இந்தியா: விரைவில் கேமராவுடன் அறிமுகமாகும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.!

|

ஒன்பிளஸ் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7ப்ரோ ஸமார்ட்போன் மாடல்கள் இந்தியா முழுவதும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக மற்ற ஸ்மார்ட்போன்களை விட சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதால் அதிக கவனத்தை பெற்றள்ளது.

இந்தியாவில் அறிமுகம்

மேலும் இந்நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, கண்டிப்பாக சாம்சங், எல்ஜி, சியோமி போன்ற நிறுவனங்களின் ஸ்மார்ட் டிவிகளை விட புதிய தொழில்நுட்ப வசதியுடன் இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி வெளிவரும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OxygenOS  இயங்குதளம்

OxygenOS இயங்குதளம்

நேற்று, ஒன்பிளஸ் நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கத்தில் புதிய பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. இதன்படி பயனர் கோரிய பல அம்சங்களை மாற்றி அமைத்து OxygenOS இயங்குதளத்தை மேம்படுத்தியுள்ளது என்று அறிவித்துள்ளது. எனவே இந்த இயங்குதளம் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இணையம், ஆப், வீடியோ கேம்

இணையம், ஆப், வீடியோ கேம்

குறிப்பாக இணையம், ஆப், வீடியோ கேம் மற்றும் பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவரும் என அந்நிறுவனத்தின் சிஇஒ தெரிவித்துள்ளார். மேலும் ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் கேமராவும் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட் டிவி மாடல்.

ஜூன் 26 -இந்தியா வரும் எல்ஜி W10: என்னென்ன சிறப்பம்சம் தெரியுமா?

அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ்

அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ்

ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவியில் 4கே ஆதரவு உள்ளத என்று அந்நிறுவனம் சார்பில் வெளிவந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பிரைம், நெட்ஃபிக்ஸ் போன்ற சேவைகளை இந்த ஸ்மார்ட் டிவியில் பயன்படுத்த முடியும்.

மலிவு கட்டணத்தில் அசத்தும் ஜியோ ஜிகாபைபர்: ஹோம்டிவி, பிராட்பேண்ட் பிளான்.!

 55-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே

55-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே

வெளிவந்த தகவலின் அடிப்படையில் 55-இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளே மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி மாடல் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டால்பி அட்மோஸ், எச்டிஆர் 10 ஆதரவுகள் கொண்டு இந்த ஸ்மார்ட் டிவி வெளிவரும் என அந்நிறவனம் கூறியுள்ளது.

டிவிட்டர் கணக்கை டிலீட் செய்த எலன் மஸ்க்! சிறுபிள்ளைத்தனமான கோபம்.!

விரைவில் வெளிவரும்

விரைவில் வெளிவரும்

ஒன்பிளஸ் பொறுத்தவரை வாடிக்கையாளரின் பிராண்ட் ஆகும், வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி சாதனங்களை உருவாக்குவதற்கு அதிக கவனம் செலுத்தி வருகிறது அந்நிறுவனம். அதன்படி விரைவில் வெளிவரும் இந்த ஸ்மார்ட் டிவி புதுமையாக தொழில்நுட்ப வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
OnePlus Smart Television To Launch Soon In India Leak : Read more about this in Tamil GizBot
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more