Home
Gadgets

போட்டு தாக்கு.. இவ்ளோ சீப் ஆன விலைக்கு 5ஜி, Wi-Fi 6 ஆதரவு, 8GB ரேம்-ஆ.. பளபளக்கும் புது OnePlus டேப்லெட்!

ஒன்பிளஸ் நிறுவனம் ஆனது ஒன்பிளஸ் 15 அறிமுகத்தின் மூலம் இந்திய மொபைல் சந்தையில் தான் ஏற்படுத்திய "அலையை" இன்னும் கொஞ்சம் நீட்டிக்கும் படியாக.. ஒரு புதிய 5ஜி டேப்லெட் உட்பட 2 புதிய தயாரிப்புகளை டிசம்பர் 17 ஆம் தேதியன்று அறிமுகம் செய்யவுள்ளது.

அது ஒன்பிளஸ் பேட் கோ 2 (OnePlus Pad Go 2) டேப்லெட் ஆகும். இது வருகிற டிசம்பர் 17 ஆம் தேதி அன்று ஒன்பிளஸ் 15ஆர் (OnePlus 15R) ஸ்மார்ட்போனுடன் சேர்ந்து இந்தியாவிலும், உலக சந்தைகளிலும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகத்திற்கு முன்னதாக ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட் மாடலின் முக்கிய அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம் குறித்த விவரங்கள் லீக் ஆகியுள்ளன.

இவ்ளோ சீப் ஆன விலைக்கு 5ஜி, Wi-Fi 6 ஆதரவு, 8GB ரேம்-ஆ!

ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட்டில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? இந்தியாவில் ஷேடோ பிளாக் (Shadow Black) மற்றும் லேவண்டர் ட்ரிப்ட் (Lavender Drift) ஆகிய 2 கலர்களில் அறிமுகம் செய்யப்படும். இந்த டேப்லெட்டின் 5ஜி வேரியண்ட் ஆனது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷனில் மட்டுமே பிளாக் கலரில் மட்டுமே அறிமுகம் செய்யப்படலாம்

இந்த டேப்லெட்டுக்கான டீஸர் படத்தில், ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட்டில் ஒரு சிறிய சர்குலர் வடிவ பம்பை காண முடிகிறது. இது டேப்லெட்டின் பின்புறத்தில் சிங்கிள் கேமரா லென்ஸ் இடம்பெறும் என்பதை குறிக்கிறது. மேலும் இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 16 (Android 16) ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட சமீபத்திய ஆக்சிஜென் ஓஎஸ் 16 (Oxygen OS 16)கொண்டு இயங்கும்.

ஒருவேளை இந்த யுஐ (UI) பற்றி உங்களுக்கு தெரியாவிட்டால், இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்கின் ஆகும். இது லாக்ஸ்கிரீன் கஸ்டமைசேஷன்ஸ், லிக்விட் அனிமேஷன்கள் மற்றும் ரெக்கார்டர் (Recorder) மற்றும் நோட்ஸ் (Notes) போன்ற முக்கிய பர்ஸ்ட் பார்ட்டி ஆப்களில் இணைக்கப்பட்ட ஏஐ ஆதரவு அம்சங்கள் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.

இதுதவிர்த்து ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட்டில் டூயல் பேண்ட் ஆதரவு உடனான (2.4GHz + 5GHz) ப்ளூடூத், வைஃபை 6 (Wi-Fi 6) ஆதரவு, 2ஜி / 3ஜி / 4ஜி / 5ஜி நெட்வொர்க் இணைப்புக்கான ஆதரவு ஆகிய அம்சங்களையும் எதிர்பார்க்கலாம்.

ஒன்பிளஸ் பேட் கோ 2 டேப்லெட் என்ன விலைக்கு அறிமுகம் செய்யப்படலாம்? நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் கோ (OnePlus Pad Go) மாடல் ஆனது ரூ.19,999 க்கு அறிமுகமானது. ஆக ஒன்பிளஸ் பேட் கோ 2 மாடலும் நிச்சயம் பட்ஜெட் விலையில் தான் வரும். சில நம்பகமான "சோர்ஸ்கள்" இது இன்னும் மலிவான விலைக்கு வரலாம் அல்லது அதே ரூ.19,999 க்கு அறிமுகம் செய்யப்படலாம் என்கின்றன.

ஒன்பிளஸ் நிறுவனம் ஏற்கனவே ஒன்பில்ஸ் பேட் லைட் (OnePlus Pad Lite) மாடலை கொண்டுள்ளது. இது ரூ.15,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் கடந்த ஆண்டு அறிமுகமான ஒன்பிளஸ் பேட் 2 (OnePlus Pad 2) மாடல் ஆனது ரூ.30,000 பட்ஜெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. ஆக டிசம்பர் 17 அறிமுகமாகும் மாடல் பெரும்பாலும் ரூ.20,000 -ரூ.25,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் வரவே அதிக வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போன் என்ன விலைக்கு வரலாம்? இந்தியாவில் ஒன்பிளஸ் 15ஆர் ஸ்மார்ட்போனின் விலை ரூ.44,999 இல் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் சில நாட்களுக்கு முன்னர் அறிமுகமான ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.72,999 ஆகும்.அதாவது ஒன்பிளஸ் 15ஆர் மாடலின் எதிர்பார்க்கப்படும் விலையை விட சுமார் ரூ.28,000 குறைவாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Pad Go 2 Specifications Expected Price leaked ahead India Launch on December 17
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X