இதுதான் டிஸ்கவுண்ட்.. ரூ.15,999 பட்ஜெட்ல QUAD ஸ்பீக்கர்கள்.. 8000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்.. எந்த மாடல்?
பட்ஜெட்டில் பட்டையை கிளப்பும் பீச்சர்களுடன் டேப்லெட் எதிர்பார்க்கும் கஸ்டமர்களுக்கு 11.3 இன்ச் டிஸ்பிளே, 8000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங், குவாட் ஸ்பீக்கர்கள், 8 ஜிபி ரேம் மற்றும் 8 எம்பி கேமராவுடன் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) பக்கா ஆப்ஷனாக இருக்கும். இப்போது, வாங்கினால், மார்கெட் விலையில் இருந்து விலை குறைப்பு மற்றும் பேங்க் டிஸ்கவுண்ட் போக அதிக லாபத்துடன் ஆர்டர் செய்யலாம். கிட்டத்தட்ட 2 வருடங்கள் பழைய மாடலாகும். அதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
ஒன்பிளஸ் பேட் கோ அமேசான் விற்பனை (OnePlus Pad Go Amazon Sale): இந்த டேப்லெட்டின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வை-பை வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருந்தது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.2,000 விலை குறைப்பு சலுகை போக ரூ.17,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. இந்த விலையிலும் கூடுதலாக ரூ.2,000 பேங்க் டிஸ்கவுண்ட் பெற்று கொள்ளலாம்.

இந்த பேங்க் டிஸ்கவுண்ட்டை மட்டும் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு பயன்படுத்தி பெற்று கொள்ள வேண்டும். இதுபோக வழக்கமாக கிடைக்கும், ரூ.16,950 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, இப்போது, ஆர்டர் செய்யும் பட்சத்தில் ரூ.4,000 கம்மியான விலைக்கு இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம்.
ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): ஸ்லீக் டிசைனில் டூயல்-டோன் கொடுக்கும்படி ட்வின் மின்ட் (Twin Mint) கலரில் கிடைக்கிறது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) டெக்னாலஜி கொண்ட 8 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. அதேபோல 8 எம்பி செல்பீ ஷூட்டர் (1080p ரெசொலூஷன்) வருகிறது.
11.3 இன்ச் (2408 x 1720 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே மற்றும் 2.4K ரெசொலூஷன் கிடைக்கிறது. மேலும், 90Hz ரெஃப்ரெஷ் ரேட், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. மேலும், 180Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் டிசி டிம்மிங், லோவ் ப்ளூ லைட் சப்போர்ட் கொடுக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு ஏற்ப ஆடியோ வருகிறது.

ஆகவே, டால்பி அட்மோஸ் (Dolby Atmos) சப்போர்ட் கொண்ட குவாட் ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. ஓடிடி பிரியர்களுக்கு ஸ்டீரியோ அனுபவம் பக்காவாக இருக்கும். இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் ஆக்ஸிஜன்ஓஎஸ் 13.2 (OxygenOS 13.2) கொண்ட மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் கிடைக்கிறது. ஆகவே, எல்டிஇ வேரியண்ட்டும் கிடைக்கிறது.
பேட்டரி பேக்கப் மீடியம் அவுட்புட் கொடுக்கும்படி எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 8000mAh பேட்டரி மட்டுமே கிடைக்கிறது. இருப்பினும், 33W சூப்பர்வூக் (SUPERVOOC) சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பேட்டரியுடன் 6.89 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. 532 கிராம் எடை கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் பக்கா சென்சார்களை பேக் செய்துள்ளது.
ஆகவே, ஜியோமேக்னடிக் சென்சார், லைட் சென்சார் மற்றும் கைரோஸ்கோப் சென்சார் உள்ளிட்டவை கிடைக்கின்றன. ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2), ஜிபிஎஸ் (GPS), வை-பை 5 (Wi-Fi 5) கனெக்டிவிட்டி கிடைக்கிறது. பேஸ் அன்லாக் (Face Unlock) சப்போர்ட் கிடைக்கிறது. ஓஎஸ் மற்றும் சிப்செட் மட்டுமே ஓல்டு வெர்ஷனாக இருக்கிறது. ஆனால், மற்ற பீச்சர்கள் பக்காவாகவே இருக்கிறது.


Click it and Unblock the Notifications