Home
Gadgets

OnePlus நீ கலக்கு சித்தப்பு.. நச்சுனு 4 புது அறிமுகங்கள்.. 2 இயர்பட்ஸ்.. மினி போன்.. பெத்த டேப்லெட்!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அடுக்கடுக்கான முறையில் புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்ய திட்டமிடுவது போல் தெரிகிறது. ஏற்கனவே ஒன்பிளஸ்-ன் புதிய மினி ஸ்மார்ட்போன் (OnePlus Mini Smartphone) - ஒன்பிளஸ் 13டி) மொபைல் சந்தையில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 13.2-இன்ச் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படலாம் என்கிற தகவலும் கிடைத்துள்ளது.

இதற்கிடையில், தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் 2 புதிய வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை அறிமுகம் செய்ய உள்ளதாக கிடைத்துளளது. நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 ப்ரோ (OnePlus Nord Buds 3 Pro) கடந்த 2024 ஜூலை மாதத்திலும், ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3 (OnePlus Nord Buds 3) கடந்த 2025 செப்டம்பர் மாதத்திலும் அறிமுகப்படுத்தப்பட்டது.

OnePlus நீ கலக்கு சித்தப்பு.. நச்சுனு 4 புது அறிமுகங்கள்!

தற்போது ஒன்பிளஸ் நிறுவனம், இதே நோர்ட் பட்ஸ் 3 சீரீஸின் கீழ் மேலும் 2 டிடபுள்யூஎஸ் மாடல்களை சேர்க்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 91மொபைல்ஸ் (91mobiles) வழியாக கிடைத்த சமீபத்திய தகவலின்படி, ஒன்பிளஸ் நிறுவனம் - ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் (OnePlus Nord Buds 3r) மற்றும் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 (OnePlus Bullets Wireless Z3) ஆகிய மாடல்களை கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யலாம்.

இருப்பினும் மாடல்களும் ஒன்பிளஸ் நோர்ட் பட்ஸ் 3ஆர் மற்றும் ஒன்பிளஸ் புல்லட்ஸ் வயர்லெஸ் இஸட்3 ஆகிய 2 மாடல்களும் என்னென்ன முக்கிய அம்சங்களை பேக் செய்யும், இந்திய சந்தையில் என்ன மாதிரியான பட்ஜெட்டின் கீழ் அறிமுகம் செய்யப்படும் என்கிற விவரங்கள் "பெரிதளவில்" இல்லை. விரைவில் இந்த 2 பட்ஸ்களை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது டீசர்களை, ஒன்பிளஸ் நிறுவனத்திடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் 13டி (OnePlus 13T) ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இது என்ன விலைக்கு வரும்? எப்போது அறிமுகமாகும்? இது ஒன்பிளஸ்-ன் "சகோதர நிறுவனமான" ஒப்போவின் பைண்ட் எக்ஸ்8எஸ் (Oppo Find X8S) ஸ்மார்ட்போனை போலவே சிறிய 6.3-இன்ச் டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதில் 80W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 6200mAh பேட்டரி இடம்பெறலாம்.

சுவாரசியமாக ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது ஐபோன் போன்ற வடிவமைப்பை (iPhone like Design) பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போனில் எத்தனை கேமராக்கள் இருக்கும் என்கிற விவரங்கள் இல்லை. அதாவது டூயல் ரியர் செட்டப் (Dual Rear Camera Setup) உடன் வருமா அல்லது ட்ரிபிள் ரியர் செட்டப் (Triple Rear Camera Setup) உடன் வருமா என்பதில் குழப்பம் நீடிக்கிறது.

பெரும்பாலும் 50எம்பி மெயின் கேமரா (50MP Main Camera) இடம்பெறும். இதனுடன் 2எக்ஸ் ஆப்டிகல் ஜூம் கொண்ட 50எம்பி டெலிஃபோட்டோ கேமரா (டூயல்) இடம்பெறலாம் அல்லது 8எம்பி அல்ட்ராவைடு உடன் சேர்த்து இன்னொரு கேமரா (ட்ரிபிள்) இடம்பெறலாம். இது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட் மூலம் இயக்கப்படலாம். இதன் டிஸ்பிளே 1.5கே ரெசல்யூஷன் மற்றும் உட்பொதிக்கப்பட்ட ஆப்டிகல் பிங்கர் பிரிண்ட் சென்சார் (Optical Finger Print Sensor) உடன் வரலாம்.

ஒன்பிளஸ் 13டி ஸ்மார்ட்போன் ஆனது வருகிற 2025 ஏப்ரல் மாதத்தில், சீனாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக அறிமுகமான டி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் நல்ல பிரபலம் என்பதால், கண்டிப்பாக ஒன்பிளஸ் 13டி மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும். விலையை பொறுத்தவரை (OnePlus 13T Price in India) இது ரூ.54,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus to launch 2 New Wireless Earbuds Nord Buds 3r Bullets Wireless Z3 in India Soon Report
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X