Home
Gadgets

வெச்சான் பாரு OnePlus.. 5.94 மிமீ பாடியில் 13380mAh பேட்டரி.. 80W சார்ஜிங்.. 144Hz டிஸ்பிளே.. எந்த மாடல்?

ஸ்லிம் பாடியில் பேட் தேடிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த டேப்லெட் பிரியர்களையும் தட்டித்தூக்கும்படி ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) வெளியாக இருக்கிறது. வெறும் 5.94 எம்எம் பாடியில் 13380mAh பேட்டரி கொண்ட மாடலாக வெளியாக இருக்கிறது. இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடல் குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இந்திய மார்கெட்டில் வருகிற ஏப்ரல் 30ஆம் தேதியன்று இந்த ஒன்பிளஸ் பேட் 4 அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு கிடைக்க இருப்பதால், கிட்டத்தட்ட முக்கிய பீச்சர்கள் அனைத்தும் உறுதி செய்யப்பட்டன. 13380mAh பேட்டரி கிடைக்க இருப்பது உறுதியானது. இருப்பினும், தடிமன் விவரங்கள் உறுதியாகாமல் இருந்தது.

வெச்சான் பாரு OnePlus.. 5.94 மிமீ பாடியில் 13380mAh பேட்டரி!

இப்போது, மார்கெட்டில் கசிந்துள்ளது. வெறும் 5.94 மிமீ பாடியில் வெளியாக இருக்கிறது. ஆகவே, அல்ட்ரா ஸ்லிம் ஸ்மார்ட்போன் மாடலாக இருக்கப்போகிறது. எடை குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், ஓரளவுக்கு லைட் வெயிட்டில் எதிர்பார்க்கலாம். ஏனென்றால், 8 ஸ்பீக்கர்களை இந்த ஒன்பிளஸ் பேட் 4 கொடுக்க இருக்கிறது.

ஏப்ரல் 30ஆம் தேதி இந்த ஒன்பிளஸ் பேட் 4 மட்டும் வெளியாகவில்லை. டிரிபிள் ட்ரீட்டாக ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ (OnePlus Stylo Pro) மற்றும் ஒன்பிளஸ் பேட் 4 ஸ்மார்ட் கீபோர்ட் (OnePlus Pad 4 Smart Keyboard) ஆகியவற்றுடன் வெளியாக இருக்கிறது. இருப்பினும், இந்த கூடுதல் அசசரிஸ்களுக்கு விலையும் கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளது.

ஒன்பிளஸ் பேட் 4 அம்சங்கள் (OnePlus Pad 4 Specifications): 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்டுள்ளது. கூடுதல் வேரியண்ட்கள் கிடைக்குமா என்பது ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகே தெரியவரும். குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Qualcomm Snapdragon 8 Elite Gen 5) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொடுக்க இருக்கிறது.

பேட் மாடல்களுக்கு கிடைக்கும் ஆக்ஸிஜன்ஓஎஸ் (OxygenOS) கொடுக்கப்பட இருக்கிறது. 13.2 இன்ச் (3392 x 2400 பிக்சல்கள்) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் பேட் 4 கொடுத்துள்ளது. இந்த டிஸ்பிளேவுக்கு 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், கேமிங் பிரியர்கள் விரும்பும்படி 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 3.4K ரெசொலூஷன் கொடுக்கப்பட்டு உள்ளது.

கலர் அக்கியூரசி கொடுக்கும்படி 12 பிட் கலர் டெப்த் வருகிறது. 315 பிபிஐ பிக்சல் டென்சிட்டி கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் டிசிஐ பி3 (DCI - P3) கலர் காமட் ஆனது 98 சதவீதத்தில் கிடைக்கிறது. ஆகவே, 5.94 மிமீ ஸ்லிம் பாடியில் பெரிய டிஸ்பிளே அனுபவத்தை பெறலாம். 80W சூப்பர்வூக் சார்ஜிங் கொண்ட 13380mAh பேட்டரியை இந்த ஒன்பிளஸ் பேட் 4 கொடுக்கிறது.

4 ட்வீடர்கள் மற்றும் 4 பேஸ் யூனிட்களை கொண்ட 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கிறது. டால்பி விஷன் கிடைப்பதால், ஓடிடி பிரியர்களுக்கு ஏற்ற பிரீமியம் ஆடியோ வீடியோ கிடைக்கும். டியூன் க்ளோவ் (Dune Glow) மற்றும் சேஜ் மிஸ்ட் (Sage Mist) ஆகிய கலர்களில் இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடலை ஆர்டர் செய்து கொள்ளலாம். மிட்-ரேஞ்ச் பட்ஜெட்டில் கிடைக்கலாம்.

Best Mobiles in India

English summary
OnePlus Pad 4 With 5.94 mm Slim Body to Launch in India on April 30 Check Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X