Home
Gadgets

போதும் போதும் லிஸ்ட் பெருசா போகுது.. OnePlus Summer Launch நிகழ்வு.. ஜூலை 8-ல் மேலும் 2 புதிய அறிமுகம்!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் 2025 ஆம் ஆண்டிற்கான சம்மர் லான்ச் ஈவென்ட் (OnePlus Summer Launch Event 2025) ஆனது வருகிற ஜூலை 8 ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்பை ஒன்பிளஸ் நிறுவனம் நேற்று (ஜூன் 16) வெளியிட்டு இருந்தது.

முதலில் - இந்நிகழ்வில் ஒன்பிளஸ் நோர்ட் 5 சீரீஸின் கீழ் 2 ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆடியோ பிரிவின் கீழ் ஒன்பிளஸ் பட்ஸ் 4 என மொத்தம் 3 புதிய அறிமுகங்கள் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று மேலும் 2 புதிய தயாரிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

OnePlus Summer Launch நிகழ்வு.. ஜூலை 8-ல் மேலும் 2 புதிய அறிமுகம்!

ஜூலை 8 ஆம் தேதி நிகழ்வின் போது நடக்கும் நிகழ்வின் போது தேர்ந்தெடுக்கப்பட்ட உலகளாவிய சந்தைகளில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஆண்ட்ராய்டு டேப்லெட் ஆக ஒன்பிளஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மற்றும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஆக ஒன்பிளஸ் வாட்ச் 3 43மிமீ (OnePlus Watch 3 43mm) ஆகியவைகளும் அறிமுகப்படுத்துவதாக ஒன்பிளஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

ஒன்பிளஸ் வாட்ச் 3 43மிமீ மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 1.32-இன்ச் டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் டபுள்யூ5 ஜென் 1 சிப்செட்
- 345mAh பேட்டரி
-இது ஒப்போவின் வாட்ச் எக்ஸ்2 மினி (Oppo Watch X2 Mini) மாடலை போலவே பிளாக் மற்றும் ஒயிட் கலர்களில் வரலாம்.

OnePlus Summer Launch நிகழ்வு.. ஜூலை 8-ல் மேலும் 2 புதிய அறிமுகம்!

ஒன்பிளஸ் பேட் லைட் மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 11-இன்ச் டிஸ்பிளே
- மீடியாடெக் ஹீலியோ ஜி100 சிப்செட்
- முன் மற்றும் பின்புறத்தில் 5-மெகாபிக்சல் கேமராக்கள்
- 9340mAh பேட்டரி

ஒன்பிளஸ் பட்ஸ் 4 மாடலில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- டூயல் ட்ரைவர்ஸ் (Dual Drivers)
- டூயல் டிஏசி'ஸ் (Dual DACs)
- ஹை-ரெஸ் எல்எச்டிசி 5.0 (Hi-Res LHDC 5.0)
- 3டி ஆடியோ (3D Audio)
- கேம் மோட் (Game Mode) இல் 47எம்எஸ் அல்ட்ரா-லோ லேட்டன்சியை (47ms Ultra Low Latency)
- ஜென் க்ரீன் (Zen Green) மற்றும் ஸ்ட்ராம் க்ரே (Storm Gray) கலர் ஆப்ஷன்களில் வரும்.

OnePlus Summer Launch நிகழ்வு.. ஜூலை 8-ல் மேலும் 2 புதிய அறிமுகம்!

ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2800 x 1272 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.83-இன்ச் AMOLED டிஸ்பிளே
- ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 3 (Snapdragon 8s Gen 3) சிப்செட்
- 8ஜிபி அல்லது 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி அல்லது 512ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 50 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- 80W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5200mAh பேட்டரி
ட்ரை ஐஸ் (Dry Ice), மார்பில் சேன்ட்ஸ் (Marble Sands) மற்றும் பாண்டாம் க்ரே (Phantom Gray) ஆகிய 3 கலர்களில் வெளியாகலாம்.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்?
- 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 2392 x 1080 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
- 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டைமன்சிட்டி 8350 (MediaTek Dimensity 8350) சிப்செட்
- 8ஜிபி மற்றும் 128ஜிபி அல்லது 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்

- 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ்
- 16 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டர்
- 80W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 5200mAh பேட்டரி
- பிளாக் இன்ஃபினிட்டி (Black Infinity) மற்றும் மார்பிள் மிஸ்ட் (Marble Mist) ஆகிய 2 கலர்களில் வெளியாகலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Pad Lite OnePlus Watch 3 43mm Also Launching in Summer Launch Event on July 8
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X