Home
Gadgets

இந்த OnePlus 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க அதிக ஆர்வம் காட்டும் மக்கள்: அப்படியென்ன ஸ்பெஷல்?

இப்போது சில முன்னணி நிறுவனங்கள் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்கின்றன. ஆனாலும் விலைக்குத் தகுந்த அனைத்து சிறப்பு அம்சங்களும் அந்த ஸ்மார்ட் டிவிகளில் இருக்கும். குறிப்பாக பிரபலமான நிறுவனங்களின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ரூ.50,000 அல்லது ரூ.65,000-க்குள் இருக்கும்.

 ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ

அதேபோல் ஒன்பிளஸ் நிறுவனம் கூட சில வாரங்களுக்கு முன்பு ஒரு 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை அறிமுகம் செய்தது. அதாவது OnePlus TV 55 Y1S Pro ஸ்மார்ட் டிவி தான் சில வாரங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட் டிவி நாம் எதிர்பார்க்கும் அனைத்து அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. எனவே தான் மக்கள் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இப்போது ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடலின் அம்சங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

தியேட்டர் தர அனுபவத்தைக் கொடுக்கும்

தியேட்டர் தர அனுபவத்தைக் கொடுக்கும்

OnePlus TV 55 Y1S ப்ரோ ஆனது 55-இன்ச் 4கே அல்ட்ரா எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு இந்த ஸ்மார்ட் டிவியில் 10-பிட் கலர் டெப்த் வசதி இருப்பதால் தெளிவாக நிறங்கள் பார்க்க முடியும். அதேபோல் தெளிவான வீடியோவை காண உதவுகிறது இந்த அட்டகாச தொழில்நுட்பம். OnePlus TV 55 Y1S Pro ஆனது HDR10+, HDR10 மற்றும் HFL ஃபார்மேட்-ஐ ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இது தியேட்டர் தர அனுபவத்தைக் கொடுக்கும் என்றே கூறலாம்.

காமா எஞ்சின்?

காமா எஞ்சின்?

இந்த 55-இன்ச் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் காமா எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது real-time image quality optimisation மற்றும் டைனமிக் கான்ட்ராஸ்ட் மற்றும் தெளிவான உள்ளடக்கத்தை வழங்க காட்சிகளை ஸ்மார்ட் ட்யூன் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் சிறந்த தரமான வீடியோக்களை பார்க்க உதவுகிறது இந்த காமா எஞ்சின்.

ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச்

ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச்

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் ஆண்ட்ராய்டு டிவி 10.0 மூலம் இயங்குகிறது. பின்பு இதில் OnePlus Connect 2.0 பயன்பாட்டுடன் கிட்ஸ் மோட் அம்சம் உள்ளது. மேலும் நீங்கள் இந்த புதிய OnePlus டிவியை OnePlus பட்ஸுடன் இணைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் OnePlus Connect software (2.0)உள்ளது. குறிப்பாக இதன் மூலம் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்றவற்றை இந்த டிவியுடன் இணைக்கலாம். அதாவது இந்த டிவியை இயக்குவது மற்றும் ஆஃப் செய்வதற்கு ஒன்பிளஸ் போன் அல்லது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை பயன்படுத்தலாம்.

டால்பி ஆடியோ ஆதரவு

டால்பி ஆடியோ ஆதரவு

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடல் OxygenPlay 2.0 2.0 வசதியைக் கொண்டுள்ளது. மேலும் டால்பி ஆடியோ ஆதரவு கொண்ட 24 வாட்ஸ் ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல். அதேபோல் 2ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி. மேலும் கூகுள் அசிஸ்டண்ட், குரோம்காஸ்ட் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான வசதிகளை வழங்குகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

கனெக்டிவிட்டி..

கனெக்டிவிட்டி..

எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆப்டிகல் ஈதர்நெட், டூயல் பேண்ட் வைஃபை மற்றும் புளூடூத் 5.0 போன்ற பல கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி மாடல்.சுருக்கமாக கூறவேண்டும் என்றால், சோனி, எல்ஜி, சியோமி உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை விட மேம்பட்ட அமசத்தை இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியில் வழங்கியுள்ளது ஒன்பிளஸ் நிறுவனம்.

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ

ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ

அதேபோல் இந்த ஒன்பிளஸ் டிவி 55 Y1S ப்ரோ மாடலை அமேசான் தளத்தில் ரூ.39,999-க்கு வாங்க முடியும். பின்பு தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இன்னும் குறைவான விலையில் இந்த ஸ்மார்ட் டிவியை வாங்க முடியும். மேலும் பட்ஜெட் விலையில் 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை வாங்க நினைப்பவர்கள் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியை வாங்குவது நல்லது.

Best Mobiles in India

English summary
OnePlus TV 55 Y1S Pro comes with amazing features at an affordable price : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X