Home
Gadgets

வியக்க வைக்கும் விலையில் புதிய 65-இன்ச் OnePlus ஸ்மார்ட் டிவி அறிமுகம்.! முழு விவரம்.!

ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஒன்பிளஸ் 11 ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஒன்பிளஸ் போன்களுடன் OnePlus TV 65 Q2 Pro எனும் புதிய ஸ்மார்ட் டிவி மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

இப்போது இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ அம்சங்கள் மற்றும் விலைப் பற்றிய தகவலைச் சற்று விரிவாகப் பார்ப்போம். அதாவது இந்த புதிய 65-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி ஆனது QLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் மற்றும் பல சிறப்பான டிஸ்பிளே வசதிகளைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்.

வியக்கவைக்கும் விலையில் புதிய 65-இன்ச் OnePlus ஸ்மார்ட் டிவி அறிமுகம்

ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ அம்சங்கள்

குறிப்பாக இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். மேலும் பட தரத்தை மேம்படுத்தும் காமா இன்ஜின் அல்ட்ராவுடன் இந்த ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவி சிறந்த திரை அனுபவம் கொடுக்கும்.

ஒன்பிளஸ் நிறுவனம் இதன் டிஸ்பிளேவைப் போன்று ஆடியோ வசதிக்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம். அதாவது ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல் 70 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இதில் 30வாட்ஸ் subwoofer ஆதரவும் உள்ளது. குறிப்பாக இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியின் ஸ்பீக்கர்கள் Dynaudio ட்யூன் செய்யப்பட்டது. அதேபோல் டால்பி அட்மோஸ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட் டிவி.

இந்த புதிய ஸ்மார்ட் டிவியில் மீடியாடெக் 4கே இமேஜ் பிராசஸர் வசதி உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு OxygenPlay 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவி.

வியக்கவைக்கும் விலையில் புதிய 65-இன்ச் OnePlus ஸ்மார்ட் டிவி அறிமுகம்

32ஜிபி ஸ்டோரேஜ் வசதி

குறிப்பாக இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடல் . எனவே நீங்கள் விரும்பும் ஆப்ஸ்களை இந்த ஸ்மார்ட் டிவியில் தடையின்றி பயன்படுத்த முடியும்.

ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலில் அனைத்து செயலிகளையும் பயன்படுத்த முடியும். அதேபோல் இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவியில் கூகுள் அசிஸ்டண்ட் ஆதரவு உள்ளது. பின்பு ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்த டிவியைக் கட்டுப்படுத்த முடியும். அதாவது இந்த டிவி OnePlus Connect 2.0 அம்சத்தைக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மூன்று எச்டிஎம்ஐ போர்ட் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் வைஃபை, புளூடூத் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளை கொண்டு வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் 65-இன்ச் ஸ்மார்ட் டிவி. குறிப்பாக சாம்சங், எல்ஜி நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ.

வியக்கவைக்கும் விலையில் புதிய 65-இன்ச் OnePlus ஸ்மார்ட் டிவி அறிமுகம்

ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ விலை

ஒன்பிளஸ் டிவி 65 Q2 ப்ரோ மாடலின் விலை ரூ.99,999-ஆக உள்ளது. வரும் மார்ச் 10-ம் தேதி முதல் இந்த ஸ்மார்ட் டிவி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு ஒன்பிளஸ் இணையதளத்தில் மார்ச் 6-ம் தேதி முதல் இந்த 65-இன்ச் ஸ்மார்ட் டிவியை முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus TV 65 Q2 Pro Launched in India: Specs, Price, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X