இறங்கி அடித்த OnePlus.. ரூ.12,999 பட்ஜெட்ல 9340mAh பேட்டரி.. 11 இன்ச் டிஸ்பிளே.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
இந்திய மார்கெட்டில் ஒன்பினஸ் நிறுவனம் அடுத்தடுத்து டேப்லெட்களை களமிறக்கி வருகிறது. ஏற்கனவே, ஒன்பிளஸ் பேட் 3 (OnePlus Pad 3) வெளியாகி இருந்தது. இப்போது, ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. கம்மியான விலைக்கு 9340mAh பேட்டரி, 11 இன்ச் பெரிய டிஸ்பிளே, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது.
ஒன்பிளஸ் பேட் 3 மாடலானது, ஜூன் மாத தொடக்கத்திலேயே இந்தியாவில் வெளியாகி இருந்தும், விற்பனை தொடங்கப்படவில்லை. செப்டம்பர் மாதத்தில் விற்பனை தொடங்க இருப்பதாக ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்தது. ஆகவே, நீண்ட மாதங்களுக்கு பிறகு புதிய டேப்லெட் மார்கெட்டுக்கு வந்தும், அதை வாங்க முடியாத நிலைக்கு ஒன்பிளஸ் பிரியர்கள் சென்றுவிட்டனர்.

இந்த நேரத்தில்தான் மற்றொரு புதிய டேப்லெட் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த டேப்லெட்டின் விற்பனையாவது உடனடியாக தொடங்குமா என்ற கேள்வி ஒன்பிளஸ் பிரியர்கள் மத்தியில் எழுந்தது. இந்த கேள்வி ஒன்பிளஸ் நிறுவனத்துக்கு கேட்டுவிட்டது போல, விற்பனை தேதி மட்டுமல்லாமல், ரூ.3,000 டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு வருவதை உறுதி செய்துள்ளது.
ஒன்பிளஸ் பேட் லைட் விலை (OnePlus Pad Lite Price): 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.15,999ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட எல்டிஇ (LTE) வேரியண்ட்டின் விலை ரூ.17,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கொடுக்கப்படுகிறது.
இந்த டிஸ்கவுண்ட் போக ரூ.12,999 ஆரம்ப விலைக்கு இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடலை வாங்கி கொள்ளலாம். ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. டிஸ்கவுண்ட் போக 6 மாதங்களுக்கான நோ-காஸ்ட் ஈஎம்ஐ கொடுக்கப்படுகிறது. பிளிப்கார்ட் (Flipkart), அமேசான் (Amazon) மற்றும் ஒன்பிளஸ் ஸ்டோர் ஆகிய தளங்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஏரோ ப்ளூ (Aero Blue) என்னும் ஒரேவொரு கலரில் விற்பனைக்கு கிடைக்கிறது. இந்த ரூ.12,999 பட்ஜெட்டிலும் டிஸ்பிளே தொடங்கி ஆடியோ மற்றும் பர்ஃபாமென்ஸ் பீச்சர்கள் தரமாக கொடுக்கப்பட்டு இருக்கிறது. லைட் மாடலாக இருந்தும் பேட்டரி பேக்கப் பக்காவாக கொடுக்கப்பட்டு இருக்கிறது அதேபோல குவாலிட்டியும் பிரீமியமாக இருக்கிறது. விரிவான பீச்சர்களை பார்ப்போம்.
ஒன்பிளஸ் பேட் லைட் அம்சங்கள் (OnePlus Pad Lite Specifications): ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1 (OxygenOS 15.0.1) கிடைக்கிறது. ஆகவே, லேட்டஸ்ட் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு நிகரான யுஐ கிடைக்கும். இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப 4ஜி அவுட்புட் கொடுக்கும்படி ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் (Octa Core MediaTek Helio G100 6nm) சிப்செட் உள்ளது.
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் சிப்செட்டுக்கு ஏற்ப மாலி ஜி57 ஜிபியு கிடைக்கிறது. 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 207 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் பேக் செய்துள்ளது.
இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கின்றன. ஆகவே, நான்கு ஸ்பீக்கர்கள் மூலம் ஆடியோ அவுட் பிரீமியமாக இருக்கும். 33W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 9340mAh பேட்டரி உள்ளது. 5 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பீ கேமராவை கொடுக்கிறது.


Click it and Unblock the Notifications








