ஆஹா இதுக்கு தானே வெயிட் பண்ணோம்.. ப்ளூடூத் கனெக்டிவிட்டி, செராமிக் ஆண்டெனா உடன் OnePlus பென்சில்!
ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் கூடிய விரைவில் ஒரு புதிய டேப்லெட்டை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது போல் தெரிகிறது, அது ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ (OnePlus Pad 2 Pro) மாடலாக இருக்கலாம். இது சமீபத்தில் பிஐஎஸ் (BIS) சான்றிதழை பெற்றதும் இங்கே குறிப்பிடத்தக்கது, ஆக இது விரைவில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று அர்த்தம்
இதற்கிடையில் எப்சிசி (FCC) சான்றிதழில் ஒரு புதிய ஒன்பிளஸ் பென்சில் (OnePlus Pencil) அல்லது ஒன்பிளஸ் ஸ்டைலஸ் (OnePlus Stylus) காணப்பட்டுள்ளது. இது ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டிற்கான பென்சில் ஆக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் இது முதல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் ஸ்டைலஸ் அல்ல.

ஏற்கனவே இந்த பிராண்ட் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட் மாடலுக்கான ஒன்பிளஸ் ஸ்டைலோ 2-வை (OnePlus Stylo 2) கொண்டுள்ளது. இது ரூ.5,499 க்கு வாங்க கிடைக்கிறது. எப்சிசி சான்றிதழ் வழியாக கிடைக்கப்பெற்ற தகவலின்படி, இந்த புதிய ஒன்பிளஸ் ஸ்டைலஸ் அல்லது ஒன்பிளஸ் பென்சில் ஆனது ப்ளூடூத் எல்இ கனெக்டிவிட்டி உடன வருகிறது மற்றும் ப்ரெக்வன்சி ரேன்ஜ் ஆனது 2400MHz ~ 2483.5MHz ஆகும்.
மேலும் எப்சிசி லிஸ்டிங்கில், ஒன்பிளஸ் பென்சிலில் ஒரு செராமிக் ஆண்டெனா இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர்த்து வரவிருக்கும் ஒன்பிளஸ் பென்சில் பற்றி வேறெந்த விவரங்களும் இல்லை. ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் குறித்த விவரங்களை பொறுத்தவரை, இது சமீபத்தில் சீனாவில் (இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.38,500 க்கு) அறிமுகமான ஒப்போ பேட் 4 ப்ரோ (OPPO Pad 4 Pro) டேப்லெட் மாடலின் ரீபிராண்டட் வெர்ஷன் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இது உண்மையாகும் பட்சத்தில் ஒப்போ பேட் 4 ப்ரோ டேப்லெட் உள்ள ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட், 13.2 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 12140mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற அம்சங்களை நாம் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ மாடலிலும் எதிர்பார்க்கலாம். இருப்பினும் ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் அறிமுகம் குறித்து ஒன்பிளஸ் நிறுவனம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட்டில் வேறு என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோ டேப்லெட் ஆனது 16 ஜிபி வரை LPDDR5x ரேம் மற்றும் 1 TB வரை UFS 4.0 ஸ்டோரேஜை பேக் செய்யலாம். இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான கலர்ஓஎஸ் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் பேட் 2 ப்ரோவில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கலாம்.
ஒன்பிளஸ் பேட் 2 டேப்லெட்டின் முக்கிய அம்சங்கள்: இது 3000 × 2120 ரெசல்யூஷன், 900நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 12.1-இன்ச் எல்சிடி டிஸ்பிளே, 6 ஸ்பீக்கர் செட்டப், ஹை-ரெஸ் சவுண்ட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட், 8 ஜிபி / 12 ஜிபி ரேம், 128 ஜிபி / 256 ஜிபி ஸ்டோரேஜ், 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பீ கேமரா மற்றும் 67W SUPERVOOC வயர்டு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 9510mAh பேட்டரியை கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் பேட் 2 விலை விவரங்கள்: இந்த டேப்லெட்டின் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.39,999 க்கும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.42,999 க்கும் அறிமுகம் செய்யப்பட்டது. முதல் தலைமுறை டேப்லெட்டை போலவே ஒன்பிளஸ் பேட் 2 மாடலும் வைஃபை வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications