தனது ஸ்மார்ட் டிவிகளை பதிவு செய்துள்ளது என்பதும் தற்பொழுது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி
ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள், 4K HDR ஆதரவுடன் கூடிய ஒரு இன்பில்ட் ஸ்மார்ட் AI சேவையுடன் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஒன்பிளஸ் வெளியிடப்போகும் ஸ்மார்ட் டிவி வெறும் ஸ்மார்ட் டிவி அல்ல என்பது உறுதியாகியுள்ளது

மீடியாடெக் செயலி:
வெளியாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் ஆனது மாலி ஜி51 ஜி.பீ.யு உடனான மீடியாடெக் எம்டி 5670எஸ்ஒசிசெயலி கொண்டு இயங்கும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட்டிவி அறிமுக தேதி
அண்மையில் வெளியான தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்டிவி செப்டம்பர் மாதம் வெளியிடப்படும் என்ற தகவல் தற்பொழுது கிடைத்துள்ளது. இன்னும் துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த புதிய ஸ்மார்ட் டிவி வரும் செப்டம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி விலை
ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் அமேசான் தளத்தில் மற்றும் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ரூ.40,000 முதல் ரூ.50,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக இந்த ஸ்மார்ட் டிவி 5ஜி இணக்கத்துடன் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறது தகவல் வட்டாரம்.


Click it and Unblock the Notifications