Home
Gadgets

வெளுத்து கட்டிய OnePlus.. உலகின் முதல் SD8G3 டேப்லெட்.. இனி பவர்ஃபுல் டேப்லெட்னா இதான்.. என்ன மாடல்?

ஒன்பிளஸ் (OnePlus) நிறுவனம் அதன் புதிய ஒன்பிளஸ் பேட் ப்ரோ (OnePlus Pad Pro) என்ற டேப்லெட் (Tablet) சாதனத்தை சமீபத்தில் அறிமுகம் செய்திருந்தது. உலகின் முதல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் டேப்லெட் சாதனம் (World's first snapdragon 8 gen 3 chipset tablet) இது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய அற்புதமான டேப்லெட் சாதனத்தை ஒன்பிளஸ் நிறுவனம் இன்று முதல் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய டேப்லெட் சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களை இப்போது பார்க்கலாம்.

ஒன்பிளஸ் நிறுவனம் சமீபத்தில் சீனாவில் நடைபெற்ற நிகழ்வில் அதன் ஒன்பிளஸ் ஏஸ் 3 ப்ரோ (OnePlus Ace 3 Pro), ஒன்பிளஸ் பேட் ப்ரோ டேப்லெட் (OnePlus Pad Pro tablet), ஒன்பிளஸ் வாட்ச் 2ஆர் (OnePlus Watch 2R) மற்றும் ஒன்பிளஸ் பட்ஸ் 3 (OnePlus Buds 3) போன்ற பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்திருந்தது என்பது கவனிக்கத்தக்கது.

வெளுத்து கட்டிய OnePlus.. உலகின் முதல் SD8G3 டேப்லெட்.. பவர்ஃபுல் டேப்

ஒன்பிளஸ் பேட் ப்ரோ டேப்லெட் (OnePlus Pad Pro tablet):

இந்த வரிசையில் அறிமுகமப்படுத்தப்பட்ட சாதனங்களில் இருந்து, நிறுவனம் இன்று அதன் முதல் ஒன்பிளஸ் பேட் ப்ரோ மாடலை விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இது உலக சந்தையில் ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஒன்பிளஸ் பேட் ப்ரோ சீனாவில் சக்தி வாய்ந்த டேப்லெட் சாதனமாக விற்பனைக்கு வந்துள்ளது.

காரணம், இந்த டேப்லெட் சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் (Snapdragon 8 Gen 3) உடன் வெளிவரும் உலகத்தின் முதல் டேப்லெட் சாதனமாகும். இது தவிர, இந்த டேப்லெட் சாதனம் ஹுவான்டியன் (HuanTian) அக்கௌன்ட் மூலம் MacOS மற்றும் Windows சாதனங்களுடன் இணையும் கிராஸ் சிஸ்டம் இண்ட்ராக்ஷன் (cross-system interaction) அம்சத்தையும் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

இது எளிதாக ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் பிற சாதனங்களுடன் இணைக்க உதவும் அம்சத்தை கொண்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் பேட் ப்ரோ (OnePlus Pad Pro) டேப்லெட் 12.1" இன்ச் அளவு கொண்ட ஐபிஎஸ் எல்சிடி பேனலைக் (IPS LCD panel) கொண்ட மெட்டல் பாடி டேப்லெட்டாகும். இது 2120 x 3000 பிக்சல்கள், 144Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 900 nits பீக் பிரைட்னஸ் ஆதரவை கொண்டுள்ளது.

உலகத்தின் முதல் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் டேப்லெட் (World's first snapdragon 8 gen 3 chipset tablet):

இது ColorOS 14.1 அடிப்படையிலான ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதளத்தில் இயங்குகிறது. இந்த டேப்லெட் சாதனம் 8GB மற்றும் 12GB வரையிலான LPDDR5x ரேம், மற்றும் 128GB UFS 3.1 / 256GB UFS 4.0 ஸ்டோரேஜ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இது 67W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast charging) ஆதரவுடன் 9,150mAh பேட்டரியை (Battery) பேக் செய்கிறது.

OnePlus Pad Pro சாதனம் 13 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் செல்பி கேமராவை பெறுகிறது. இது வைஃபை 6, ப்ளூடூத் (Bluetooth) மற்றும் NFC போன்ற இணைப்பு விருப்பங்களை வழங்குகிறது. இது குவாட் ஸ்பீக்கர்களைக் கொண்டுள்ளது. இதன் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.33,000 ஆகும். இந்த விலை 8GB + 128GB மாடலுக்கானது. இந்தியாவில் விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Pro With World's First Snapdragon 8 Gen 3 Chipset Goes On Sale Check Price and Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X