Home
Gadgets

OnePlus ரசிகர்கள் ரெடியா.. ஸ்லிம் ஆன ஸ்ட்ராப் உடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்.. OnePlus 15R உடன் ஜோடி!

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போன் ஆக ஒன்பிளஸ் 15 மாடலை அறிமுகம் செய்த கையோடு, மேலும் 3 புதிய டிவைஸ்களை அறிமுகப்படுத்த உள்ளது. ஒன்பிளஸ் 15 சீரீஸின் கீழ் இன்னொரு புதிய ஸ்மார்ட்போன், ஒரு புதிய ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஒரு புதிய டேப்லெட்!

புதிய ஸ்மார்ட்போன் ஆக வரப்போவது "சந்தேகத்திற்கு இடமின்றி" ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) தான். சீனாவில் ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஆக அறிமுகம் செய்யப்பட உள்ள மாடல் இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் 15ஆர் ஆக அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதோடு ஒரு புதிய ஒன்பிளஸ் வாட்ச் மற்றும் ஒரு புதிய ஒன்பிளஸ் டேப்லெட்டும் அறிமுகமாகும் என்பது போல் தெரிகிறது.

OnePlus ரசிகர்கள் ரெடியா.. ஸ்லிம் ஆன ஸ்ட்ராப் உடன் புதிய வாட்ச்!

புதிய ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் ஆனது ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் அப்கிரேடெட் வெர்ஷன் ஆன ஒன்பிளஸ் வாட்ச் 4 (OnePlus Watch 4) ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக அறிமுகமான ஒன்பிளஸ் ஸ்மார்ட்வாட்ச் - ஒன்பிளஸ் வாட்ச் 3 ஆகும், இது ஸ்டெயின்லெஸ் ஸ்டீலால் ஆனது. டீஸ் செய்யப்பட்டுள்ள புதிய ஒன்பிளஸ் வாட்ச் ஆனது பழைய ஒன்பிளஸ் வாட்ச் 3-ஐ போன்ற வடிவமைப்பையே கொண்டுள்ளது.

ஆனால் ஒன்பிளஸ் நிறுவனம் இன்னுமும் இந்த ஸ்மார்ட் வாட்ச்சின் மாடல் பெயரை வெளியிடவில்லை. எனவே இது ஒன்பிளஸ் வாட்ச் 4 தானா என்பது எங்களுக்கு தெரியவில்லை. ஒருவேளை இது ஒன்பிளஸ் வாட்ச் 3ஆர் ஆக இருக்கலாம். ஏனென்றால் ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் மாடலை ஒன்பிளஸ் வாட்ச் 3 மாடலின் மலிவு விலை வெர்ஷன் இன்னும் அறிமுகம் செய்யப்படவே இல்லை.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இதுவரை அறிக்கைகளின் படி, டிஸ்பிளேவை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது 1.5 கே ரெசல்யூஷன் மற்றும் 165 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.7 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டிருக்கலாம்.

ஒன்பிளஸ் 15ஆர் மாடலின் கேமராக்களை பொறுத்தவரை இது 32-மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் 50-மெகாபிக்சல் + 8-மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை பெறலாம். பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் ஏஸ் 6டி ஸ்மார்ட்போன் ஆனது 100W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் ஒரு பெரிய 8000mAh பேட்டரியை பேக் செய்யலாம்.

ஒன்பிளஸ் 15ஆர்-ன் ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட கலர்ஓஎஸ்16 உடன் அறிமுகம் செய்யப்படலாம். கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது மெட்டல் மிடில் ஃபிரேம், அல்ட்ராசோனிக் இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார், எக்ஸ்-ஆக்சிஸ் நேரியல் மோட்டார், டூயல் ஸ்பீக்கர்ஸ் மற்றும் என்எப்சி ஆதரவு ஆகியவைகளுடன் வரலாம்.

ஒன்பிளஸ் 15ஆர் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும், என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? லான்ச் டைம்லைனை பொறுத்தவரை, ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் ஆனது டிசம்பர் 2025 இரண்டாவது வாரத்திற்குள் இந்தியாவிற்கு வரக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. விலையை பொறுத்தவரை ரூ.44,999 முதல் ரூ.49,999 வரைக்குள் இருக்கலாம்.

புதிதாக அறிமுகமான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்: பேஸிக் 12ஜிபி ரேம் + 246ஜிபி ஸ்டோரேஜ் - ரூ.72,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகையின் கீழ் ரூ.68,999 க்கு வாங்க கிடைக்கும். இதேபோல 16ஜிபி ரேம் + 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வங்கி சலுகையின் கீழ் ரூ.75,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Teased New Smartwatch Could be OnePlus Watch 4 or Watch 3R Launch Alongside OnePlus 15R
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X