பிச்சிக்குது விற்பனை.. ரூ.12,999 போதும்.. 9340mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. புது OnePlus டேப்லெட்.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் ஃப்ரீடம் விற்பனையில் (Flipkart Freedom Sale) ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மாடலின் விற்பனை டிஸ்கவுண்ட் போக தொடங்கி இருக்கிறது. அதேபோல சியோமி, ரியல்மி போன்ற பிராண்ட்களின் டேப்லெட் மாடல்களுக்கும் பட்டையை கிளப்பும் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. முதலில் ஒன்பிளஸ் பேட் லைட் மாடலின் முழு பீச்சர்கள், விலை மற்றும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் ஜூலை 23ஆம் தேதியே இந்த ஒன்பிளஸ் பேட் லைட் மாடல் வெளியாகிவிட்டது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் பேங்க் டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரத்தில் பிளிப்கார்ட் ஃப்ரீடம் விற்பனையும் இப்போது தொடங்கியிருப்பதால், இதேபோல பல்வேறு டேப்லெட் மாடல்களுக்கு டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.

6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வை-பை (Wi-Fi) மாடலின் விலை ரூ.15,999ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட எல்டிஇ (LTE) மாடலின் விலை ரூ.17,999ஆகவும் இருக்கிறது. இந்த மார்கெட் விலையில் இருந்து ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு இது கொடுக்கப்படுகிறது. டெபிட் கார்டாக இருந்தால், ரூ.750 டிஸ்கவுண்ட் வருகிறது.
ஆகவே, 6 ஜிபி ரேம் மாடலை ரூ.12,999 பட்ஜெட்டிலும், 8 ஜிபி ரேம் மாடலை ரூ.15,999 பட்ஜெட்டிலும் ஆர்டர் செய்ய முடியும். இந்த டேப்லெட்டில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 11 இன்ச் (1920 x 1200 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 207 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.

ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி100 6என்எம் (Octa Core MediaTek Helio G100 6nm) சிப்செட் மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஆக்ஸிஜன்ஓஎஸ் 15.0.1 (OxygenOS 15.0.1) மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) கிடைக்கிறது. ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio) சப்போர்ட் உள்ளது.
இந்த ஒன்பிளஸ் பேட் லைட் டேப்லெட்டில் 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 9340mAh பேட்டரி உள்ளது. 5 எம்பி மெயின் கேமரா உள்ளது. அதேபோல 5 எம்பி செல்பீ ஷூட்டர் வருகிறது. இப்போது, இதே பிளிப்கார்ட் ஃப்ரீடம் விற்பனையில் மற்ற டேப்லெட் மாாடல்களுக்கு கிடைக்கும் டிஸ்கவுண்ட் விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சியோமி பேட் 7 டேப்லெட்டில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.25,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.3,250 டிஸ்கவுண்ட் போக ரூ.22,749 விலைக்கு கிடைக்கிறது. 11.2 இன்ச் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 சிப்செட் மற்றும் 8850mAh பேட்டரி மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொடுக்கிறது.
ரியல்மி பேட் 2 லைட் (realme Pad 2 Lite) டேப்லெட்டின் 4 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட மாடலின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இப்போது, பிளிப்கார்ட் தளத்தில் ரூ.11,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இதுவொரு 4ஜி டேப்லெட் மாடலாகும். 11 இன்ச் டிஸ்பிளே, ஹீலியோ ஜி99 சிப்செட், 8300mAh பேட்டரி மற்றும் 15W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது.


Click it and Unblock the Notifications








