Home
Gadgets

OnePlus ஒரே போடு.. ரூ.4,000 ஆஃபரில் Pad Go டேப்லெட்.. டால்பி அட்மோஸ்.. 8000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்!

இந்திய மார்கெட்டில் ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) டேப்லெட் வெளியாகி இருப்பதால், முந்தைய மாடலான ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) டேட்லெட் ஆனது விலை குறைப்பில் கிடைக்கிறது. அமேசான் தளத்தில் கூடுதலாக தள்ளுபடியும் கிடைப்பதால், கம்மியான விலைக்கு வாங்கி கொள்ளலாம். டால்பி அட்மோஸ் ஸ்பீக்கர்கள், 8000mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது.

அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி (வை-பை) கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.16,999ஆக இருக்கிறது. இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட போது, இதே வேரியண்ட்டின் விலை ரூ.19,999ஆக இருந்தது. ஆகவே, ரூ.3,000 விலை குறைப்பில் கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,000 தள்ளுபடி போக ரூ.15,999 விலைக்கு கிடைக்கிறது.

OnePlus ஒரே போடு.. ரூ.4,000 ஆஃபரில் Pad Go டேப்லெட்.. டால்பி அட்மோஸ்!

ஒன்பிளஸ் பேட் கோ அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட் கொண்ட மாடலாக இந்த ஒன்பிளஸ் பேட் கோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) கொண்டுள்ளது. மேலும், ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.2 (OxygenOS 13.2) கொடுத்துள்ளது. டால்பி அட்மோஸ் (Dolby Atmos) கொண்டுள்ளது.

குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers), அதாவது 4 ஸ்பீக்கர்களை இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட் கொடுத்துள்ளது. 11.3 இன்ச் (2408 x 1720 இன்ச்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைத்துள்ளது. இதில் 2.4K ரெசொலூஷன், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் பேக் செய்யப்பட்டுள்ளது. மேலும், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டியை பயன்படுத்தி கொள்ளலாம்.

வை-பை 5 (Wi-Fi 5) கனெக்டிவிட்டி மாடலாக இருக்கிறது. 4ஜி எல்டிஇ (4G LTE) கனெக்டிவிட்டி கொண்ட வேரியண்ட் கிடைக்கிறது. ஆனால், அந்த வேரியண்ட்டின் விலை ரூ.18,999 விலைக்கு கிடைக்கிறது. மேலும், ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2) கனெக்டிவிட்டி கொடுத்துள்ளது. ஈஐஎஸ் டெக்னலாஜி கொண்டுள்ளது. 8 எம்பி ரியர் கேமரா கொடுக்கிறது.

வீடியோ கால் மற்றும் செல்பீகளுக்காக 8 எம்பி செல்பீ கேமரா வருகிறது. 8000mAh பேட்டரியை கொண்ட இந்த ஒன்பிளஸ் பேட் கோ டேப்லெட்டில் 33W சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. ட்வின் மின்ட் (Twin Mint) கலரில் வாங்க கிடைக்கிறது. மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் உள்ளது. 4ஜி வேரியண்ட் வாங்கினால், சிம் கார்டு சிலாட் கிடைக்கும்.

ஒன்பிளஸ் பேட் கோ 2 அம்சங்கள் (OnePlus Pad Go 2 Specifications): ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்ட்ரா 4 என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultra 4nm) சிப்செட் கொடுத்துள்ளது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16 (OxygenOS 16) கொண்டுள்ளது. 12.1 இன்ச் (2800 x 1980 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளேவை கொடுக்கிறது.

இந்த டிஸ்பிளேவுக்கு டால்பி விஷன் (Dolby Vision) கொடுத்துள்ளது. மேலும், இதில் 120Hz ரெப்ரெஷ் ரேட் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பீ கேமராவானது இந்த ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட்டில் கிடைக்கிறது. குவாட் ஸ்பீக்கர்களும், டால்பி அட்மோஸ் ஆடியோ சப்போர்ட்டும் கிடைத்துள்ளது.

வை-பை 6 (Wi-Fi 6), ப்ளூடூத் 5.4 (Bluetooth 5.4) கிடைக்கிறது. 5ஜி கனெக்டிவிட்டி ஆப்ஷனில் கிடைக்கிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 10050mAh பேட்டரி கொண்டுள்ளது. லாவெண்டர் டிரைப்ட் (Lavender Drift), ஷேடோ பிளாக் (Shadow Black) கலர்களில் வாங்கி கொள்ளலாம். 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.26,999ஆக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go Price Drop After OnePlus Pad Go 2 Launched in India Check Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X