புதிய OnePlus டிவி 40Y1 அறிமுகம்: தரமான ஸ்பெக்ஸ்: வாங்கத் தூண்டும் விலை.! எப்போ வாங்கலாம் தெரியுமா?

|

OnePlus நிறுவனம் ஒன்பிளஸ் டிவி 40Y1 மாடலை அறிமுகப்படுத்தப்போவதாக டிவிட்டர் மூலம் உறுதிப்படுத்தி இருந்தது, அதனைத் தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் மே 24 (இன்று) இந்தியாவில் 12 மணிக்கு புதிய ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் முன்னதாக 32 இன்ச் மற்றும் 43 இன்ச் டிவியை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியது, இப்போது 40 இன்ச் டிவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி பற்றிய முழு விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

புதிய OnePlus டிவி 40Y1 சாதனம்

புதிய OnePlus டிவி 40Y1 சாதனம்

இது நாட்டிற்கான ஆறாவது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, புதிய மாடல் ஒன்பிளஸ் டிவி ஒய் (Y) சீரிஸ் தொடரின் ஒரு பகுதியாகும். இது முதல் முறையாக ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வாங்குபவர்களை இலக்காகக் கொண்ட ஒரு பட்ஜெட் ஸ்மார்ட் டிவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய OnePlus டிவி 40Y1 சாதனம் பிளிப்கார்ட் மற்றும் ஒன்பிளஸின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தற்பொழுது பட்டியலிடப்பட்டுள்ளது.

'இது' மட்டும் டிவி உடன் கிடைக்காது

'இது' மட்டும் டிவி உடன் கிடைக்காது

ஒன்பிளஸ் டிவி 40Y1 சாதனம் 40 இன்ச் எல்இடி-பேக்லிட் எல்சிடி பேனலை 1920 x 1080 பிக்சல்கள், 93% டிசிஐ-பி 3 வண்ண வரம்பு மற்றும் 93% ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட் டிவி ஒரு பிளாஸ்டிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது வழக்கம்போல். ஸ்டாண்டிங் டைப் மற்றும் வால் மவுண்டிங் டைப் ஆகிய இரண்டு பொருத்தக்கூடிய விருப்பத்துடன் வருகிறது. நீங்கள் சாதனத்தை வாங்கும் போது, பெட்டியில் உங்களுக்கு ஸ்டாண்டிங் டைப் ஸ்டாண்டுகல் மட்டுமே வழங்கப்படும்.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

ஒன்பிளஸ் டிவி 40Y1 சாதனத்தின் ஸ்டோரேஜ் விபரம்

ஒன்பிளஸ் டிவி 40Y1 சாதனத்தின் ஸ்டோரேஜ் விபரம்

அதேபோல், வால் மவுண்டிங்கிற்கு தேவையான ஸ்டாண்டை நீங்கள் தனித்தனியாகத் தான் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 40Y1 சாதனம் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆகியவற்றுடன் 64 பிட் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது ஆக்ஸிஜன் பிளே உள்ளடக்க ஒருங்கிணைப்பு சேவையுடன் Android TV 9.0 பை இயக்க முறைமையில் இயக்குகிறது. மேலும், இது அனைத்து முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகளான கூகிள் குரோம் காஸ்ட், கூகிள் அசிஸ்டென்ட் மற்றும் அமேசான் அலெக்சாவையும் ஆதரிக்கிறது .

இணைப்பு மற்றும் போர்ட் அம்சங்கள்

இணைப்பு மற்றும் போர்ட் அம்சங்கள்

இணைப்பு மற்றும் போர்ட் அம்சங்களை பொறுத்தவரை, டிவி சிங்கிள் பேண்ட் வைஃபை, புளூடூத் 5.0, 2 x எச்டிஎம்ஐ, 2 எக்ஸ் யூஎஸ்பி, ஆர் எஃப், ஆப்டிகல் டிஜிட்டல் ஆடியோ போர்ட், 3-இன்-1 ஏவி மற்றும் ஈதர்நெட் ஆகியவற்றுடன் வருகிறது. அதேசமயம், ஆடியோவைப் பொறுத்தவரை, இந்த சாதனம் டால்பி ஆடியோவுக்கான ஆதரவுடன் 2 x 10W (20W) ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. இதன் விலை மற்றும் விற்பனை தேதி பற்றிய முக்கிய விபரத்தை இப்போது பார்க்கலாம்.

இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்

ஒன்பிளஸ் டிவி 40Y1 விலை மற்றும் விற்பனை தேதி

ஒன்பிளஸ் டிவி 40Y1 விலை மற்றும் விற்பனை தேதி

ஒன்பிளஸ் டிவி 40Y1 விலை
OnePlus டிவி 40Y1 சாதனம் இந்தியாவில் ரூ. 23,999 ($ ​​329) என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது பிளிப்கார்ட் வழியாக வரும் மே 26, 12 மணி முதல் விற்பனைக்குக் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் விற்பனையின் சிறப்பு தள்ளுபடியின் ஒரு பகுதியாக இந்த புதிய ஒன்பிளஸ் டிவி 40Y1 சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 21,999 ($ ​​302) என்ற விலையில் வாங்க முடியும். இது ஒன்பிளஸ் ஆன்லைன் ஸ்டோரிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
OnePlus TV 40Y1 Launched in India at Rs 21999 Specifications Features and Sale Date Details : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X