ரூ.5,000 டிஸ்கவுண்ட்டில் 13380mAh பேட்டரி OnePlus பேட்.. 67W சார்ஜிங்.. 8 ஸ்பீக்கர்கள்.. பிச்சிக்குது சேல்!
மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஒன்பிளஸ் பேட் 4 (OnePlus Pad 4) அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்களில் விற்பனைக்கு வந்துவிட்டது. பெரிய 13380mAh பேட்டரியுடன் 5.94 எம்எம் ஸ்லிம் பாடி கொண்டுள்ளதால், விற்பனையில் பட்டையை கிளப்பி வருகிறது. இப்போது, விற்பனை விவரங்களை பார்க்கலாம்.
லேப்டாப் மாடல்களுக்கு நிகராக பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் டேப்லெட்டாக இந்த ஒன்பிளஸ் பேட் 4 அறிமுகம் செய்யப்பட்டது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் சிப்செட்டுடன் 12 ஜிபி ரேம் கொடுத்து, லேக்-ப்ரீ பர்ஃபாமென்ஸை உறுதி செய்தது. ஒன்பிளஸ் ஸ்மார்ட் கீபோர்ட் (OnePlus Smart Keyboard) கொடுத்து லேப்டாப் பீல் கொடுத்தது.

இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு வந்துவிட்டது. 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி மற்றும் 12 ஜிபி ரேம் + 512 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்கள் இருக்கின்றன. ஆனால், இப்போது, 256 ஜிபி வேரியண்ட் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. பிரீமியம் மாடலாக இருப்பதால், ரூ.59,999ஆக விலை இருக்கிறது. இருப்பினும், அமேசான் தளத்தில் ரூ.5,000 டிஸ்கவுண்ட் போக கிடைக்கிறது.
ஆனால், இதற்கு எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு வழியாக ஈஎம்ஐ ஆப்ஷனில் ஆர்டர் செய்ய வேண்டும். அமேசான் ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு வழியாக ஆர்டர் செய்தால், ரூ.17,999 தள்ளுபடி கிடைக்கும். ஆகவே, ரூ.54,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். பிளிப்கார்ட் தளத்தில் ரூ.600 கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட் போக விற்பனைக்கு கிடைக்கிறது.
இந்த ஒன்பிளஸ் பேட் 4 மாடலானது, வை-பை ஒன்லி (Wi-Fi Only) கனெக்டிவிட்டியுடன் கிடைக்கிறது. டூன் க்ளோவ் (Dune Glow) மற்றும் சேஜ் மிஸ்ட் (Sage Mist) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம். ஒன்பிளஸ் ஸ்டைலோ ப்ரோ (OnePlus Stylo Pro) கிடைக்கிறது. ஆகவே, ஸ்மார்ட் கீபோர்ட் மட்டுமல்லாமல், ஸ்டைலோ ப்ரோ வழியாகவும் பயன்படுத்தி கொள்ளலாம்.
இதில் ஏஐ ரைட்டர் (AI Writer), ஏஐ சம்மரி (AI Summery), ஏஐ டிரான்ஸ்லேட் (AI Translate) மற்றும் ஏஐ பெயிண்டர் (AI Painter) கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரீமியம் பெயிண்டிங் அனுபவத்தை ஸ்டைலோ ப்ரோ வழியாக பெற்று கொள்ளலாம். மேலும், வொர்க் ரீதியாக பயன்படுத்தி கொள்ள ஒன்பிளஸ் ஏஐ (OnePlus AI) பீச்சர்களும் கிடைக்கின்றன.
ஒன்பிளஸ் பேட் 4 அம்சங்கள் (OnePlus Pad 4 Specifications): 3392 x 2400 பிக்சல்களுடன் 3.4K ரெசொலூஷன் கொண்ட 13.2 இன்ச் எல்சிடி (LCD) டிஸ்பிளேவை இந்த ஒன்பிளஸ் பேட் 4 கொடுத்துள்ளது. 144Hz ரெஃப்ரெஷ் ரேட், 1000 நிட்ஸ் எச்பிஎம் பிரைட்னல் மற்றும் 540Hz டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. மேலும், 315 பிபிஐ பிக்சல் டென்சிட்டி உள்ளது.
டால்பி விஷன் (Dolby Vision) சப்போர்ட் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Elite Gen 5 3nm) ப்ராசஸர் கிடைக்கிறது. மேலும், அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் ஆக்ஸிஜன்ஓஎஸ் 16.0 ( OxygenOS 16.0) கொடுக்கப்பட்டு உள்ளது.
13 எம்பி ரியர் கேமராவை இந்த ஒன்பிளஸ் பேட் 4 கொடுத்துள்ளது. முன்பக்கத்தில் 8 எம்பி கேமரா கிடைக்கிறது. பிரீமியம் ஸ்டீரியோ அனுபவம் கொடுக்கும்படி 8 ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இதற்கு ஹை-ரெஸ் ஆடியோ சப்போர்ட் உள்ளது. மேலும், 2 மைக்ரோபோன்கள் வருகின்றன. 67W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 13380mAh பேட்டரி கிடைக்கிறது. 672 கிராம் எடை உள்ளது.


Click it and Unblock the Notifications