மிரளவிடுது சேல்.. ரூ.5,000 ஆஃபர்.. ரூ.14,999-க்கு வந்த OnePlus பேட்.. EIS கேமரா.. டால்பி ஆடியோ.. எந்த மாடல்?
பிளிப்கார்ட் விற்பனையில் (Flipkart Sale) இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட் போக ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, வாங்கினால் மார்கெட் விலையில் இருந்து ரூ.5,000 கம்மியாக கிடைக்கிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கேமரா, டால்பி ஆடியோ, 4 ஸ்பீக்கர்கள், எல்சிடி டிஸ்பிளே போன்ற பீச்சர்களை கொண்ட இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டின் விவரங்கள் இதோ.
ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): இந்த டேப்லெட்டில் 11.3 இன்ச் (2408 x 1720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. ஆகவே, பெரிய டிஸ்பிளே விரும்பும் பிரியர்களுக்கு பக்காவாக அவுட்புட் கொடுக்கும். ஏனென்றால், 2.4K ரெசொலூஷன் மட்டுமல்லாமல், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. ஆகவே, ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ப இருக்கும்.

இந்த டிஸ்பிளேவுக்கு 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. இந்த பிரைட்னஸ் மூலம் அவுட்டோரில் பிரீமியம் அவுட்புட் எதிர்பார்க்க முடியாது. கண்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க வழக்கமாக கிடைக்கும் டிசி டிம்மிங் (DC Dimming) மட்டுமல்லாமல், லோவ் ப்ளூ லைட் (Low Blue Light) கொடுக்கிறது.
இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) பேஸ்டு ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.2 (OxygenOS 13.2) கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டுக்கு ஏற்ப மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் மட்டுமே கிடைக்கிறது. இதுவொரு 4ஜி சிப்செட் மாடலாகும். ஆகவே, இதில் வை-பை மட்டுமல்லாமல், 4ஜி கனெக்டிவிட்டி மாடலும் கிடைக்கிறது.
8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் இருக்கின்றன. இந்த 2 வேரியண்ட்களிலும் எல்டிஇ (LTE) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. அதேபோல 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரியில் வை-பை மாடலும் கிடைக்கிறது. இந்த கனெக்டிவிட்டிக்கு ஏற்ப விலையிலும் மாற்றங்கள் இருக்கின்றன. 1 டிபி மைக்ரோஸ்டி சப்போர்ட் வருகிறது.
8 எம்பி சிங்கிள் ரியர் மெயின் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. இந்த மெயின் கேமராவில் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜி வருகிறது. அதேபோல 1080p வீடியோ ரெக்கார்டிங் சப்போக்ட் கிடைக்கிறது. இந்த செல்பீ ஷூட்டரில் பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
11.3 இன்ச் டிஸ்பிளேவுக்கு ஏற்ப பேக்கப் கொடுக்கும்படி 8000mAh பேட்டரி மற்றும் அதற்கு 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வருகிறது. குவாட் டிசைனில் 4 ஸ்பீக்கர்களை கொடுக்கிறது. அதேபோல டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் பெற்று கொள்ளலாம். ட்வின் மின்ட் (Twin Mint) என்னும் ஒரேவொரு கலரில் ஆர்டருக்கு கிடைக்கிறது.
இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் வை-பை கனெக்டிவிட்டியுடன் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொடுக்கும் வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.19,999ஆக இருக்கிறது. ஆனால், பிளிப்கார்ட் விற்பனையில் ரூ.3,000 விலை குறைப்பு போக ரூ.15,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மேலும், ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு ரூ.2,000 டிஸ்கவுண்ட் போக ரூ.14,999 பட்ஜெட்டில் வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








