8000mAh பேட்டரி.. 33W சார்ஜிங்குடன் மட்ட ரேட்ல OnePlus பேட்.. டால்பி ஆடியோ.. 1 டிபி மெமரி.. எந்த டேப்லெட்?
ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) மாடலானது இந்திய மார்கெட்டில் வெளியாக இருப்பதால் அதற்கு முந்தைய மாடலான ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடலுக்கு நேரடி விலை குறைப்பு கிடைக்கிறது. கூடுதலாக பேங்க் தள்ளுபடி கிடைப்பதால், மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். இந்த டேப்லெட்டுக்கு கிடைக்கும் விலை குறைப்பு, தள்ளுபடி விவரங்கள் இதோ.
இந்தியாவில் வருகிற டிசம்பர் 17ஆம் தேதி ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடல் வெளியாக இருக்கிறது. அதோடு டச் பென் மாடலான ஒன்பிளஸ் பேட் கோ 2 ஸ்டைலோ (OnePlus Pad Go 2 Stylo) வெளியாக இருக்கிறது. அமேசான் தளத்தில் மைக்ரோசைட் ஓப்பன் செய்யப்பட்டு இருக்கிறது. இதுவொரு 5ஜி மடாலாக இருக்கிறது. ஷேடோ பிளாக் (Shadow Black) கலரில் கிடைக்க இருக்கிறது.

மேலும், லாவெண்டர் டிரைப்ட் (Lavender Drift) ஆகிய கலர்களிலும் கிடைக்க இருக்கிறது. இந்த பீச்சர்கள் மட்டுமே உறுதியாகி இருக்கிறது. இந்த மாடல் வெளியாக இருப்பதால், இதற்கு முன்னதாக விற்பனைக்கு வந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலுக்கு ரூ.3,000 நேரடி தள்ளுபடி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.19,999 பட்ஜெட்டில் வந்தது.
ஆனால், இப்போது ரூ.16,999 பட்ஜெட்டில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது. இதுபோக ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.15,999 பட்ஜெட்டில் இப்போது ஆர்டர் செய்து கொள்ளலாம். எச்டிஎப்சி மற்றும் ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டுகளுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. மேலும், ரூ.16,050 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகையை கொடுக்கிறது.
ஒன்பிளஸ் பேட் கோ முக்கிய அம்சங்கள் (OnePlus Pad Go Specifications): இந்த ஒன்பிளஸ் டேப்லெட் வை-பை மாடலாகும். 2408 x 1720 ரெசொலூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 11.3 இன்ச் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. ஆக்ஸிஜன் ஓஎஸ் 13.2 (OxygenOS 13.2) கிடைக்கிறது.
இந்த பட்ஜெட் விலைக்கு ஏற்றபடி மீடியாடெக் ஹீலியோ ஜி99 (MediaTek Helio G99) சிப்செட்டை கொடுத்துள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி வேரியண்ட் மட்டுமல்லாமல், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் கிடைக்கிறது. 8000mAh பேட்டரியையும் 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் கொண்டுள்ளது. இதற்கு டைப்-சி சார்ஜிங் சப்போர்ட் கிடைக்கிறது.
இந்த ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் டால்பி அட்மோஸ் (Dolby Atmos) மற்றும் குவாட் ஸ்பீக்கர்கள் (Quad Speakers) வருகிறது. வை-பை மட்டுமல்லாமல், 4ஜி எல்டிஇ (4G LTE) ஆப்ஷனல் மாடலும் கிடைக்கிறது. ப்ளூடூத் வி5.2 (Bluetooth v5.2), வை-பை 5 (Wi-Fi 5) கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கொண்ட 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உள்ளது.
8 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது. ஜியோமேக்னட்டிக் சென்சார் (Geomagnetic Sensor), லைட் சென்சார் (Light Sensor) மற்றும் கைரோஸ்கோப் (Gyroscope) கிடைக்கிறது. 532 கிராம் எடை கொடுக்கிறது. 6.89 எம்எம தடிமன் மட்டுமே வருகிறது. ட்வின் மின்ட் (Twin Mint) கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம். பேஸ் அன்லாக் (Face unlock) சப்போர்ட் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








