கெத்தா கையில மாட்டுங்க- ரூ.1000 தள்ளுபடி விலையில் ஒன்பிளஸ் பேண்ட்: இப்போ ரொம்ப கம்மி!

|

ஒன்பிளஸ் பேண்ட் இந்த ஆண்டின் தொடக்கத்தில் நிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனத்தை அறிமுகம் செய்தது. ஃபிட்னஸ் பேண்ட் தற்போது ரூ.1000 தள்ளுபடி என்ற விலையில் கிடைக்கிறது. ஒன்பிளஸ் பேண்ட் அமோலெட் பேனல், எஸ்பிஓ2 சென்சார் மற்றும் பல விளையா்டு முறைகள் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஒன்பிளஸ் பேண்ட் ரூ.1000 தள்ளுபடி விலை

ஒன்பிளஸ் பேண்ட் ரூ.1000 தள்ளுபடி விலை

ஒன்பிளஸ் பேண்ட் ரூ.2499 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தை தற்போது அமேசான் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் ரூ.1499 என்ற விலையில் வாங்கலாம். இது ஒற்றை கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது.

ஒன்பிளஸ் பேண்ட் அம்சங்கள்

ஒன்பிளஸ் பேண்ட் அம்சங்கள்

ஒன்பிளஸ் பேண்ட் நீக்கக்கூடிய டிராக்கர் வசதியுடன் வருகிறது. இதன் பட்டை இரட்டை வண்ண வரம்பில் வருகிறது. இந்த சாதனம் 1.1 இன்ச் அளவுடன் முழு டச் மாதிரி டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 126x294 பிக்சல்கள் தெளிவுத்திறனை கொண்டுள்ளது. ஃபிட்னஸ் டிராக்கர், வெளிப்புற ரன்னிங், உட்புற ரன்னிங், கொழுப்பு எரிக்கும் ஓட்டம், வெளிப்புற சைக்கிளிங், உட்புற சைக்கிளிங், கிரிக்கெட், பேட்மின்டன், ஸ்விம்மிங் பூல், யோகா உள்ளிட்ட பல பயிற்சி ஆதரவுகளை கொண்டுள்ளது.

14 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

14 நாட்கள் வரை பேட்டரி ஆயுள்

ஒன்பிளஸ் ஹெல்த் பயன்பாட்டில் இருந்து அணுகக் கூடிய முன் பொருத்தப்பட்ட வாட்ச் முகங்களுடன் வருகிறது. பேட்டரியை பொறுத்தவரை, 100 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. இந்த சாதனத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் 14 நாட்கள் வரை இதன் ஆயுள் நீடிக்கும் என கூறப்படுகிறது. ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய் சாதனங்கள் இரண்டிலும் இது இணக்கமானது. இந்த சாதனம் செய்தி அறிவிப்புகள், உள்வரும் அழைப்பு விழிப்பூட்டல்கள் மற்றும் இசை கட்டுப்பாடுகள், வானிலை முன்னறிவிப்புகள் உள்ளிட்ட பலவற்றை எச்சரிக்கிறது.

ரூ.1499 என்ற விலையில் ஒன்பிளஸ் பேண்ட்

ரூ.1499 என்ற விலையில் ஒன்பிளஸ் பேண்ட்

அதேபோல் எஸ்பிஓ2 கண்காணிப்பு, தூக்க கண்காணிப்பு, ப்ளூடூத் வி5.0 இணைப்பு, தூசி மற்றும் வாட்டர் ரெசிஸ்டென்ட் ஐபி68 மதிப்பீடு ஆதரவோடு வருகிறது. இதன் எடை 22.6 கிராம் கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் பேண்ட் அனைத்து பயனுள்ள அம்சங்களுடன் வருகிறது. அதோடு இது சிறந்த பேட்டரி ஆயுளை வழங்குகிறது. இந்த பிட்னஸ் டிராக்கர் ரூ.1499 என்ற விலையில் வருகிறது. எஸ்பிஓ2 சென்சார், பல விளையாட்டு முறைகள் உள்ளிட்ட பல அம்சங்களை பெறுகிறது. உங்கள் மணிக்கட்டில் பொருத்தப்பட்டிருக்கும் பேண்ட் மூலம் நீங்கள் நேரடியாக அழைப்புகளை நிராகரிக்க ஒன்பிளஸ் பேண்ட் அனுமதிக்கிறது. மலிவு விலையில் ஃபிட்னஸ் பேண்ட் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான வாய்ப்பாகும்.

புதிய நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போன்

புதிய நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போன்

ஒன்பிளஸ் நிறுவனம் இருட்டில் ஒளிரும் நியான் பேக் பேனலுடன் கூடிய புதிய நோர்ட் 2 பேக் மேன் எடிஷன் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அமேசான் மற்றும் ஒன்பிளஸ் இணையதளங்களில் வாங்க கிடைக்கிறது. அதேபோல் இந்த புதிய ஸ்மார்ட்போன் நோர்ட் 2 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் எடிஷன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்மார்ட்போனில் PAC-MAN கேமால் ஈர்க்கப்பட்ட ஒரு கஸ்டம் தீம், UI அனிமேஷன்கள் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக இந்த சாதனத்தில் ப்ரீ-டூ-பிளே Pac-MAN 256 கேமும் ப்ரீ-இன்ஸ்டால்டு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் மாடலின் பின்புறம் PAC-MAN லோகோ மற்றும் கேமில் பேக்-மேன் என்கிற கதாபாத்திரம் உட்கொள்ளும் சிறிய புள்ளிகளையும் காண முடிகிறது. அதேபோல் இந்த சாதனத்தின் பேக் பேனல் இருட்டில் ஒளிரவும் செய்கிறது.

எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி

எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி

ஒன்பிளஸ் நோர்ட் 2 பேக் மேன் ஸ்பெஷல் எடிஷன் ஆனது 6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் எச்டிஆர் பிளஸ் ஆதரவு, 90Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. அதாவது சில ஒப்போ, ரியல்மி ஸ்மார்ட்போன்களில் கூட இதே சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஐ அடிப்படையாகக் கொண்ட ஆக்ஸிஜன்ஓஎஸ் 11.3 (topped with ColorOS) கொண்டு இயங்குகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Oneplus Smartband Available at Rs.1499: You Can buy via amazon and oneplus.in

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X